அறிமுக இயக்குநர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் வரும் ஜூலை 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தேஜாவு’. மதுபாலா, காளி வெங்கட், ராகவ் விஜய், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார்.
டிஜிபி ஆஷாவின் (மதுபாலா) மகளை ஒரு கும்பல் கடத்திவிடுகின்றனர். அது மீடியாக்களுக்கு தெரிந்து அதை பெரிதுபடுதுகின்றனர். மேலிடத்தில் இருந்து கடத்தல் சம்பவத்தை மறைக்க பார்க்கின்றனர். டிஜிபி ஆஷா அதற்க்கு தனிபிரிவு போலிஸ் ஆப்பிஸர் நியமிக்கிறார். அதன்படி போலிஸ் அதிகாரியாக விக்ரம் குமார் (அருள் நிதி) தனது விசாரணையை தொடங்கி, எழுத்தாளராக வரும் அசியுத்யிடம் விசாரணையை தொடங்குகிறார். அசியுத் எழுதும் கதைகள் நிஜத்தில் நடப்பது போல் காட்சிகள் இருக்கும். விக்ரம் குமார் இந்த விசாரனையில் டிஜிபி ஆஷா மகளை கண்டுபிடிக்கிறாரா? யார் அந்த கடத்தல் கும்பல்? டிஜிபிக்கும் கடத்தல் கும்பல்க்கும் இருக்கும் தொடர்பு என்ன? அருள் நிதி ஏன் இந்த விசாரனைக்கு வந்தார் அவருகும் கடத்தல் கும்பல் என்ன தொடர்பு? என்பதே படத்தின் மீதி கதை.
அறிமுக இயக்குனர் அரவிந்த் மிகவும் சிறப்பாகவே தனது முதல் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் வரும் திரில்லர் காட்சிகள் அதிகமாக சஸ்பன்ஸ் நிறைந்த கதையாக உருவாக்கியுள்ளார். படத்தின் ஒளிபதிவுவும், இசையும் கூடுதல் பலம் என்று சொல்லாம். பி.ஜி.முத்தையா தனது ஒளிபதிவை அழாகாக காட்சிபடுத்த பின்னணி இசையில் ஜிப்ரானும் அசத்தியுள்ளனர். படத்திற்க்கு ஏற்ப பின்னணி இசையும் கதை நகர்த்தி செல்கிறது. படத்தில் பாடல்கள், சண்டை காட்சிகளை தவிர்த்த இயக்குனர் அரவிந்த் படத்தை சுவாரசியம் குறையாமல் இயக்கிருகிறார். படம் பார்க்கும் பொழுது அதன் குறைகள் பெரிதாக வெளிபடவில்லை என்பதே நிதர்சனம்.
படத்தில் அருள் நிதி தனது சிறந்த நடிப்பை வெளிபடுத்திருக்கிறார். அவர் வரும் காட்சிகள் அனைத்தும் விறுவிருப்பாக நகர்ந்து செல்கிறது. அருள் நிதி தேர்வு செய்யும் கதைகள் சற்று மாறுபட்டே இருக்கும் அதே போல் இந்த படத்திலும் எதுவும் குறையாமல் பார்த்து கொண்டுள்ளார். திரில்லர் சஸ்பன்ஸ் கதைகளில் அருள் நிதி இந்த படம் ஒரு வெற்றி நிதர்சனம்.
படம் திரில்லர் ஜானரில் இருக்கிறது அதானல் படம் பார்ப்பதற்க்கு மிகவும் நன்றாகவும் விறுவிருப்பாக இருக்கிறது. இந்த மாதிரி கதை அம்சங்கள் தமிழ் சினிமாவில் நிறைய வந்துள்ளது என்றாலும் இந்த படம் சற்று மாறுதல் தான். படத்தை குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழ கூடிய வகையில் இருப்பது படத்திற்க்கு கிடைத்த வெற்றி.