Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

இறுதிக்கட்ட படபிடிப்பில் நடிகர் சிம்ஹாவின் 'தடை உடை'

விரைவில் நிறைவடையவிருக்கும் நடிகர் சிம்ஹாவின் ‘தடை உடை’ படபிடிப்பு

Posted on August 21, 2022 By admin

சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற நடிகர் சிம்ஹாவின் புதிய திரைப்படமான ‘தடை உடை’ எனும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவிருக்கும் சூழலில், இப்படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் நடிகை ரோகிணி, தன்னுடைய பங்களிப்பை நிறைவு செய்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் என். எஸ். ராகேஷ் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் ‘தடை உடை’. இதில் நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மிஷா நரங்க் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் பிரபு, செந்தில், நடிகை ரோகிணி, மணிகண்ட பிரபு, சரத் ரவி, ‘பழைய ஜோக்’ தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹதீஃப் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரேஷ்மி சிம்ஹா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முழுமையாக நிறைவு பெறவிருக்கிறது. இந்நிலையில் நடிகை ரோகிணி தொடர்புடைய காட்சிகளின் படபிடிப்பு நிறைவடைந்ததை முன்னிட்டு, படக் குழுவினர் நடிகை ரோகிணியுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

Cinema News Tags:இறுதிக்கட்ட படபிடிப்பில் நடிகர் சிம்ஹாவின் 'தடை உடை'

Post navigation

Previous Post: சீதாராமம்’ படத்துடன் லைகா இணைந்தது பெருமையாக உள்ளது: லைகா தமிழ்க்குமரன்
Next Post: அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் ஒரு மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்த துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’

Related Posts

AVATAR: THE WAY OF WATER JAMES CAMERON’S AVATAR: THE WAY OF WATER IS THE NO 1 CHOICE FOR AUDIENCES ACROSS THE GLOBE, COLLECTS!! Cinema News
நடிகை வரலட்சுமி கொரோனா பரவலைத் தடுக்ககும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி-indiastarsnow.com நடிகை வரலட்சுமி சரத்குமார் கொரோனா பரவலைத் தடுக்ககும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி!! Cinema News
Prime Video Reveals First-Look Images and Premiere Date for Groundbreaking Global Spy Series Citadel, Starring Richard Madden and Priyanka Chopra Jonas, With Stanley Tucci and Lesley Manville Cinema News
kalyana-veedu-indiastarsnow.com கல்யாண வீடு சீரியல் தற்போது யூடியூப்பில் பார்க்க முடியாது Cinema News
ஆறு மொழிகளில் உருவாகும் 'மட்டி' திரைப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது! ஆறு மொழிகளில் உருவாகும் ‘மட்டி’ திரைப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது! Cinema News
ரஜினிகாந்தின் அண்ணனான சத்தியநாராயணன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme