சீதா ராமம்’ படத்தின் கதை 1964-ம் ஆண்டு நடப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது. உறவுக்கு யாரும் இல்லாத ராம் என்ற ராணுவ வீரரின் வாழ்க்கையே சீதா ராமம். விடுமுறைக்கு செல்ல வீடே இல்லாத ராணுவ வீரனின் ஒரு செயல், நாட்டில் பல உறவுகளை பெற்றுக்கொடுக்கிறது. அதில் ராமின் மனைவி சீதா என்ற பெயரில், முகவரி இல்லாத கடிதம் வருகிறது.
தனது தாத்தா கொடுத்த கடிதம் ஒன்றை இந்தியாவில் இருக்கும் சீதா மகாலட்சுமியிடம் (மிருனாளின் தாக்கூர்) கொடுக்க வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஆஃப்ரீனுக்கு (ராஷ்மிகா மந்தனா) வந்து சேர்கிறது. அதனால் சீதா மகாலட்சுமியைத் தேடி இந்தியா வருகிறார் ஆஃப்ரீன். அவரைத் தேடி அலையும் ஆப்ரீனுக்கு சீதா – ராம் காதல் கதை அறிமுகமாகிறது. யார் இந்த சீதா – ராம்? அவர்களின் காதல் கதை என்ன? அந்தக் கடித்தத்தில் என்ன இருக்கிறது? இறுதியில் அந்தக் கடிதம் சீதாவிடம் கொடுக்கப்பட்டதா? இல்லையா? – இவற்றைச் சொல்லும் படம் தான் ‘சீதா ராமம்’.
ஓர் இனிமையான காதல் கதையை,ராணுவப் பின்னணியில் சுகமாக செதுக்கியுள்ளார் இயக்குநர் ஹனு ராகவபுடி. அதற்கு ஆழமாக உதவுகிறது, ஆச்சரியமான திருப்பங்கள் கொண்ட அவரது திரைக்கதை. முதல் பாதி சற்று நெளிய வைத்தாலும் இரண்டாம் பாதி, இழுத்துப் பிடித்து அமரவைத்துவிடுகிறது.
இந்நிலையில், பயங்கரவாதியைக் கொல்வதற்காக, நாட்டின் எல்லை தாண்டுகிறார் ராம். அவர் திரும்பி வந்தாரா? சீதாயார்? என்பது பிளாஷ்பேக்கில் விரிய, காதல் மனைவிக்காக 20 ஆண்டுகளுக்கு முன் ராம் எழுதிய கடிதத்தை கொடுக்க வரும் அஃப்ரீத் யார்? என்பதை சுவாரஸ்யமாக சொல்கிறது ‘சீதா ராமம்’.