Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

விருமனி'ன் வசூல் சாதனைக்காக பட குழுவினருக்கு வைரக்காப்பு பரிசு

விருமனி’ன் வசூல் சாதனைக்காக பட குழுவினருக்கு வைரக்காப்பு பரிசு

Posted on August 21, 2022August 21, 2022 By admin

கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இதனால் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன், படத்தின் நாயகன் கார்த்தி, படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு வைரத்தினாலான காப்பை பரிசாக வழங்கி மகிழ்ந்தார். அத்துடன் ‘விருமன்’ படத்தை இயக்கிய இயக்குநர் முத்தையாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்து கௌரவித்தார்.

‘விருமன்’ படம் வெளியான ஐந்து நாட்களில் உலக அளவில் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, வசூல் சாதனை படைத்து வருகிறது. இதனை கொண்டாடும் வகையில் நேற்று சென்னையில் வெற்றி விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யாவிற்கும், இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியனுக்கும், படத்தின் நாயகனான கார்த்திக்கும் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டிருக்கும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் வைரக்காப்பினை பரிசாக அளித்தார். இந்த படத்தின் இயக்குநரான முத்தையாவிற்கும் வைர மோதிரத்தை பரிசளித்து உற்சாகப்படுத்தினார்.

நடிகர் சூர்யா ‘விக்ரம்’ படத்தில் நடித்ததற்காக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களிடமிருந்து விலையுயர்ந்த ரோலக்ஸ் கைகடிகாரத்தை பரிசாக பெற்றிருந்தார் என்பதும், தற்போது ‘விருமன்’ படத்திற்காக விநியோகஸ்தர் சக்திவேலனிடமிருந்து வைர காப்பினை பரிசாக பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Cinema News Tags:விருமனி'ன் வசூல் சாதனைக்காக பட குழுவினருக்கு வைரக்காப்பு பரிசு

Post navigation

Previous Post: SS Rajamouli protégé Ashwin Gangaraju to direct magnum opus 1770 created by Ram Kamal Mukherjee.
Next Post: Prime Video’s The Lord of the Rings: The Rings of Power Asia Pacific Premiere Tour commences with a bang!

Related Posts

Indhuja Exclusive Photoshoot Stillsindiastarsnow.com Actress Indhuja Exclusive Photoshoot Stills Cinema News
துரிதம் துரிதம் படப்பிடிப்பு 40 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து நடத்திய படக் குழு..! Cinema News
சினம்” படத்தின் வெளியீட்டை முன்னிட்டு 3 நாள் தமிழ்நாடு சுற்றுலாவில், ரசிகர்களின் பேரன்பில் மிதந்த நடிகர் அருண் விஜய்!! சினம்” படத்தின் வெளியீட்டை முன்னிட்டு 3 நாள் தமிழ்நாடு சுற்றுலாவில், ரசிகர்களின் பேரன்பில் மிதந்த நடிகர் அருண் விஜய்!! Cinema News
சரவணன் மீனாட்சி கவின் விஜய் டிவியின் 40 குடும்பங்களை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்தவராம் !! சரவணன் மீனாட்சி கவின் விஜய் டிவியின் 40 குடும்பங்களை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்தவராம் !! Cinema News
Prime Video’s The Lord of the Rings Prime Video’s The Lord of the Rings Cinema News
ஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது - நடிகர் இனிகோ பிரபாகர் ஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme