Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் அடுத்ததாக, நடிகர் சிபிராஜ் நடிக்கும் “வட்டம்”

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் அடுத்ததாக, நடிகர் சிபிராஜ் நடிக்கும் “வட்டம்” படத்தினை பிரத்யேகமாக நேரடி திரைப்படமாக வெளியிடுகிறது

Posted on July 18, 2022 By admin

* ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், நடிகர் சிபிராஜ் நடித்துள்ள “வட்டம்”, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடி திரைப்படமாக, உலகளாவிய அளவில் ப்ரீமியர் ஆகிறது. .*

சமீபத்தில் நயன்தாராவின் O2 & கமல்ஹாசனின் விக்ரமுக்கு கிடைத்த அபரிதமான வரவேற்பைத் தொடர்ந்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த வெளியீடாக சிபிராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘வட்டம்’ படத்தினை நேரடி திரைப்படமாக வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு ஆகியோர் தயாரித்துள்ளனர்.

‘வட்டம்’ ஒரு திரில்லர் திரைப்படம். மனோ, ராமானுஜம், கௌதம் மற்றும் பாரு ஆகிய கதாப்பாத்திரங்கள் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து சந்திக்கும் பிரச்சனைகளும், பரபரப்பான சம்பவங்களும் தான் கதை. இந்த தொடர் சம்பவங்கள், அவர்களின் வாழ்க்கையையும், வாழ்க்கையைப் பற்றிய பார்வையையும் மொத்தமாக மாற்றுகிறது.

நடிகர் சிபிராஜ் கூறியதாவது..
“வட்டம் எனது கேரியரில் மிக முக்கியமான படம், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸுடன், இது எனது முதல் படம். சினிமா மீதான ஆர்வம் மற்றும் தனித்துவமான படைப்புகளை தேர்ந்தெடுத்து அதை சிறந்த தரத்தில் வழங்கும் திரு.எஸ்.ஆர். பிரபு மற்றும் திரு எஸ்.ஆர். பிரகாஷ் ஆகியோரின் ரசிகன் நான். வட்டம் படத்தை சூது கவ்வும் புகழ் திரு. ஸ்ரீனிவாஸ் கவிநயம் எழுதி, மதுபான கடை புகழ் திரு.கமலக்கண்ணன் இயக்கியிருப்பது, எனக்கு மிக மகிழ்ச்சியை தந்தது. இந்த இரண்டு படங்களின் புத்துணர்ச்சியையும் நகைச்சுவையையும் ரசித்ததால் என்னை இந்த படைப்பு மேலும் உற்சாகப்படுத்தியது. எளிய இளைஞனாக நடிப்பதிலிருந்து மாறி, சாதாரண மனிதனாக நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசையை வட்டம் பூர்த்தி செய்துள்ளது. பெரிய லட்சியங்கள் ஏதுமில்லாமல் வாழக்கையை அதன் போக்கில் அந்த தருணத்தை அனுபவித்து வாழும் மனிதனாக நடித்துள்ளேன், நான் இப்படத்தில் கதாநாயகன் என்றாலும், மற்ற கதாபாத்திரங்களுக்கு, குறிப்பாக ஆண்ட்ரியா ஜெர்மியா மற்றும் அதுல்யா ரவி நடித்த கதாபாத்திரங்களுக்கும் படத்தில் சம அளவில் முக்கியத்துவம் உள்ளது. இப்படம் உங்களுக்கு ஒரு புதுமையான அனுபவம் தரும்.

இயக்குனர் கமலகண்ணன் கூறியதாவது..,
நம் வாழ்க்கை சக்கரத்தில் நம்பிக்கை ஒளி வந்து வந்து போகும். அதேபோல, நமது அன்றாட வாழ்க்கையும் அதே வழக்கமான முறையில்தான் இயங்குகிறது. நாம் ஒரே பாதையில் பயணிக்கிறோம், அதே நபர்களைச் சந்திக்கிறோம், ஒரே மாதிரி யோசிக்கிறோம். அதே பணிகளைச் செய்கிறோம், இதை மீண்டும் மீண்டும் நாள் முழுக்க செய்து கொண்டு இருக்கிறோம். இப்படி போய்கொண்டிருக்கும் வாழ்கையில் திடீரென ஏற்படும், ஒரு சிறிய மாற்றம் அந்த நாளை தலைகீழாக மாற்றிவிடும். நமது முழு பழக்கவழக்கங்களையும் கேள்விக்குள்ளாக்கும், மேலும் நம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைக்கும். நாம் மீண்டும் அந்த சக்கரத்தின் ஆரம்ப புள்ளியை அடையும்போது, நம் பழக்கவழக்கங்கள் உட்பட, ஒரு பெரிய மாற்றத்தை அடைந்து இருப்பதை நாம் காணலாம். இது தான் வட்டம் திரைப்படத்தின் மையக் கருவாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் சம்பந்தம் இல்லாத பலர் மற்றவர்களுடைய வாழ்க்கையின் உள்ளே 24 நேரத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களும், அதனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக் தான் திரைக்கதை.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனித்துவமான படங்கள், வணிகரீதியான பிளாக்பஸ்டர்கள் மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படங்களை சீரான முறையில் தொடர்ந்து ரசிகர்களுக்கு வழங்கி வருகிறது. அனைத்து தரப்பு பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் அசல் தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் பரவலான வரிசையுடன், அது அவர்களின் இதயங்களைத் தொடர்ந்து வெல்லும், பல படைப்புகளை தற்போது வரிசைப்படுத்தி வைத்துள்ளது.

Cinema News Tags:டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் அடுத்ததாக, நடிகர் சிபிராஜ் நடிக்கும் “வட்டம்” படத்தினை பிரத்யேகமாக நேரடி திரைப்படமாக வெளியிடுகிறது

Post navigation

Previous Post: Second single “Mallu Girl” from Jiiva starrer “Varalaru Mukkiyam” becomes a sensational hit!
Next Post: The Vijay Deverakonda, Puri Jagannadh, Karan Johar, Charmme Kaur’s LIGER (Saala Crossbreed) Theatrical Trailer Launch On July 21st In Hyderabad and Mumbai

Related Posts

Casagrand in association with Deaf EnAbled Foundation hosts T-20 Cricket Championship for the Deaf Casagrand in association with Deaf EnAbled Foundation hosts T-20 Cricket Championship for the Deaf Cinema News
The Warriorr' teaser தி வாரியர்’ படத்தின் முதல் டீசருடன், ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ள வருகிறார் உஸ்தாத் ராம் பொத்தினேனி ! Cinema News
பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் – ரிச்சர்ட் மேடன் ஆகியோரின் நடிப்பில் தயாரான ‘சிட்டடெல்’ எனும் இணையத் தொடரின் பிரத்யேக காட்சி துணுக்குகள், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற SXSW வில் நடைபெற்ற சிறப்பு விழாவில் ப்ரைம் வீடியோ அறிமுகம் செய்தது. Cinema News
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. 16 பேர் கலந்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் முகேன் ராவ், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் இறுதிப்போட்டி வரை சென்றனர். இதில் முகேன் ராவ் முதல் பரிசை தட்டிச்சென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததையடுத்து, அதில் கலந்துகொண்டவர்களை பல்வேறு பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் சாண்டி மற்றும் தர்ஷனை நடிகர் சிம்பு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களான தர்ஷனும், அபிராமியும் விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகரை சந்தித்துள்ளனர். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தங்களது சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய்யின் தாயாரை சந்தித்த பிக்பாஸ் பிரபலங்கள் Cinema News
சர்வதேச திரைப்பட விழாக்களில் கலக்கும் ‘கள்வா’ சர்வதேச திரைப்பட விழாக்களில் கலக்கும் ‘கள்வா’ Cinema News
கார்த்தி நடித்திருக்கும் கைதி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது கார்த்தி நடித்திருக்கும் கைதி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme