Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

மாயோன் திரைப்பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் கிஷோர் அவர்களுக்கு தங்க செயின் பரிசளித்துள்ளார் நடிகர் சிபிராஜ்

மாயோன் திரைப்பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் கிஷோர் அவர்களுக்கு தங்க செயின் பரிசளித்துள்ளார் நடிகர் சிபிராஜ்

Posted on July 1, 2022 By admin

சிறந்த கதைகள் கொண்ட திரைப்படங்களை தொடர்ந்து தந்து, வணிக வட்டாரங்கள், பொது பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் சிறந்த அந்தஸ்தைப் பெற்றுள்ளார் நடிகர் சிபிராஜ். அவரது சமீபத்திய திரைப்படமான ‘மாயோன்’ விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல், மர்மம் மற்றும் சாகச அம்சங்களுடன், புராண அம்சங்களைக் கலந்து முதல்-முறையாக எடுக்கப்பட்ட புது முயற்சிக்காக இப்படம் பொது பார்வையாளர்களிடமிருந்து பாராட்டு மழையை பெற்று வருகிறது. படத்தின் வெற்றியினை தொடர்ந்து, அதனை சிறப்பிக்கும் வகையில், நடிகர் சிபிராஜ், இயக்குநர் கிஷோர் அவர்களுக்கு ஒரு தங்கச் சங்கிலியை பரிசாக வழங்கியுள்ளார் நடிகர் சிபிராஜ். இப்படத்தில் சிறப்பான நடிப்பிற்காக நடிகர் சிபிராஜுக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருவது குறிப்பிடதக்கது.

‘மாயோன்’ படத்தின் தயாரிப்பாளர்கள் விரைவில் இப்படத்தை தெலுங்கில் வெளியிட உள்ளனர், இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

“மாயோன்” ஜூன் 24, 2022 அன்று உலகளாவிய திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படம் எல்லா தரப்பிலும், நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. Double Meaning Productions இந்த படத்தை தயாரித்துள்ளது. அற்புதமான கதைக்களம், பிரமிக்க வைக்கும் காட்சிகள் மற்றும் சிபிராஜ் மற்றும் பிற நடிகர்களின் பாராட்டத்தக்க நடிப்பிற்காக இப்படம் பெருமளவில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

Cinema News Tags:மாயோன் திரைப்பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் கிஷோர் அவர்களுக்கு தங்க செயின் பரிசளித்துள்ளார் நடிகர் சிபிராஜ்

Post navigation

Previous Post: Actor Sibiraj gifts gold chain to director Kishore marking the grand success of Maayon
Next Post: Thor: Love and Thunder’ releasing in the Indian theatres on July 7.

Related Posts

நான் ஈ புகழ் சுதீப் நடிக்கும் ‘பயில்வான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் Cinema News
ajith-www.indiastarsnow.com அஜித் பற்றி என்ற கேள்விக்கு “கனவு” என சொன்னார் யாஷிகா ஆனந்த் Cinema News
சந்திரபாபுவின் பேரன் நடித்து, இயக்கிய ‘தெற்கத்திவீரன்’ டிசம்பர் 2 ம் தேதி வெளியாகிறது சந்திரபாபுவின் பேரன் நடித்து, இயக்கிய ‘தெற்கத்திவீரன்’ டிசம்பர் 2 ம் தேதி வெளியாகிறது Cinema News
கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்ட இதிகாசம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் துபாய் சர்வதேச மாநாட்டில் வெளியிடப்படுகிறது Cinema News
உலகமெங்குமுள்ள 100 இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களுடன் இணைந்து வதந்தி வலைத்தொடருக்கு இசையமைத்த சைமன் K கிங் Cinema News
பவுடர் திரைப்படத்திற்காக 5 மொழிகளில் டப்பிங் பேசியுள்ளார் நிகில் முருகன் பவுடர் திரைப்படத்திற்காக 5 மொழிகளில் டப்பிங் பேசியுள்ளார் நிகில் முருகன். Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme