லெஜண்ட் சரவணன் நடிகராக அறிமுகமாகும் படம். சினிமா மீதுள்ள மோகத்தின் காரணமாக, முதல் படத்தையே கோடிகளை கொட்டி எடுத்திருக்கிறார்.நாயகன் அருள் சரவணனை நம்பியே முழு திரைக்கதையும் நகரும் நிலையில் நாயகிகள் ஊர்வசி ரவுடேலா, கீதிகா திவாரி இருவரும் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். காமெடியனாக வரும் நடிகர் விவேக் (அவரது இறுதிப்படம்) வழக்கமான தனது நடிப்பை வெளிப்படுத்த தவறவில்லை. அவருக்கு மட்டும் லைவ் ஆடியோ கொடுக்கப்பட்டுள்ளது. தவிர, யோகிபாபு, ரோபோ சங்கர், பிரபு, விஜயகுமார், லிவிங்க்ஸ்டன், சுமன், மன்சூர் அலிகான், திவ்ய தர்ஷினி, முனிஷ்காந்த், அனைவரும் கதாபாத்திரத்துக்கு தகுந்த நடிப்பை பதிவு செய்துள்ளனர்
நிரிழிவு நோய்க்கு மருந்து கண்டுபிடித்து நாட்டுமையாக்க போராடும் நாயகனின் கதைதான் படத்தின் ஒன்லைன். புகழ் பெற்ற விஞ்ஞானி அருள் சரவணன் தனக்கு வரும் பல உயரிய பதவிகளை புறந்தள்ளிவிட்டு, தன் நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என எண்ணி சொந்த ஊர் திரும்புகிறார். அங்கு நிகழும் அவருக்கு நெருக்கமான ஒருவரின் இழப்பு, சரவணனை நீரிழிவு நோய்க்கான நிரந்தர மருந்தை கண்டுபிடிக்கத் தூண்டுகிறது. அதற்கான முயற்சியில் அவர் இறங்க, இறுதியில் அந்த மருந்தை அவர் கண்டுபிடித்தாரா? அதற்கு தடையாக இருக்கும் மருந்து மாஃபியா கும்பல் அவரை என்ன செய்தது? இதையெல்லாம் சமாளித்த டாக்டர் சரவணன் எப்படி ‘தி லெஜண்ட்’ சரவணன் ஆனார் என்பது தான் படத்தின் திரைகதை.
நாயகன் அருள் சரவணனை நடிப்பு ஒத்துழைக்கவில்லை. கண்ணீர் சிந்தி அழும் காட்சிகளிலும், எதிராளியிடம் கோபமாக வசனங்களை பேசும் காட்சியிலும், ரொமான்ஸ், காமெடி நடனம் என எல்லா இடங்களிலும் உணர்ச்சிகளின் வறட்சி தொக்கி நிற்பதை உணர முடிகிறது.
ஜேடி – ஜெர்ரி இருவரும் இணைந்து படத்தை கோர்வையில்லாமல் காட்சியமைப்புதான். படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு முழுப் படமாக நகராமல், தனிதனி சீன்களாக நகர்கிறது. ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத காட்சிகள்.
ஹீரோவின் நடிப்பும் சரி ரசிகர்களை கவரவில்லை. தேவையில்லாத பாடல்கள், சண்டை காட்சிகளுக்கு பதில் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.