Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

கேக் வெட்டி வெற்றியைக் கொண்டாடிய 'மாயோன்' பட குழு

கேக் வெட்டி வெற்றியைக் கொண்டாடிய ‘மாயோன்’ பட குழு

Posted on July 1, 2022July 1, 2022 By admin

டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழிமாணிக்கம் தயாரிப்பில், சிபி சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘மாயோன்’ திரைப்படம் அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்று வணிகரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியை பெற்றிருக்கிறது. இதனை பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதன் போது படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் கிஷோருக்கு, படத்தின் நாயகனான சிபிராஜ் தங்கசங்கிலியொன்றை பரிசளித்தார்.

தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து, பலத்த போட்டிகளுக்கு இடையே வெளியான திரைப்படம் ‘மாயோன்’. எளிதில் யூகிக்க இயலாத திரைக்கதை, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பரிபூரண ஒத்துழைப்பு, ரசிகர்களை திரையரங்கிற்கு வரவழைக்கும் வகையில் வித்தியாசமான விளம்பர உத்தி, திரையலக பிரபலங்களின் பாரட்டு.. என பலவித அம்சங்களால் ‘மாயோன்’ திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. தமிழகம் முழுவதும் ‘மாயோன்’ திரையிடப்பட்ட திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்திருக்கின்றனர். எதிர்பார்த்ததை விட கூடுதல் வெற்றி, ‘மாயோன்’ திரைப்படத்திற்கு கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த தயாரிப்பாளர், பட குழுவினரை அலுவலகத்திற்கு வரவழைத்து, வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடினார்.

தமிழில் ‘மாயோன்’ திரைப்படத்திற்கு மாபெரும் வெற்றி கிடைத்ததால், ஜூலை ஏழாம் தேதியன்று தெலுங்கில் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது. இதற்காக ஜுலை 1ஆம் தேதியன்று ஹைதராபாத்தில் நடைபெறும் விளம்பரப்படுத்தும் நிகழ்வில் தெலுங்கின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொள்கிறார்கள். இவர்களுடன் ‘கட்டப்பா’ சத்யராஜ் சார் உள்ளிட்ட ‘மாயோன்’ படக்குழுவினரும் கலந்துகொண்டு, தெலுங்கு ரசிகர்களுக்கு ‘மாயம் செய்யும் மணிவண்ணா..’வை அறிமுகப்படுத்துகிறார்கள்.

Cinema News Tags:கேக் வெட்டி வெற்றியைக் கொண்டாடிய 'மாயோன்' பட குழு, மாயோன்’ இயக்குநருக்கு தங்கசங்கிலி பரிசளித்த நாயகன் சிபிராஜ்

Post navigation

Previous Post: தமிழ் ரசிகர்கள் தனித்துவமானவர்கள்” நெகிழ்ந்த ‘பனாரஸ்’பட இயக்குநர்
Next Post: பார்வையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’ படைப்பாளிகள்

Related Posts

செப்டம்பர் 19 ஆம் தேதியன்று இலண்டன் மாநகரில் இலங்கை அதிபர் ரணில்விக்கிரசிங்கேவைச் சந்தித்தார் லைகா நிறுவனர் சுபாஸ்கரன். அந்தச் சந்திப்பு பல்லாண்டுகளாச் சிறையில் வாடிக் கொண்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் வாழ்வில் வெளிச்சத்தைக் கொடுத்துள்ளது Cinema News
நயன்தாரா நடித்த “O2” திரைப்படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி பிரத்யேகமாக வெளியிடுகிறது நயன்தாரா நடித்த “O2” திரைப்படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி பிரத்யேகமாக வெளியிடுகிறது Cinema News
ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்தில் நாயகிகள் Cinema News
அமெரிக்காவில் டெல் கே கணேசன்னுக்கு க்ளோபல் ஐகான்ஸ் விருது அமெரிக்காவில் டெல் கே கணேசன்னுக்கு க்ளோபல் ஐகான்ஸ் விருது Cinema News
TOHOKU’ Photography Expo Comes to Chennai TOHOKU’ Photography Expo Comes to Chennai Cinema News
ஜீவா நடிக்கும் “வரலாறு முக்கியம்” ஜீவா நடிக்கும் “வரலாறு முக்கியம்” Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme