Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பார்வையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் 'சுழல் -தி வோர்டெக்ஸ்' படைப்பாளிகள்

பார்வையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’ படைப்பாளிகள்

Posted on July 1, 2022 By admin

‘சுழல் தி வோர்டெக்ஸ்’ தொடரின் சுவராசியங்களை வெளியிடவேண்டாம் என்றும், இந்த தொடரின் அனைத்து அம்சங்களையும் ஒவ்வொரு பார்வையாளர்களும் பிரத்யேகமாக பார்த்து ரசிக்க அனுமதிக்க வேண்டும் என இந்த தொடரை உருவாக்கிய படைப்பாளிகளான புஷ்கர் மற்றும் காயத்ரி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான புஷ்கர் & காயத்ரி அவர்களின் பட்டறையிலிருந்து தயாராகி, அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17 தேதி முதல் வெளியான முதல் ஒரிஜினல் தமிழ் வலைதள தொடர் ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’. க்ரைம் த்ரில்லர் பாணியிலான புலனாய்வு தொடரான ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’ எட்டு அத்தியாயங்களைக் கொண்டது. அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட இந்த தொடருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து, அனைவரது பட்டியலிலும் இது இடம் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் சுவராசியமான முடிச்சுகள், எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்திருப்பதால் இந்த தொடர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதனால் இந்த தொடரில் இடம்பெற்ற திடுக்கிட வைக்கும் சுவராசியமான திருப்பங்களை ரசிகர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். ஏனெனில் தொடரின் ஒவ்வொரு திருப்பங்களையும், அவர்களே ஆழமாக உற்றுப்பார்க்கும் போது அவர்களது எதிர்பார்ப்பும், ஊகங்களும் கூட தவறாக போகலாம்.

மேலும் ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’ தொடரைப் பற்றி தயாரிப்பாளர்கள் பேசுகையில், ” ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் எதிர்பாராத வகையில் திருப்பங்கள் இருக்கிறது. திருப்பத்திற்குரிய தடயங்கள் இருந்தாலும், அவை பார்வையாளர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்கின்றன. ஆனால் இறுதி அத்தியாயத்திற்கல்ல. நீங்கள் ஒவ்வொரு அத்தியாயத்தின் திருப்பங்களை ஊகித்திருந்தாலும் அதை வெளிப்படுத்த வேண்டாம். நீங்கள் அனுபவித்த கலை இன்பத்தை மற்றவர்களும் உணர அனுமதிக்கவேண்டும். இந்த தொடர் தரும் ஆச்சரியத்துடன் கூடிய திருப்பங்களை, ஒவ்வொருவரும் பார்க்கும் போது, அவர்களே கண்டுபிடித்து ரசிக்கும் வகையில் மகிழ்ச்சியை பெற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.” என்றனர்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ தொடர் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கிறது. ஓ. டி. டி. எனும் டிஜிட்டல் தளத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த தொடர்- சிறந்த புலனாய்வு பாணியிலான திரில்லர் தொடர். 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 30க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ தொடரை பார்க்கலாம்.

Cinema News Tags:பார்வையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் 'சுழல் -தி வோர்டெக்ஸ்' படைப்பாளிகள்

Post navigation

Previous Post: கேக் வெட்டி வெற்றியைக் கொண்டாடிய ‘மாயோன்’ பட குழு
Next Post: Suzhal – The Vortex Creators, “We would like everyone to watch and discover for themselves.”

Related Posts

நடிகர் சரவணன் தனது அப்பாவுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் Cinema News
Nani, Vivek Athreya, Mythri Movie Makers Adade Sundara Teaser Dropped Nani, Vivek Athreya, Mythri Movie Makers Adade Sundara Teaser Dropped Cinema News
என்ஜாய் ; விமர்சனம் Cinema News
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. 16 பேர் கலந்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் முகேன் ராவ், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் இறுதிப்போட்டி வரை சென்றனர். இதில் முகேன் ராவ் முதல் பரிசை தட்டிச்சென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததையடுத்து, அதில் கலந்துகொண்டவர்களை பல்வேறு பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் சாண்டி மற்றும் தர்ஷனை நடிகர் சிம்பு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களான தர்ஷனும், அபிராமியும் விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகரை சந்தித்துள்ளனர். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தங்களது சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய்யின் தாயாரை சந்தித்த பிக்பாஸ் பிரபலங்கள் Cinema News
Cinema News
கார்த்தி, ஜோதிகா நடித்துள்ள படம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்குத் திரைக்குக் கொண்டுவர முடிவு கார்த்தி ஜோதிகா நடித்துள்ள படம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்குத் திரைக்குக் கொண்டுவர முடிவு Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme