Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சிவி2 திரை விமர்சனம்

சிவி2 திரை விமர்சனம்

Posted on July 22, 2022 By admin

கே.ஆர்.செந்தில் நாதன் இயக்கத்தில் கே.சுந்தர் தயாரிப்பில் 2007ம் ஆண்டு வெளியான படம் “சிவி”.
திகிலின் உச்சம் தொட்டு சக்கைபோடு போட்ட படம். மீண்டும் 15 ஆண்டுகள் கழித்து கே.ஆர்.செந்தில் நாதன் இப்படத்தின் தொடர்ச்சியை இயக்கியுள்ளார்.

ஆர் மாஸ் ப்ரோடக்ஷன்ஸ் சார்பாக லலிதா கஸ்தூரி கண்ணன் “சிவி-2” திரைப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் தேஜ் சரண்ராஜ், சுவாதி, யோகி, தாடி பாலாஜி, சாம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கதைப்படி..,

2007ல் வெளியான “சிவி” படத்தின் தொடர்ச்சி என்பதால். “சிவி” படத்தில் பேய் செய்த கொலையையும் அந்த ஆஸ்பத்திரியிலுள்ள அமானுஷ்யத்தையும் சில காலேஜ் ஸ்டுடண்ட்ஸ், மக்களிடம் யூட்யூப் லைவ் செய்து பணம் ஈட்ட நினைக்கிறார்கள்.

அப்போது இவர்களை இயக்கும் தேஜ் சரண்ராஜ் அவர்களுக்கே தெரியாமல் மாயாஜால வேலைகள் செய்து வியூஸ்களை அள்ளிவிடுகிறார். அப்போது அவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி தான் சிவி முதல் பாகத்தில் வரும் கதாபாத்திரம் “நந்தினி”.

தன் சாவுக்கு காரணமானவர்களை முதல் பாகத்திலே பழி வாங்கிய நந்தினி தற்போது வந்திருக்கும் மாணவர்களை என்ன செய்தார். அந்த மாணவர்கள் என்ன ஆனார்கள் என்பது தான் சுவாரஸ்யமான மீதிக்கதை…

இது வரை நம் கண்டிராத மிக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நின்றிருக்கிறார் நடிகர் சாம்ஸ்.

தேஜ் சரண்ராஜ் தனது பாத்திரத்தின் வலுவை அறிந்து
இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காட்சிக்கு தேவையான உடல் மொழியை கொண்டு நடித்தது கூடுதல் பலம்.

கதைக்கு பக்கபலமாய் கல்லூரி மாணவர்கள் கதாபாத்திரத்தில் நடித்த அத்தனை நடிகர்களும். அவர்கள் திகிலடைவது மட்டுமல்லாமல் நம்மையும் சேர்த்து திகிலடைய வைக்கிறார்கள்.

கிட்டதட்ட 15 ஆண்டுகள் கழித்து சீக்குவல் படம் இயக்க நினைத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள். கே.ஆர்.செந்தில் நாதனின் கதை தேர்வு சரியான ஒன்று.

மேலும், தற்போதுள்ள தொழில் நுட்பத்தில் “கோ ப்ரோ” கேமராவை வைத்து மட்டும் இயக்கிவிட்டு. மீதி படத்தை 2007ல் வெளியான சிவி படத்தின் எஃபெக்ட்களை பயன்படுத்தியது சீக்குவல் படத்திற்கு தேவையான ஒன்று என்பதை இயக்குனர் அறிந்துள்ளார்.

பி.எல். சஞ்சயின் ஒளிப்பதிவு பல காட்சிகளில் நம்மை மிரட்டியது. அவரின் கேமரா கோணம் அனைத்தும் திகில் படம் என்ற அச்சத்தில் நம்மை வைத்திருக்கும்.

மொத்தத்தில் சீக்குவல் படமாக வெளியாகும் பேய் படங்களின் மத்தியில் “சிவி-2” தனித்துவமான ஒரு இடத்தையே பெற்றுள்ளது. அனைத்து தரப்பினரும் குடும்பத்துடன் திரையரங்கில் பார்ப்பதற்கு சரியான தேர்வு இந்த “சிவி-2”.

Cinema News Tags:சிவி2 திரை விமர்சனம்

Post navigation

Previous Post: தேஜாவு திரைவிமர்சனம்
Next Post: Mahaveeryar Movie Review

Related Posts

மாயோன்’ பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்து வரும் பாராட்டு மாயோன்’ பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்து வரும் பாராட்டு Cinema News
வீட்டில் பணியாற்றும் ஊழியரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட சீயான் விக்ரம் வீட்டில் பணியாற்றும் ஊழியரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட சீயான் விக்ரம் Cinema News
லாஸ்லியாவின் அப்பா எந்த அளவுக்கு கேவலப்பட்டிருப்பார் Cinema News
தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கம் அறிமுக விழா தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கம் அறிமுக விழா Cinema News
நவீன் பொலிஷெட்டி, அனுஷ்காவின் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது நவீன் பொலிஷெட்டி, அனுஷ்காவின் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது Cinema News
சுருதிஹாசன் நிதானமான வாழ்க்கையை வாழ்கிறேன் சுருதிஹாசன் நிதானமான வாழ்க்கையை வாழ்கிறேன் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme