Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

மேதகு-2

மேதகு-2

Posted on August 21, 2022 By admin

கடந்த 2021 ஜூன் மாதம் தமிழீழ தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான மேதகு படம் வெளியானது. தற்போது, அதன் இரண்டாம் பாகமாக, மேதகு திரைக்களம் சார்பில் தயாரிப்பாளர்களே இல்லாமல் ‘மேதகு-2’ படம் தயாராகியுள்ளது.

தஞ்சாவூரை சேர்ந்த தஞ்சை குகன் குமார், அயர்லாந்தில் உள்ள கவிஞர் திருக்குமரன் மற்றும் டென்மார்க்கை சேர்ந்த சுமேஷ் குமார் ஆகியோர் இதன் தயாரிப்பு நிர்வாகிகளாக செயல்பட்டு இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

கதாநாயகனாக தமிழீழ தலைவர் கதாபாத்திரத்தில் கௌரிசங்கர் நடித்துள்ளார். கௌரவத் தோற்றத்தில் நாசர் நடித்துள்ளார்.

இரா.கோ யோகேந்திரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதை மற்றும் வரலாற்று ஆய்வில் மேதகு திரைக்கள குழுவினருடன் சுபன் முன்னின்று உதவி புரிந்துள்ளார்.

இசையமைப்பாளர் பிரவின் குமார், ஒளிப்பதிவாளர் வினோத் ராஜேந்திரன், படத்தொகுப்பு ஆதித்யா முத்தமிழ் மாறன் (குவியம் ஸ்டுடியோ) கலை இயக்குனர் இன்ப தினேஷ், சண்டை பயிற்சி ஜாக்குவார் தங்கம் மற்றும் அவரது மகன் விஜய் ஜாக்குவார் தங்கம், பாடகர்கள் சைந்தவி, புதுவை சித்தன் ஜெயமூர்த்தி என இந்தப்படத்தின் தொழில்நுட்ப குழுவும் மிகப்பெரிய பங்களிப்பை இந்தப்படத்திற்காக வழங்கியுள்ளனர்.

வரும் ஆகஸ்ட்-19ஆம் தேதி இந்த படம் வெளிநாட்டு திரையரங்குகளில் உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது. இப்போதே ஐரோப்பா நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா ஆகியவற்றில் முன்பதிவு துவங்கியுள்ளது.

தியேட்டர்களில் படம் வெளியான சில நாட்களிலேயே தமிழ்ஸ் ஓடிடி தளத்தில் (www.tamilsott.com) இந்த படம் வெளியாக இருப்பதால், படத்தை திரையிட முடியாத இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் அரபு நாடுகள் ஆகியவற்றில் உள்ள மக்களும் இந்தப்படத்தை பார்க்க முடியும்.

—

Thanks & Regards

Cinema News Tags:மேதகு-2

Post navigation

Previous Post: WayCool creates 7500+ sqft tricolor with fresh vegetables
Next Post: Shri Shankarlal Sundarbai Shasun Jain College for Women has entered Asia Book of Records & India Book of Records

Related Posts

தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகை லக்‌ஷ்மி மஞ்சு தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகை லக்‌ஷ்மி மஞ்சு Cinema News
VELLIMALAI” TEASER REVEALED VELLIMALAI” TEASER REVEALED Cinema News
விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியீடு விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியீடு Cinema News
ஆஹா தமிழுடன் இணைந்து டி கம்பெனி தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் ஆஹா தமிழுடன் இணைந்து டி கம்பெனி தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் Cinema News
ATHARVAA MURALI upcoming Film TRIGGER ATHARVAA MURALI upcoming Film TRIGGER Cinema News
மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில் தயாராகும் 'டைகர் நாகேஸ்வரராவ்' படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் அனுபம் கேர் மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில் தயாராகும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் அனுபம் கேர் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme