Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

விளையாட்டு வீரர்களை வாழ்த்தும் பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ்

காமன் வெல்த் விளையாட்டில் பதக்கங்களை வென்றெடுத்தவர்களை பாராட்டும் பிரபாஸ்

Posted on August 21, 2022 By admin

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று, பதக்கங்களை வென்றெடுத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பான் இந்திய சூப்பர் ஸ்டாரான நடிகர் பிரபாஸ் வாழ்த்துகளுடன் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்திருக்கிறார்.

‘பாகுபலி’ படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமாகி, பான் இந்திய சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றவர் ‘ டார்லிங்’ நடிகர் பிரபாஸ். சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வரும் இவரை கோடிக் கணக்கிலான பார்வையாளர்கள் பின் தொடர்கிறார்கள். சமூக முன்னேற்றம், சமூக நல்லிணக்கம், தேச பக்தி, தேசப்பற்று போன்ற விசயங்களில் தன்னுடைய முதன்மையான நேர்மறை விமர்சனத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் இவர், இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்ஹாம் எனும் இடத்தில் நடைபெறும் 70-க்கும் மேற்பட்ட காமன்வெல்த் நாடுகள் கலந்து கொண்ட 22 வது காமன்வெல்த் போட்டிகளில், இந்தியா சார்பில் இடம்பெற்ற வீரர் வீராங்கனைகளில், தங்கப்பதக்கம், வெள்ளி பதக்கம், வெண்கலம் பதக்கம் வென்ற அறுபதுக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகளின் பதக்க பட்டியலின் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது…
” எங்களை பெருமைப்படுத்தியதற்காகவும், நமது தேசத்திற்கு பெருமை சேர்த்ததற்காகவும் அனைத்து சாம்பியன்களுக்கும் வாழ்த்துக்கள். உங்களுடைய அர்ப்பணிப்பிற்கும், உழைப்பிற்கும் நன்றி!!” என பதிவிட்டிருக்கிறார்.

விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நன்றி தெரிவித்து வாழ்த்தியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனிடையே அண்மையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியான தேசபக்தியை மையப்படுத்திய ‘ ஹர் கர் திரங்கா..’ எனத் தொடங்கும் பாடலில் விளையாட்டுத்துறை மற்றும் திரையுலக துறையிலிருந்து ஏராளமான ஆளுமைகள் இடம்பெற்றனர். அதில் பிரபாசும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பான் இந்திய சூப்பர் ஸ்டாரான பிரபாஸ் தற்போது இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் ‘ப்ராஜெக்ட் கே’ எனும் படத்திலும், இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதி புருஷ்’ எனும் படத்திலும், ‘கே ஜி எஃப்’ பட புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படங்கள் அனைத்தும் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளிலும் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Cinema News Tags:காமன் வெல்த் விளையாட்டில் பதக்கங்களை வென்றெடுத்தவர்களை பாராட்டும் பிரபாஸ், விளையாட்டு வீரர்களை வாழ்த்தும் பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ்

Post navigation

Previous Post: 25 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த ‘சீதா ராமம்’
Next Post: ஐந்து நாட்களில் 33 கோடி ரூபாய் வசூலித்து சாதனை செய்த ‘சீதா ராமம்’

Related Posts

டாக்டர் சிவராஜ் குமார், கார்த்திக் அத்வைத், சுதீர் சந்திர பாதிரியின் புதிய திரைப்படம் 'சிவண்ணா எஸ்சிஎஃப்சி01' (#ShivannaSCFC01) பான் இந்தியா படமாக உருவாகிறது Dr Shivaraj Kumar, Karthik Adwaith, Sudheer Chandra Padiri’s #ShivannaSCFC01 Announced Cinema News
Filmmaker Lokesh Kanagaraj’s friendly gesture of operating the clapboard for the first shot நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது Cinema News
*ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ‘லெவன்’* Cinema News
இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகர் நவாசுதீன் சித்திக் இணைந்து நடித்துள்ள, ரிவென்ஜ் டிராமா ‘ஹட்டி’ திரைப்படம் ZEE5 தளத்தில் வெளியாகிறது !! இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகர் நவாசுதீன் சித்திக் இணைந்து நடித்துள்ள, ரிவென்ஜ் டிராமா ‘ஹட்டி’ திரைப்படம் ZEE5 தளத்தில் வெளியாகிறது !! Cinema News
மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் – இணைந்து வழங்கும் கற்பனைக்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் திரைப்படம் – மெகா157 #Mega157 படத்தின் ஆரம்பகட்ட பணிகள் இனிதே துவங்கியது !! Cinema News
நடிகர் சூர்யா பிரபல தெலுங்கு பட இயக்குனர் பி.வி.எஸ்.ரவி மற்றும் கதாசிரியர் கோபி மோகனை சந்தித்துள்ளார் நடிகர் சூர்யா பிரபல தெலுங்கு பட இயக்குனர் பி.வி.எஸ்.ரவி சந்தித்துள்ளார் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme