Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சர்வதேச அங்கீகாரம் பெற்ற 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் 'கடைசி விவசாயி'

தமிழ் சினிமாவின் பெருமையை உலகின் உச்சிக்கு கொண்டு சென்ற ‘கடைசி விவசாயி’

Posted on July 6, 2022 By admin

சர்வதேச அங்கீகாரம் பெற்ற ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’

இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கடைசி விவசாயி’. நல்ல படங்களைத் தயாரிப்பதில், ஒரு தயாரிப்பாளராக ‘மேற்குத் தொடர்ச்சி மலை’யின் உச்சியில் அமர்ந்திருக்கும் விஜய் சேதுபதியின் இன்னொரு பெருமை மிகு தயாரிப்பும் கூட இந்த ‘கடைசி விவசாயி’.

;கடந்த 100 ஆண்டுகால தமிழ் சினிமாவின் தலை சிறந்த படம்’, மண் மணம் வீசும் காவியம்’ என்பது போன்ற உயர்ந்த அபிப்ராயங்களுடன் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், தியேட்டர் வசூலில் தயாரிப்பாளருக்கு சாதகமாக அமையவில்லை.. இருப்பினும் ‘கடைசி விவசாயி’ படத்தை பார்த்த ரசிகர்கள் கதையின் நாயகனாக நடித்த நிஜ விவசாயி நல்லாண்டி ஐயா அவர்களையும், உலகத்தரம் வாய்ந்த படத்தைத் தயாரித்து அதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வாழ்ந்த ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் நடிப்பையும் பாராட்டினார்கள். பல திரையரங்குகளில் படம் நிறைவடைந்ததும் பார்வையாளர்கள் எழுந்து நின்று அரங்கம் அதிர கரவொலி எழுப்பி தங்களின் பாராட்டைத் தெரிவித்தனர்.

பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும், கௌரவத்தையும் பெற்ற இந்த திரைப்படம், தற்போது தனது கிரீடத்தில் மற்றுமொரு வைர மகுடத்தைப் பெற்றுள்ளது. .

உலக அளவில் சிறந்த திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் முன்னணி இணையதளங்களில் Letterboxd எனும் இணையதளமும் ஒன்று. இந்த இணையதளத்தில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலான, ஆண்டின் முதல் பாதியில் வெளியான சிறந்த படங்களை பட்டியலிட்டிருக்கிறது. உலகப்படங்கள் தரவரிசைப்படுத்தப்பட்ட அந்தப்பட்டியலில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்த ‘கடைசி விவசாயி’ திரைப்படம் இரண்டாம் இடத்தைப் பிடித்து தமிழ் சினிமாவின் பெருமையை உலகெங்கும் உரத்து முழங்கியிருக்கிறது.

இதனால் உற்சாகமடைந்த விஜய் சேதுபதியின் ரசிகர்கள் இந்த தகவலை புகைப்பட ஆதாரத்துடன் இணையங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

.இந்த தளத்தில் உலக அளவிலான சிறந்த படங்களின் பட்டியலில் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் தயாராகி, ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த ‘’ஆர். ஆர். ஆர்’’ திரைப்படம் ஆறாவது இடத்திலும், 400 கோடிக்கு மேல் வசூல் செய்த உலக நாயகன் கமலஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் பதினோராம் இடத்திலும் வரிசை படுத்தப்பட்டிருக்கிறது என்பதும், இதில் ‘விக்ரம்’ படத்திலும் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Cinema News Tags:சர்வதேச அங்கீகாரம் பெற்ற 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம், தமிழ் சினிமாவின் பெருமையை உலகின் உச்சிக்கு கொண்டு சென்ற ‘கடைசி விவசாயி’

Post navigation

Previous Post: Megastar Chiranjeevi –Mohan Raja – Konidela Productions And Super Good Films – Godfather First Look Out, Theatrical Release For Dasara
Next Post: Ram Pothineni-Kriti Shetty starrer ‘Warriorr’ Pre-Release Event

Related Posts

பனாரஸ் திரை விமர்சனம்! பனாரஸ் திரை விமர்சனம்! Cinema News
தி லெஜண்ட் திரைவிமர்சனம் தி லெஜண்ட் திரைவிமர்சனம் Cinema News
Released by Makkal Selvan Vijay Sethupathi, Director P. S. Mithran Cinematographer P. G Muthiah & Director S.R.Prabhakaran. Cinema News
#PS1 takes to @Snapchat 😍 Try out this amazing filter now! Cinema News
ஷ்ரத்தா சிவதாஸ்-கார்த்திக் மதுசூதன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டூடி’ திரைப்படம் ஷ்ரத்தா சிவதாஸ்-கார்த்திக் மதுசூதன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டூடி’ திரைப்படம் Cinema News
Phoenix Marketcity Fascinates Visitors with Live Concert, Pet-friendly Flea Market and Fashion show over the weekend Phoenix Marketcity Fascinates Visitors with Live Concert, Pet-friendly Flea Market and Fashion show over the weekend Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme