Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

IMDB கொடுத்த ரேட்டிங்.... "மாமனிதன்" படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.!

IMDB கொடுத்த ரேட்டிங்…. “மாமனிதன்” படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.!

Posted on June 29, 2022 By admin

*

தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மாமனிதன்”.

இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதன் முறை கூட்டணி அமைத்து இசையமைத்திருக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா தனது YSR நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார்.

தமிழகம் மற்றும் கேரளாவில் ஸ்டூடியோ 9 சார்பில் ஆர் கே சுரேஷ் வெளியிட்டிருக்கிறார்.

படத்திற்கு மக்கள் பெரும் வரவேற்பை கொடுத்தனர். குடும்பம் சகிதமாக முக்கியமாக பெண்கள் இப்படத்தை பெரிதளவில் கொண்டாடி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், திரை பிரபலங்கள் பலரும் இப்படத்தை வாழ்த்தி இயக்குனருக்கு பாராட்டுகள் தெரிவித்தனர்.

சிறந்த படங்களுக்கு மதிப்பீடு கொடுக்கும் IMDB நிறுவனம் மாமனிதன் படத்திற்கு 8.1 /10 கொடுத்துள்ளது.

கடந்த சில வாரங்களாக வெளியான திரைப்படங்களில் மாமனிதன் படத்திற்கும் மதிப்பெண் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பல திரையரங்குகளில் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக மாமனிதன் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.
Attachments area

Cinema News Tags:IMDB கொடுத்த ரேட்டிங்.... "மாமனிதன்" படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.!

Post navigation

Previous Post: ரிலீஸுக்கு முன்பாக வெற்றி விழா கொண்டாடிய ” பேய காணோம்” படக்குழு !
Next Post: மை டியர் பூதம்’ பார்த்து இயக்குநர் N ராகவனை வெகுவாக புகழ்ந்த உதயநிதி ஸ்டாலின்

Related Posts

இசையமைப்பாளர் சைமன் கே.கிங் உடல் எடையைக் குறைத்தார்-indiastarsnow.com இசையமைப்பாளர் சைமன் கே.கிங் உடல் எடையைக் குறைத்தார்!!!!! Cinema News
kgf2 கே ஜி எஃப் 2’ ட்ரைலர் இன்று மாலை வெளியீடு Cinema News
Arulnithi starrer ‘Diary’ Trailer gets positive response Arulnithi starrer ‘Diary’ Trailer gets positive response Cinema News
Taapsee-Pannu-indiastarsnow.com டாப்சிக்கு ஷாக் கொடுத்த கரண்ட் பில் Cinema News
சமந்தா தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சமந்தா தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் Cinema News
என்ஜாய் ; விமர்சனம் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme