Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் “மூத்தகுடி”

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் “மூத்தகுடி”

Posted on July 7, 2022 By admin

தி ஸ்பார்க்லேண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்து பலரின் பாராட்டைப் பெற்ற “சாவி” திரைப்படத்தை தொடர்ந்து தங்களது இரண்டாவது படமாக “மூத்தகுடி” என்று பெயரிடப்பட்டுள்ள படத்தை தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம், மற்றும் சாவி படத்தில் கதாநாயகனாக நடித்த பிரகாஷ் சந்திராவும், மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த தருண்கோபியும் இணைந்து நடிக்கின்றனர்.

வெல்டன், கடைசி பெஞ்ச் கார்த்தி உள்ளிட்ட படங்களை இயக்கிய ரவி பார்கவன் “மூத்தகுடி” படத்தின் திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

விசாகப்பட்டினத்தை சேர்ந்த அன்விஷா இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் R.சுந்தர்ராஜன், ராஜ்கபூர், சிங்கம் புலி, யார் கண்ணன், சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பழம்பெரும் நடிகை K.R.விஜயா நடிக்கிறார்.

1970களில் கோவில்பட்டி அருகில் நடந்த உண்மை சம்பவத்தை படமாக்குகிறார்கள். எனவே 1970 மற்றும் 1980களில் உள்ளது போன்ற இடங்களை தேர்வு செய்து படப்படிப்பு நடத்துகின்றனர்.

கோவில்பட்டி, சாத்தூர், சங்கரன்கோவில், எட்டயபுரம், கயத்தாறு, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது

பிரகாஷ் சந்திரா கதாநாயகனாக நடித்து தி ஸ்பார்க்லேண்ட் நிறுவனத்தின் சார்பில் “மூத்தகுடி” படத்தை தயாரிக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்


தயாரிப்பு நிறுவனம் – தி ஸ்பார்க்லேண்ட் (The Sparkland)
திரைக்கதை இயக்கம் – ரவி பார்கவன்
ஒளிப்பதிவு – ரவிசாமி
இசை – சுரேஷ் முருகானந்தம் (அறிமுகம்)
படத்தொகுப்பு – சுரேஷ் அர்ஸ்
கதை வசனம் – M.சரக்குட்டி
பாடல்கள் – நந்தலாலா
சண்டைப்பயிற்சி – சரவெடி சரவணன்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Cinema News Tags:உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் “மூத்தகுடி”

Post navigation

Previous Post: தி வாரியர் படத்தின் திரை பிரபலங்கள் கலந்துகொண்ட சென்னையில் நேற்று கோலகலமாக நடைபெற்றது.
Next Post: சூர்யாவைப் பார்த்து உறைந்து போனேன் – சாய் பல்லவி

Related Posts

ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை-indiastarsnow.com ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை Cinema News
Bharathiraja-indiastarsnow.com தமிழ் சினிமாவை பெருமைப்படுத்திய தேசிய விருது Cinema News
கௌதம் கார்த்திக் - சரத்குமார் இணைந்து நடிக்கும் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம் ! கௌதம் கார்த்திக் – சரத்குமார் இணைந்து நடிக்கும் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம் ! Cinema News
அயலி வெப் சீரிஸ் – விமர்சனம் அயலி வெப் சீரிஸ் – விமர்சனம் Cinema News
பத்திரிகையாளராக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் ‘பிளட் மணி’ திரைப்படம் பத்திரிகையாளராக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் ‘பிளட் மணி’ திரைப்படம் Cinema News
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் M.மணிகண்டன் கூட்டணியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த அதிரடியான வெப் சீரிஸை அறிவித்துள்ளது !! Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme