Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” படத்தின் இரண்டாவது லுக் வெளியானது!

நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” படத்தின் இரண்டாவது லுக் வெளியானது!

Posted on July 25, 2022 By admin

இயக்குநர் CS அமுதன் இயக்கத்தில்,
நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” படத்தின் இரண்டாவது லுக் வெளியானது!

விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” படத்தின் பரபரப்பான இரண்டாவது லுக்கை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போலவே, இந்த இரண்டாவது லுக் வித்தியாசமானதாக, ஆர்வத்தை தூண்டும்படி அமைந்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் இந்தப் படத்திற்கு வலுவான தாக்கத்தையும் நல்ல எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திய நிலையில், இந்த புதிய லுக் அந்த எதிர்பார்ப்பை மேலும் வலுப்படுத்துகிறது.

இயக்குனர் CS.அமுதன் கூறுகையில்..,
‘ரத்தம்’ படம் இதுவரை தமிழ் திரையில் சொல்லப்படாத கதையை விவரிக்கும் ஒரு க்ரைம் டிராமா. இத்திரைப்படம் நாம் தினமும் பார்க்கும் ஒன்றை தான் முன்வைக்கிறது, ஆனால் சமூகத்தில் அது ஏற்படுத்தும்
தாக்கத்தை நாம் ஒரு போதும் உணரவில்லை என்பதே உண்மை.

‘ரத்தம்’ படத்தை CS அமுதன் இயக்கியுள்ளார் மற்றும் Infiniti Film Ventures சார்பில் கமல் போரா, பங்கஜ் போரா, G.தனஞ்செயன், B.பிரதீப், ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், நகைச்சுவை நடிகர் ஜெகன், நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், கலை ராணி, மகேஷ் (Family man புகழ்), OAK சுந்தர், மீஷா கோஷல் மற்றும் அமேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘தமிழ்ப் படம்’ புகழ் கண்ணன் இசையமைக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார், சுரேஷ் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். CS அமுதன் & குழுவினரின் ‘தமிழ்ப் படம்’ தொடரில் இருந்து ‘ரத்தம்’ மிகவும் வித்தியாசமானது. ஸ்பூஃப் அடிப்படையிலான திரைப்படங்களின் மூலம் இக்குழு நகைச்சுவையால் ரசிகர்களை மகிழ்வித்திருந்தாலும் இந்தப்படம் அதிலிருந்து மாறுபட்டு ஒரு அட்டகாசமான க்ரைம் திரில்லர் படமாக இருக்கும்

இப்படத்தின் போஸ்ட் பு‌ரடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் சிங்கிள் ரிலீஸ், ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகளவில் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Cinema News Tags:நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” படத்தின் இரண்டாவது லுக் வெளியானது!

Post navigation

Previous Post: Vijay Antony starrer Ratham Second Look revealed
Next Post: The Madras Murder Web Series update

Related Posts

கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் ‘பயில்’ பாடத்திட்டம் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் ‘பயில்’ பாடத்திட்டம் Cinema News
இன்று பட பூஜையுடன் தொடங்கிய சம்பவம் படப்பிடிப்பு ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ் இணைந்து நடிக்கும் இன்று பட பூஜையுடன் தொடங்கிய சம்பவம் படப்பிடிப்பு ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ் இணைந்து நடிக்கும் Cinema News
Kaalangalil Aval Vasantham MOVIE Audio Launch CELEBRATE SPEECH Cinema News
‘I am so glad to see Nikil’s growth as an actor’ says Producer T. Siva Powder Audio and Trailer Launch Event Cinema News
Samantha is a very dedicated & hard working actress - Unni Mukundan Samantha is a very dedicated & hard working actress – Unni Mukundan Cinema News
ஆஹா தளத்தில் பேட்டைக்காளி வெளியாகி வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து, இயக்குனர் ல.ராஜ்குமார் அறிக்கை ஆஹா தளத்தில் பேட்டைக்காளி வெளியாகி வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து, இயக்குனர் ல.ராஜ்குமார் அறிக்கை Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme