Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

'சீதா ராமம்' படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு

துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

Posted on July 21, 2022 By admin

நடிகர் துல்கர் சல்மான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சீதா ராமம்: எனும் படத்தில் இடம்பெற்ற மூன்றாவது பாடல் வெளியாகி இருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டிருக்கிறார்.

மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘சீதா ராமம்’ எனும் படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தானா அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளார். பி எஸ் வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். போர்க்கள பின்னணியில் காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி அஸ்வினி தத் வழங்குகிறார். இதனை ஸ்வப்னா சினிமா எனும் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணுக்குள்ளே…’ எனத் தொடங்கும் மூன்றாவது பாடல் வெளியாகி இருக்கிறது. இதனை சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டிருக்கிறார்.

காதல் உணர்வு ததும்பும் இந்த பாடலில் நடிகர் துல்கர் சல்மான் மற்றும் பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் ஆகிய இருவரும் காஷ்மீரின் பனி படர்ந்த பிரதேசத்தின் பின்னணியில் பயணித்துக் கொண்டே தங்களின் அன்பை பகிர்ந்து கொள்வது இளம் பார்வையாளர்களை வசீகரித்திருக்கிறது.

துல்கர் சல்மான், ரஷ்மிகா மந்தானா ஆகியோர் நடித்திருப்பதால் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘ சீதா ராமம்’ திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Cinema News Tags:சீதா ராமம்' படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு, துல்கர் சல்மானின் 'சீதா ராமம்' படத்தின் புதிய அப்டேட்

Post navigation

Previous Post: Legend Saravanan starrer ‘The Legend’ to release in five languages in more than 2500 theatres worldwide on July 28
Next Post: மாய சாகச உலகத்திற்கு அழைத்துச் செல்லும் ‘கார்த்திகேயா 2’

Related Posts

அயோக்யா’ படம் மூலம் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி Cinema News
Herewith i forward the press note pertaining to"Actress Nayanthara" Heartfelt Thank you note from Actress Nayanthara Cinema News
தளபதி64 டபுள் டமாக்கா.. அட்டகாசமான அப்டேட்களால் தளபதி64 டபுள் டமாக்கா.. அட்டகாசமான அப்டேட்களால் Cinema News
Troll Song from the film Banaras released with a punch line - Money doesn't Matter Troll Song from the film Banaras released with a punch line – Money doesn’t Matter Cinema News
கலையரசன் கோட் சூட், முறுக்கு மீசை கெத்து காட்டும் புகைப்படம் Cinema News
Enga Kulasamy-indiastarsnow.com ஆர்யா என்டர்டெய்ன்மெண்ட்’ என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘எங்க குலசாமி’ Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme