Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பார்த்தா’ சந்தானத்துக்காக பார்க்காமலே வாங்கிய படம் ‘குலுகுலு’ உதயநிதி கலகல

பார்த்தா’ சந்தானத்துக்காக பார்க்காமலே வாங்கிய படம் ‘குலுகுலு’ உதயநிதி கலகல

Posted on July 24, 2022July 24, 2022 By admin

சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ராஜ் நாராயணன் தயாரிப்பில், ’மேயாத மான் ’படப்புகழ் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “குலுகுலு”. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் மாறுபட்ட களத்தில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்ததோடு பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.. வரும் ஜூலை 29 படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..

கலை இயக்குனர் ஜாக்கி கூறியதாவது..,
“இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் டிரீட்டாக இருக்கும். படத்தின் ஸ்கிர்ப்ட் மிக தெளிவாக இருந்தது. கலை இயக்கத்திற்கான அனைத்து விவரங்களும் திரைக்கதை புத்தகத்திலேயே இருந்தது. படத்தின் தரத்தை இசை மேம்படுத்தியுள்ளது. படம் உங்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும்”

இயக்குனர் ரவிகுமார் கூறியதாவது..,
“ரத்னகுமார் எடுக்கும் ஒவ்வொரு படமும், ஒவ்வொரு வகையாக இருக்கும். அவருடைய எழுத்து என்னை ஆச்சர்யப்படுத்தும். படத்தின் இசை சிறப்பாக உள்ளது. ஒரு குழுவாக இணைந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். கண்டிப்பாக இந்த படம் உங்களுக்கு பிடிக்கும்.

லைகா புரொடக்ஷன் தமிழ்க்குமரன் கூறியதாவது..,
“ சந்தானம் எங்களது திரைப்பயணத்தில் பெரிய உதவியாய் இருந்திருக்கிறார். இந்த படத்தை விநியோகம் செய்யவிருக்கும் ரெட்ஜெயண்ட்க்கு எனது வாழ்த்துகள். இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்

ஃபைவ் ஸ்டார் கதிரேசன் கூறியதாவது..,
படத்தின் இசை சிறப்பாக உள்ளது. பாடல்களும், டீசரும் மக்களை ஈர்க்கும் வகையில் இருக்கிறது. சந்தோஷ் நாராயணனனுக்கு எனது வாழ்த்துகள். இயக்குனருக்கும், நடிகர் சந்தானத்துக்கும் எனது வாழ்த்துகள். படம் கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும். உதயநிதி சார் திரைத்துறைக்கு பலமாக இருக்கிறார். அவரது விநியோகத்தில் படம் கண்டிப்பாக வெற்றியடையும்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறியதாவது..,
“ நான் வேலைபார்த்த படங்களில் இந்த படம் எனக்கு மிகவும் பிடித்தமான படம். இயக்குநரிடம் ஒரு புத்துணர்வான எழுத்து வடிவம் இருக்கிறது. என்னை இந்த படத்தில் சுதந்திரமாக வேலை பார்க்க அனுமதித்தார். ரத்னகுமாருக்கு தமிழ் சினிமாவில் பெரிய இடம் இருக்கிறது. இந்த படத்தை வெளியிட முடிவு செய்த உதயநிதி சாருக்கு நன்றி. சந்தானம் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இந்த படம் எனது இண்டிபெண்டண்ட் ஆல்பமாக இருக்கும். இந்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான படமாக இருக்கும். “

இயக்குனர் ரத்னகுமார் கூறியதாவது..,
“ நான் படம் இயக்கி மூன்று வருடங்கள் கடந்து விட்டது. இந்த படம் நான் நினைத்தபடி உருவாக சந்தானம் சார் தான் காரணம். இந்த படத்தின் கதையை நம்பி அவர் உள்ளே வந்தார். அவருக்கு பலவிதமான லுக் டெஸ்ட்களை செய்தோம், சந்தானம் சார் அர்ப்பணிப்போடு பணிபுரிந்தார். படத்தின் கதாபாத்திரத்தில் இருந்து வெளியே போகாமல் இருப்பார். இந்த படத்திற்காக இயக்குனர் ரவிக்குமார், மடோனா அஸ்வின், லோகேஷ் கனகராஜ் என பல நண்பர்கள் உதவியுள்ளனர். அவர்களின் பங்கு இந்தப்படத்தில் இருக்கிறது. ஒரு முறை லோகேஷ் செட்டுக்கு வந்து பார்த்தபோது சந்தானம் சாரை அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. அந்தளவு சந்தானம் சார் லுக் மாறியிருந்தது. இந்த படம் கொஞ்சம் வித்தியாசமான படம், கதாபாத்திரங்கள் எல்லாம் வித்தியாசமாக இருக்கும். அதை சரியான திரைப்படமாக மாற்றியது சந்தோஷ் நாராயணன் தான். இந்த படத்தில் ஏழு பாடல்கள் இருக்கிறது. எல்லா பாடல்களும் உங்களுக்கு பிடிக்கும். இந்த படத்தில் ரெட் ஜெயண்ட் வந்த பிறகு படத்தின் வேகம் அதிகரித்துள்ளது. இந்த படம் மேஜிக்காக மாற காரணம் கலை இயக்குனர் ஜாக்கி. படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டர் இந்த படத்திற்கு பெரும் உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தின் வெற்றிக்கு அனைவரும் காரணம். அனைவருக்கும் நன்றி.

நடிகர் சந்தானம் கூறியதாவது..
இந்த படத்தை பார்த்து உதயநிதி கொடுத்த பரிந்துரைகள் ஒரு இயக்குநருக்கான பார்வையில் இருந்தது. இந்த படத்தை வெளியிட பெரும் உதவியாய் இருந்தார். இந்த கதையை ரத்னகுமார் கூறும் போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்றைக்கு தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் எதிர்பார்ப்பது இந்த படத்தில் இருக்கும். சந்தோஷ் நாராயணன் எனக்கு செட்டாகும் இசையை ஹிட்டாகும்படி தந்திருக்கிறார். அவர் பாடல்கள் தான் எல்லா இடத்திலும் கேட்கிறது. இந்த படத்தில் ரத்னகுமார் கடின உழைப்பை போட்டுள்ளார். இவ்வளவு குறுகிய பட்ஜெட்டில், நிறையை இடங்களில் படம் எடுப்பது ரத்னகுமாரால் மட்டுமே முடியும். ரத்னா உடைய நட்பினால் ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் எல்லோரும் இந்த படத்தின் உள்ளே வந்தனர். ஒரு குழு முயற்சியாக இந்த படம் உருவாகப்பட்டுள்ளது. படம் எல்லோருக்கும் பிடிக்கும்

நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது…
நான் இங்கு வந்தது தயாரிப்பாளராக, நடிகராக அல்ல. எப்போதும் என் நண்பேண்டா பார்த்தா தான் சந்தானம். அவரால் தான் என்னை நடிகனாக மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். இந்த படம் நான் பார்த்துவிட்டேன். படம் சிறப்பாக வந்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் ரத்னகுமார் எடுக்கிறார் என்பதால் படம் பார்க்காமலே, இந்த படம் சிறப்பான ஒன்றாக இருக்கும் என நம்பினேன். இந்த படத்தில் சந்தானம் தாண்டி அனைவரும் ரசிக்க வைத்துள்ளனர். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும். சந்தானம், ரத்னகுமார், தயாரிப்பாளரும் எனது வாழ்த்துகள். இந்த படம் கண்டிப்பாக சந்தானத்துக்கு ஒரு வெற்றிப்படமாக அமையும்.

இந்த படத்தில் சந்தானத்துடன் அதுல்யா சந்த்ரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், ‘லொள்ளு சபா‘ மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. இப்படம் ஜூலை 29 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Cinema News Tags:குலுகுலு’ தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான படம்”-சந்தோஷ் நாராயணன், குலுகுலு’படத்தில் லோகேஷ் கனகராஜின் பங்கு இருக்கிறது’- இயக்குநர் ரத்னகுமார், பார்த்தா’ சந்தானத்துக்காக பார்க்காமலே வாங்கிய படம் ‘குலுகுலு’ உதயநிதி கலகல

Post navigation

Previous Post: “ரங்கோலி” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது
Next Post: பொய்க்கால் குதிரை’ அனைவருக்கும் பிடிக்கும் பிரபுதேவா உற்சாகம்

Related Posts

சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வினு வெங்கடேஷ் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் ‘வுல்ஃப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது Cinema News
பிரத்யேக ஸ்டைலில் ஆடை அணிந்ததற்காக பாராட்டுகளை குவிக்கும் ராம் சரண் பிரத்யேக ஸ்டைலில் ஆடை அணிந்ததற்காக பாராட்டுகளை குவிக்கும் ராம் சரண் Cinema News
A multi-lingual film, it stars Jackie Shroff, Sunny Leone, Priyamani, and Sara Arjun in main roles. Quotation Gand will be had hard-hitting realistic engaging story, says director Vivek K Kannan. Cinema News
A Short Film contest-indiastarsnow.com A Short Film contest Cinema News
Superstar Tom Holland reveals about shooting for action entertainer UNCHARTED அன்சார்டட் படத்திற்காக 17 முறை காரில் அடிபட்டேன் – ஹாலிவுட் நட்சத்திரம் டாம் ஹாலந்த் ! Cinema News
I believe “Ratchan” will receive same love and appreciation like my previous films Udhayam and Geethanjali – Actor Nagarjuna Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme