Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ZEE Studios, Trident Arts and Naad Sstudios பெருமையுடன் வழங்கும் ‘லேடி சூப்பர்ஸ்டார் 75

ZEE Studios, Trident Arts and Naad Sstudios பெருமையுடன் வழங்கும் ‘லேடி சூப்பர்ஸ்டார் 75

Posted on July 12, 2022 By admin

’

ZEE Studios, Trident Arts and Naad Sstudios இணைந்து தயாரிக்கும், நடிகை நயன்தாராவின் புதிய திரைப்படம் ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’, இன்று காலை (ஜூலை 12, 2022) எளிமையான பூஜையுடன் துவங்கப்பட்டது. ஏறக்குறைய 2 தசாப்தங்களாக திரைத்துறையில் கோலோச்சும், நடிகை நயன்தாராவின் 75வது படமாக இப்படம் உருவாகிறது.

லேடி சூப்பர்ஸ்டார், நயன்தாராவின் உடைய இந்த திரைப்பயணத்தில், அவர் மிக கடின உழைப்பினாலும் மற்றும் திறமை மிகு நடிப்பினாலும், தன்னை மிகச்சிறந்த நடிகையாக திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக ஜெட் வேகத்தில் முன்னேறியுள்ளார். அவரது அற்புதமான நடிப்பு மற்றும் அவர் ஏற்று நடிக்கும் வலுவான கதாபாத்திரங்களின் மூலமாக, அவர் கிட்டத்தட்ட இருபது ஆண்டு காலம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை தொடர்ந்து மகிழ்வித்துள்ளார்.

நடிகை நயன்தாரா இப்போது தனது மைல்கல்லான 75வது படத்தில் அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ZEE Studios, Trident Arts and Naad Sstudios இணைந்து தயாரிக்கும், இந்த “லேடி சூப்பர் ஸ்டார் 75” திரைப்படம் இன்று காலை சென்னையில் ஒரு எளிய பூஜையுடன் தொடங்கப்பட்டது.

இந்தப் படத்தின் எழுத்தாளரும் இயக்குநருமான நிலேஷ் கிருஷ்ணா கூறும்போது,
“எனது முதல் படத்தை ZEE Studios, Trident Arts ஆகிய இரண்டு புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களின் கீழ் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததற்காக நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக, உணர்கிறேன். நாயகியை மையமாக வைத்து நகரும் இந்தக் கதையில் நடிக்க லேடி சூப்பர் ஸ்டார் திருமதி நயன்தாரா ஒப்புக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்தது . இது அவரது 75வது படம் என்பதால், அவர் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவதில் நான் மிகுந்த கவனத்துடன் உள்ளேன். திரைப்படத் உருவாக்கத்தை கற்று தந்த எனது குரு, என் ஆன்மா இயக்குனர் ஷங்கர் அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் இணைந்தது குறித்து ZEE Studios தென்னக தலைவர் திரு. அக்‌ஷய் கெஜ்ரிவால் கூறுகையில், “லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக இருக்கும் இந்த மதிப்புமிக்க படத்தில் நாங்கள் இணைந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இருபது ஆண்டுக்கு மேலாக திரைத்துறையில் பார்வையாளர்களை மகிழ்வித்து வரும் நயன்தாரா உடைய நடிப்பில் , திறமையான நிலேஷ் கிருஷ்ணாவால் இயக்கப்படும் இந்தத் திரைப்படத்தை வழங்குவது எங்களுக்கு பெருமை. Zee Studios ல், மக்களை மகிழ்விக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் சிறந்த கதைகளை உருவாக்குவதே எங்களது நோக்கம். இந்த படம் அதில் ஒரு சிறந்த படியாக அமையும்.

“நயன்தாரா 75” திரைப்படத்தில் தமிழ் திரைத்துறையின் தலைசிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் – தினேஷ் கிருஷ்ணன் (ஒளிப்பதிவு), ஜாக்கி (கலை), பிரவீன் ஆண்டனி (எடிட்டிங்), அனு வர்தன்-தினேஷ் மனோகரன் (ஆடை வடிவமைப்பு), சுரேன் & அழகியகூத்தன் (ஒலி வடிவமைப்பு), கபிலன் (பப்ளிசிட்டி டிசைனிங்), சுரேஷ் சந்திரா-ரேகா D one (மக்கள் தொடர்பு) இணைந்துள்ளனர்.

இப்படத்தில் சத்யராஜ், ஜெய், ரெடின் கிங்ஸ்லி முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Cinema News Tags:Trident Arts and Naad Sstudios பெருமையுடன் வழங்கும் ‘லேடி சூப்பர்ஸ்டார் 75, ZEE Studios

Post navigation

Previous Post: சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ பட பாடல்கள் வெளியீடு
Next Post: ZEE Studios, Trident Arts and Naad Sstudios proudly presents ‘Lady Superstar 75’

Related Posts

actor Senthil-indiastarsnow.com காமெடி நடிகர் செந்திலுக்கு, அமமுகவில் அமைப்பு செயலாளர் பதவி Cinema News
நடிப்பதில் ஆர்வமில்லை; நல்ல இயக்குநராக இருக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது - இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் நடிப்பதில் ஆர்வமில்லை; நல்ல இயக்குநராக இருக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது – இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் Cinema News
இளையராஜா இசையில் உருவாகும் பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறு-indiastarnsow.com இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறு..! Cinema News
Phoenix Marketcity Fascinates Visitors with Live Concert, Pet-friendly Flea Market and Fashion show over the weekend Phoenix Marketcity Fascinates Visitors with Live Concert, Pet-friendly Flea Market and Fashion show over the weekend Cinema News
பயணிகள் கவனிக்கவும் – விமர்சனம்! ஆஹா ஓ.டி.டி. தளத்தில் இன்று வெளியாகியுள்ள படம் பயணிகள் கவனிக்கவும் திரைவிமர்சனம் ! Cinema News
NOISE AND GRAINS நிறுவனம் மற்றும் பிரபல இசை அமைப்பாளர் வித்யாசாகர் இணையும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme