Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

நடிகர் ஜீவா நடிக்கும் வரலாறு முக்கியம் படத்தின் இரண்டாவது சிங்கிள் மல்லு கேர்ள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது!

நடிகர் ஜீவா நடிக்கும் “வரலாறு முக்கியம்” படத்தின் இரண்டாவது சிங்கிள் “மல்லு கேர்ள்” வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது!

Posted on July 18, 2022 By admin

நடிகர் ஜீவா நடிக்கும் “வரலாறு முக்கியம்” படத்தின் இரண்டாவது சிங்கிள் “மல்லு கேர்ள்” வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது!

நடிகர் ஜீவாவின் “வரலாறு முக்கியம்” திரைப்படத்திலிருந்து ஷான் ரஹ்மான் இசையமைத்து பாடியுள்ள இரண்டாவது சிங்கிள் டிராக் – ‘மல்லு கேர்ள்’ வெளியாகி, பரபரப்பான வெற்றியைப் பெற்றுள்ளது.

அனைத்து வகை ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகர் ஜீவா, தனது திரைப்படங்களின் மூலம் ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கை தருவதில் எப்போதும் தவறியதில்லை. அவரது முந்தைய படங்களைப் போலவே, அடுத்ததாக அவரது நடிப்பில் வரவிருக்கும் ‘வரலாறு முக்கியம்’ படத்தின் மீதும், ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. இப்படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலான – பொத்தி பொத்தி வளத்த புள்ள, பாடல் படம் 100% குடும்பங்கள் கொண்டாடும் பொழுதுபோக்கு திரைப்படம் என்பதை, உறுதிப்படுத்துவதாக இருந்தது. தற்போது இரண்டாவது சிங்கிளான – ‘மல்லு கேர்ள்’ பாடல், இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் தென்னிந்திய இசைத்துறையின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர், குறிப்பாக அவரது சார்ட்பஸ்டர் ஹிட்டான ‘ஜிமிக்கி கம்மல்’ ஒரே இரவில் வரலாறு காணாத வெற்றியடைந்தது. பெப்பியான இசை மற்றும் ஆற்றல்மிகு குரலுக்காக அவர் பரவலான பாராட்டுக்களை பெற்றுள்ளார். அதிரா A நாயரின் அட்டாகச குரலுடன் இணைந்து அவர் பாடியுள்ள இப்பாடல் பெரும் வசீகரமாக அமைந்துள்ளது. இம்மாதிரி பெப்பி பாடல்களில் ஜீவாவின் நடனம் மேலும் அழகானதாக இருக்கும். ஆகவே இப்பாடலின் விஷுவலை காண ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்து விட்டனர்.

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில், இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள வரலாறு முக்கியம் திரைப்படத்தில், ஜீவா மற்றும் காஷ்மீரா பரதேசி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரக்யா நாக்ரா, VTV கணேஷ், K.S.ரவிக்குமார், மொட்ட ராஜேந்திரன், ஷாரா சரண்யா, சித்திக் மற்றும் பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். சக்தி சரவணன் (ஒளிப்பதிவு), ஸ்ரீகாந்த் N.B. (எடிட்டிங்), மோகன் (கலை), சக்தி சரவணன் (ஸ்டண்ட்ஸ்), பிருந்தா (நடனம்), மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு ) பணிகளை செய்துள்ளனர்.

Cinema News Tags:நடிகர் ஜீவா நடிக்கும் "வரலாறு முக்கியம்" படத்தின் இரண்டாவது சிங்கிள் "மல்லு கேர்ள்" வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது!

Post navigation

Previous Post: அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்
Next Post: Second single “Mallu Girl” from Jiiva starrer “Varalaru Mukkiyam” becomes a sensational hit!

Related Posts

சையமைப்பாளர் யுவனின் பெயராகவும் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி சையமைப்பாளர் யுவனின் பெயராகவும் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி Cinema News
ரொமான்ஸ் ஷாருக்கை மீண்டும் தரிசிக்கும் ஆர்வத்தில் உற்சாகமான ரசிகர்கள் ஜவான் படத்திலிருந்து “ஹைய்யோடா” பாடல் நாளை வெளியீடு* “ஜவான் Cinema News
‘டிரைவர் ஜமுனா’ படத்தின் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்தேன்* – *ஐஸ்வர்யா ராஜேஷ் Cinema News
Dunki in the two posters launched today! Dunki in the two posters launched today! Cinema News
ZEE5 வழங்கும் “செங்களம்” இணையத் தொடர் டிரெய்லர் வெளியீட்டு விழா ! ZEE5 வழங்கும் “செங்களம்” இணையத் தொடர் மார்ச் 24 அன்று வெளியாகவுள்ளது Cinema News
*ஜி வி பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து நடிக்கும் ‘டியர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.* Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme