Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஃபாரின் சரக்கு திரைவிமர்சனம்

ஃபாரின் சரக்கு திரைவிமர்சனம்

Posted on July 10, 2022 By admin

ஃபாரின் சரக்கு குஜராத் மாநில அமைச்சர் ஒருவரின் மகன் ரகசியமாக தமிழகத்துக்கு வருகிறார். அவரை தமிழக அமைச்சர் ஒருவரின் பொறுப்பில் 10 நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்க ஏற்பாடு நடக்கிறது. இதன் பொறுப்பை மகாலிங்கம் என்ற நபரின் தலைமையிலான ஒரு ரவுடி கும்பலிடம் ஒப்படைக்கப்படுகிறது. மறுபுரம் அந்த அமைச்சரின் மகனை தேடி கண்டுபிடிப்பதில் சில குழுக்கள் ஈடுபடுகிறார்கள். அந்த குஜராத் அமைச்சரின் மகன் எதற்காக தமிழகத்திற்கு வருகிறார்? அவர் எதற்காக ரகசியமாக தங்க வைக்கப்படுகிறார்? அந்த ரவுடி கும்பலிடம் அவர் சிக்கிகொண்டாரா? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தில் நடித்திருக்கும் அனைவரும் புதுமுகம் என்பதால் சற்று கதாப்பாத்திரத்தை நினைவு கூறுவது கடினமாகவுள்ளது. கதைகளமும் திரைக்கதையும் சற்று விறுவிறுப்பாக உள்ளதால் இயக்குனர் விக்னேஷ்வரன் கருப்புச்சாமிக்கு பாராட்டுகள் கிடைக்கிறது.

இன்னும் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று சில இடங்களில் தோன்றவைக்கிறது. ’ஃபாரின் சரக்கு’ என்ற தலைப்பு வைத்திருந்தாலும் படத்தில் மது அருந்துவது அல்லது புகை பிடிப்பது போன்ற காட்சிகளை தவிர்த்திருப்பது பாராட்ட வைத்திருக்கிறது.

படத்தின் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கோபிநாத், சுந்தர் ஆகியோருக்கு முதல் படம் என்றாலும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றபடி அவர்களின் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். வில்லனாக நடித்திருக்கும் மகாலிங்கம் வில்லனுக்கு உரிய பாணியில் நடிக்க முயற்சித்துள்ளார். படத்தில் நடித்த அனைவரும் புதுமுகம் என்பதால் கதாப்பாத்திரங்களை நினைவில் வைத்திருப்பது பார்வையாளர்களுக்கு சற்று கடினமாக உள்ளது. கதாநாயகிகளாக நடித்திருக்கும் அஃப்ரினா, ஹரினி, இலக்கியா ஆகியோர் அவர்களின் இயல்பான நடிப்பையும், ஆக்ஷன் காட்சிகளிலும் அதிரடியான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

Movie Reviews Tags:ஃபாரின் சரக்கு திரைவிமர்சனம்

Post navigation

Previous Post: Panni Kutty Movie Review
Next Post: உறியடி விஜய் குமார் ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்து அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை துவங்கியுள்ளனர்

Related Posts

எதற்கும் துணிந்தவன் திரைவிமர்சனம் எதற்கும் துணிந்தவன் திரைவிமர்சனம் Movie Reviews
Pattas Movie Review-indiastarsnow.ocm Pattas Movie Review Movie Reviews
anbarivu movie review anbarivu movie review Movie Reviews
நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு திரைவிமர்சனம் -indiastarsnow.com நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு திரைவிமர்சனம் Cinema News
Baaram Film Review-indiastarsnow.com பாரம் திரைவிமர்சனம் Movie Reviews
கண்ணை நம்பாதே திரை விமர்சனம்-indiastarsnow.com கண்ணை நம்பாதே திரை விமர்சனம் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme