Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பார்வையாளர்களை அசத்திய ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் ஹாலிவுட் பிரபலங்கள்

‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் பிரத்யேக காட்சிக்காக ஒன்றுதிரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்

Posted on August 21, 2022 By admin

‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் ஆசிய பசிபிக் பிராந்திய பிரீமியர் மும்பையில் நடைபெற்றது. இதில் பார்வையாளர்களுடன் பாலிவுட் திரையுலகின் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் பிரத்யேக காட்சிக்கு முன்னர் நடைபெற்ற சிவப்பு கம்பள வரவேற்பில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷன், தமன்னா, கபீர் கான், நிகில் அத்வானி உள்ளிட்ட பலர், தொடரின் தயாரிப்பாளரான ஜே டி பெயின் உடன் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் கவர்ந்தனர்.

‘த லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: ரிங்ஸ் ஆஃப் பவர்’ அமேசான் ப்ரைம் வீடியோவில் செப்டம்பர் இரண்டாம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளுடன், ஆங்கிலம் உள்ளிட்ட பல சர்வதேச மொழிகளிலும் வெளியாகிறது.

மும்பை இந்தியா ஆகஸ்ட் 19 2022. உலகளாவிய பார்வையாளர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் சாகசமும், கற்பனையும் கலந்த காவிய நாடகத் தொடரான ‘ தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ எனும் தொடரின் வெளியீட்டிற்கு முன்னர் பிரைம் வீடியோ, மும்பையில் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பிரீமியர் எனப்படும் பிரத்யேக காட்சியை திரையிட்டது. இந்நிகழ்வில் தொடரி நடித்திருக்கும் நடிகர்களான ரோப் அராமாயோ, மாக்ஸிம் பால்ட்ரி, மார்க்வெல்லா கவென்கா, சார்லஸ் எட்வர்ட்ஸ்,லாயிட் ஓவென்,மேகன் ரிச்சர்ட்ஸ், நஸானின் போனியாடீ, ஈமா ஹோர்வொர்த்,தைரோ முஹாப்ஃதீன், சாரா ஸ்வான்கோபானியந்த் உள்ளிட்ட பலர், தயாரிப்பாளர் ஜே டி பெய்ன் உடன் கலந்து கொண்டனர். இந்த பிரத்யேக பிரீமியர் திரையிடல், திரை உலகினரை கவர்ந்தது. ஏனெனில் நடிகர்கள் மற்றும் பட குழுவினர், சிவப்பு கம்பள வரவேற்புக்கு முன் மும்பை திரையுலக பாணியில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட ஆட்டோ ரிக்ஷாவில் பயணித்து, அரங்கத்தினுள் நுழைந்தனர். இதில் ஹிருத்திக் ரோஷன், தமன்னா, கபீர் கான், நிகில் அத்வானி, பாணி ஜே, ரசிகா துக்கல், சயானி குப்தா, மான்வி சுக்ரூ, ஜிம் ஸர்ப் என திரை உலகில் பிரபலமான கலைஞர்கள் கலந்து கொண்டனர். அரங்கம் நிரம்பி வழிந்த பார்வையாளர்களின் விண்ணை முட்டும் கரவொலியுடன், இந்த தொடரின் தயாரிப்பாளர் ஜேடி பெய்னின் முன்னுரையுடன் பிரீமியர் திரையிடல் தொடங்கியது.

லாஸ் ஏஞ்சல்ஸ், மெக்சிகோ சிட்டி மற்றும் லண்டனில் நடைபெற்ற இந்த தொடருககான பிரத்யேக பிரீமியர்களை தொடர்ந்து உலகளாவிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக தி லார்ட் ஆஃப் ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவரின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பிரீமியர் மும்பையில் நடைபெற்றது. அமேசான் ஒரிஜினல் தொடரான ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ செப்டம்பர் இரண்டாம் தேதியன்று இரண்டு அத்தியாயங்கள் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.. அன்று முதல் வாரந்தோறும் புதிய அத்தியாயங்கள் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட பல சர்வதேச மொழிகளிலும் வெளியாகிறது.

Cinema News Tags:அலங்கரிக்கப்பட்ட ஆட்டோரிக்ஷாக்களில் வலம் வந்த திரையுலக நட்சத்திரங்கள், தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ பாதிப்பில் உருவானது தான் 'கிரீஷ்'- ஹிருத்திக் ரோஷன் அதிரடி பேச்சு, பார்வையாளர்களை அசத்திய ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் ஹாலிவுட் பிரபலங்கள்

Post navigation

Previous Post: தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ பாதிப்பில் உருவானது தான் ‘கிரீஷ்’- ஹிருத்திக் ரோஷன் அதிரடி பேச்சு
Next Post: The Lord of the Rings: The Rings of Power Mega Asia Pacific Premiere in Mumbai Sees Record Attendance from Fans and B-town Celebs Alike

Related Posts

Kaappaan - Siriki Video | Suriya, Sayyeshaa | Harris Jayaraj, K V Anand காப்பான்’ படத்தில் சிறுக்கி பாடலின் வீடியோ இதோ… Cinema News
ஆதித்ய வர்மா படத்துக்கு ஒரு சாங் எடுத்திய நடிகர் சிவகார்த்திகேயன் ஆதித்ய வர்மா படத்துக்கு ஒரு சாங் எடுத்திய நடிகர் சிவகார்த்திகேயன் Cinema News
Amala Paul starrer “The Teacher” trends with heavy appreciation!! Cinema News
போஸ்ட் அபோகலிப்டிக் திரில்லரான ‘கலியுகம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு Cinema News
ஜூலை 15 ஆம் தேதி இந்தியாவில் சில பகுதிகளில் திரையரங்கங்கள் திறக்க மத்திய அரசு அனுமதி ஜூலை 15 ஆம் தேதி இந்தியாவில் சில பகுதிகளில் திரையரங்கங்கள் திறக்க மத்திய அரசு அனுமதி!!!!! Cinema News
இனி ஒரு காதல் செய்வோம்” திரைப்படத்தை !! இனி ஒரு காதல் செய்வோம் திரைப்படத்தை !! Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme