Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

தமிழ் திரைப்படத் துறையின் நிலை மற்றும் சாத்தியக்கூறுகள்

தமிழ் திரைப்படத் துறையின் நிலை மற்றும் சாத்தியக்கூறுகள்” குறித்த நிகழ்ச்சியை தமிழ் திரையுலக பிரமுகர்களுடன் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் (என்எஃப்டிசி) நடத்தியது

Posted on June 29, 2022 By admin

‘தமிழ் திரைப்படத் துறையில் வளர்ந்து வரும் வணிக வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் சென்னையில் நடந்த நேருக்கு நேர் நிகழ்ச்சியில் முன்னணி திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஆரக்கிள் மூவீஸ் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் (என்எஃப்டிசி) இயக்குநர் ராஜேஷ் கண்ணா, தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா, இயக்குநர்கள் தளபதி, சமந்த்ராஜ், அமுதேஸ்வர் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆரக்கிள் மூவீசின் தாய் நிறுவனமான என் எஃப் டி கிரியேட்டர் எகானமி பிரைவேட் லிமிடெட் மூலம் “தமிழ்த் திரைப்படத் துறையின் நிலை மற்றும் சாத்தியக்கூறுகள்” குறித்த ஆய்வுக்காக என்எஃப்டிசி நடத்தும் கருத்து கேட்பின் முன்னோட்டமாக இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது பெறப்பட்ட கருத்துகள் தொகுக்கப்பட்டு, விளக்கப்பட்டு, என்எஃப்டிசிக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும்.

இந்த அறிக்கை பின் வரும் காரணங்களுக்காக பயன்படுத்தப்படும்:

* தமிழ்த் திரைப்படத் துறையின் தற்போதைய ஆரோக்கியத்தையும் ஆற்றலையும் உறுதிப்படுத்துதல்.

* தயாரிப்பில் உள்ள மற்றும் இன்னும் வெளியிடப்படாத திரைப்படங்களின் தரவுத்தளத்தை உருவாக்குதல்.

* தரமான முடிக்கப்படாத திரைப்படங்களை அடையாளம் காணுதல்.

இந்த முயற்சிக்கு தயாரிப்பாளர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநர் ராஜேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

“தயாரிப்பாளர்களின் ஆதரவுடன் மட்டுமே இந்த திட்டம் வெற்றிகரமாக அமையும். இந்த முயற்சி தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்” என்று அவர் மேலும் கூறினார்.

“என்எஃப்டிசி எடுக்கும் இந்த புதிய முயற்சிக்கும், தயாரிப்பாளர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு வியாபார ரீதியாக உதவுவதோடு வியாபார ரீதியாக ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வும் தந்து தயாரிப்பாளர்களுக்கு பக்கபலமாக இருக்கும் ஆரக்கிள் மூவீஸ்க்கும் எனது மனமார்ந்த நன்றிகள்,” என்று ஜாகுவார் தங்கம் கூறினார்.

சமீபத்தில் இதே போன்ற ஒரு நிகழ்ச்சியை கேரள திரைப்பட தயாரிப்பாளர்களுடன் ஆரக்கிள் மூவீஸ் ஏற்பாடு செய்திருந்தது. அப்போது அவர்களில் பலர் ஆரக்கிள் மூவிஸுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்ததோடு அதனுடன் இணைய முன்வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Cinema News Tags:தமிழ் திரைப்படத் துறையின் நிலை மற்றும் சாத்தியக்கூறுகள்" குறித்த நிகழ்ச்சியை தமிழ் திரையுலக பிரமுகர்களுடன் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் (என்எஃப்டிசி) நடத்தியது

Post navigation

Previous Post: ஒய் ஜி மகேந்திராவின் ‘சாருகேசி’ நாடக குழுவிற்கு இன்ப அதிர்ச்சி அளித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
Next Post: கனல் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

Related Posts

“திரையரங்கில் ரசிக்க வேண்டிய திரைப்படம் ‘போர் தொழில்’” Cinema News
“வேழம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு ! “வேழம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு ! Cinema News
கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் மீண்டும் மனைவி நடிக்க வந்ததார் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் மீண்டும் மனைவி நடிக்க வந்ததார் Cinema News
தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன பங்குகள்* Cinema News
*Prabhas’ Raghav Avatar in the Latest Poster of Adipurush and ‘Jai Shree Ram’ lyrical audio Wins Over the Internet* Cinema News
ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'அடியே..' படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு- indiastarsnow.com ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே..’ படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme