Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாகும் அமலா பாலின் ‘கடாவர்

டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாகும் அமலா பாலின் ‘கடாவர்’

Posted on July 21, 2022 By admin

**

முன்னணி நட்சத்திர நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்து, தயாரித்திருக்கும் ‘கடாவர்’ எனும் திரில்லர் திரைப்படம், டிஸ்னி +ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது.

மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘கடாவர்’. இதில் நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ் நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதி இருக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கிரைம் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்க, ஷான் லோகேஷ் பட தொகுப்பாளராக பணியாற்றிருக்கிறார்.

கடாவர்- முதுகுத்தண்டை சில்லிடச் செய்து, ரத்தத்தை உறையச் செய்யும் க்ரைம் திரில்லர் திரைப்படம். கொலை வழக்கு ஒன்று போலீஸ் உயரதிகாரி விஷால் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது. இதில் தடயவியல் துறை நிபுணராக பத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை அமலா பால் நடிக்கிறார். மர்மமான முறையில் கொலைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கான விசாரணையை மேலும் விரைவுபடுத்தி, வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கும் தருணத்தில், தடயவியல் துறை நிபுணரான பத்ரா கொலைக்கான பின்னணியையும், கொலைகாரனையும் கண்டறிகிறார்.

டிஸ்னி+ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளம்- தற்போது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக திகழ்கிறது. இந்த டிஜிட்டல் தளம், இந்தியர்கள் தங்களின் பொழுதுபோக்கு அம்சங்களை பார்வையிடும் முறையை மாற்றி அமைத்திருக்கிறது. அவர்களுக்கு பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை இந்தியா முழுவதும் அனைவரும் கண்டு ரசிக்கும் வகையிலான உள்ளடக்கத்துடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இயங்கி வருகிறது. இந்த டிஜிட்டல் தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், வங்காளம் என எட்டு மொழிகளில் 1,00,000 மணி நேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது. இதனுடன் உலக அளவில் நடைபெறும் முக்கிய விளையாட்டு நிகழ்வினையும் பிரத்யேகமாக அளிக்கிறது.

Cinema News Tags:டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாகும் அமலா பாலின் ‘கடாவர்’

Post navigation

Previous Post: Colors Tamil in Manthira Punnaghai to premiere on August 1, 2022 at 9:30 PM
Next Post: தி லெஜண்ட் திரைப்படம் உலகெங்கும் 28 ஜூலை அன்று ஐந்து மொழிகளில் 2500 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது

Related Posts

மாய சாகச உலகத்திற்கு அழைத்துச் செல்லும் 'கார்த்திகேயா 2' மாய சாகச உலகத்திற்கு அழைத்துச் செல்லும் ‘கார்த்திகேயா 2’ Cinema News
TOHOKU’ Photography Expo Comes to Chennai TOHOKU’ Photography Expo Comes to Chennai Cinema News
soundarya and vishagan சூப்பர்ஸ்டார் ரஜினி மக்களிடம் விலை உயர்ந்த பொருட்களை திருடி விட்டனர் Cinema News
A R Entertainment upcoming project pooja-indiastarsnow.com A R Entertainment upcoming project pooja Cinema News
Actress priya Bshankar latest pic-indiastarsnow.com Actress priya Bshankar latest pic Cinema News
பிரபல நடிகைக்கு விட்டுக்கொடுத்த பிரபாஸ் பிரபல நடிகைக்கு விட்டுக்கொடுத்த பிரபாஸ் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme