Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்களின் நலனுக்காக நடிகர் ராதாரவி ஏற்பாட்டில் சிறப்பு மருத்துவ முகாம்

தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்களின் நலனுக்காக நடிகர் ராதாரவி ஏற்பாட்டில் சிறப்பு மருத்துவ முகாம்*

Posted on July 4, 2022 By admin

அல்லும் பகலும் அயராது உழைத்து வரும் கலைஞர்கள் தங்களது உடல் நலன் குறித்து அவ்வளவாக கவலைப்படுவதில்லை. இதை கருத்தில் கொண்டு, தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்க உறுப்பினர்களின் நலனுக்காக மூத்த நடிகரும் டப்பிங் சங்கத் தலைவருமான ராதாரவி சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றுக்கு இன்று ஏற்பாடு செய்தார்.

இன்று காலை 10 மணிக்கு சங்க வளாகத்தில் தொடங்கிய இந்த சிறப்பு மருத்துவ முகாம் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும். தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்க உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர்.

பிரபல உடல்நல நிபுணரும் பேராசிரியருமான டாக்டர் ஆதிஜோதிபாபு மூலமாக பஞ்சபூத மருத்துவமுறையினால் மருந்தில்லா மருத்துவமுறையை அறிமுகப்படுத்தி இலவச சிகிச்சை அளிக்கும் மருத்துவமுகாம் காலை முதல் மாலை வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த மருத்துவமுறையில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் (Blood Pressure) மற்றும் அனைத்து நோய்களுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சிறப்பு மருத்துவ முகாமில், தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்க உறுப்பினர்கள் அவர்களது குடும்பத்தினரோடு பங்குகொண்டு பயன் பெற்று வருகின்றனர்.

சிறப்பு முகாமில் கலந்துகொண்ட உறுப்பினர்களும் அவர்களது குடும்பத்தினரும் இந்த முன்னெடுப்புக்காக நடிகர் ராதாரவியையும், எளிய முறையில் சிறந்த சிகிச்சை அளித்ததற்காக டாக்டர் ஆதிஜோதிபாபுவையும் பாராட்டியதோடு அவர்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்தனர்.

Cinema News Tags:தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்களின் நலனுக்காக நடிகர் ராதாரவி ஏற்பாட்டில் சிறப்பு மருத்துவ முகாம்*

Post navigation

Previous Post: உறியடி’ விஜய்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு*
Next Post: Ethiopian patient with Kyphoscoliosis (Anaconda Spine), treated successfully at SIMS Hospital

Related Posts

Regal Talkes very soon-indiastarsnow.com Regal Talkies very soon Cinema News
சர்ச்சையாகும் “உருட்டு” “உருட்டு” பாடல். Cinema News
Prasanth Varma, Teja Sajja, Primeshow Entertainment’s Pan India Movie HANU-MAN Teaser On November 15th Cinema News
நிவின் பாலிக்கு ஜோடியாக அழகாக ஜொலிக்கிறார் நயன் நிவின் பாலிக்கு ஜோடியாக அழகாக ஜொலிக்கிறார் நயன் Cinema News
Disney India releases ‘The Little Mermaid’ on 26th May 2023. Only in cinemas. Cinema News
பனாரஸ் திரை விமர்சனம்! பனாரஸ் திரை விமர்சனம்! Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme