Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Kanal Movie Audio Launch

கனல் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

Posted on June 29, 2022 By admin

விழாவில் கலந்துகொண்டு தயாரிப்பாளர் ஜெய்பாலா
பேசியதாவது,

“அனைவருக்கும் வணக்கம். வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. ஒரு புது படக்குழுவிற்கு இவ்வளவு பேர் வந்து வரவேற்பு தந்திருப்பது ஆச்சர்யம்.. தென்மாவின் இசை பிரமாதமாக வந்துள்ளது . இயக்குநர் சமயமுரளிக்கும் நன்றி. எங்கள் படத்திற்கு ஆதரவு செய்யுங்கள்” என்றார்

இசை அமைப்பாளர் தென்மா பேசியதாவது, “வந்திருக்கும் சிறப்பு அழைப்பாளர்கள் எல்லோருக்கும் நன்றி. கானாமுத்து வழியாக இந்தப்படம் எனக்கு வந்தது. இந்தப்படத்தின் பாடல்வேலைகள் மிகவும் சவாலாக இருந்தது. சமயமுரளி சாருக்கும் எனக்கும் நல்ல நட்பு இருந்தது. இந்தப் புது படக்குழுவிற்கு இந்தப்படம் நல்ல அடையாளத்தை கொடுக்கும். ஸ்ரீதர் மாஸ்டருக்கு பெரிய நன்றி” என்றார்

டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் பேசியதாவது,

“எல்லாருக்கும் வணக்கம்..கனல் படத்தில் நடனம் அமைத்து நடித்ததில் சந்தோஷம். இந்தப்படத்தின் தயாரிப்பாளருக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் … ஹீரோயின் காவ்யா பற்றிச் சொல்ல வேண்டும் . காவ்யாவின் ஒவ்வொரு நடிப்பும் சிறப்பாக இருந்தது. தென்மா மியூசிக் மிகவும் நன்றாக இருந்தது .இயக்குநர் சமயமுரளியின் பாடல் வரிகள் அருமை . கேமராமேன் பாஸ்கர் ரொம்ப சப்போர்ட் செய்தார் . சின்ன ஏரியாவிற்குள் அவர் ரொம்ப நல்லா உழைச்சிருக்கார். இந்த படக்குழு பெரிதாக ஜெயிக்க வேண்டும் .பெருசா ஜெயிக்கணும் என்று எல்லாரும் வேலை செய்துள்ளோம் . என் ஆல்பங்களுக்கு சப்போர்ட் பண்ற எல்லாரும் இந்தப்படத்தின் பாடல்களுக்கும் சப்போர்ட் பண்ணணும். இயக்குநர் சமயமுரளி க்கு மிக்க நன்றி” என்றார்

நடிகை காவ்யா பெல்லு பேசியதாவது,

“கனல் எனக்கு ரொம்ப பிடிச்ச படம். இதில் நான் நடிக்க மட்டும் செய்யவில்லை . புரொடக்‌ஷன் வேலையும் செய்தேன். இந்தக் கேரக்டர் நான் பண்றதுக்கு இயக்குநர் என்னைக் கேட்டார். எல்லாருக்கும் டவுட் இருந்தது. இந்தக் கேரக்டரை ரொம்ப சீரியசா எடுத்துட்டுப் பண்ணேன். சக்தி என்ற இந்த கேரக்டர் ரொம்ப ஸ்ட்ராங்கான கேரக்டர். இந்த டீம் வெரிகுட் டீம்..தயாரிப்பாளர் ஜெய்பாலா சார் ரொம்ப ஹார்ட் வொர்க்கர். பாஸ்கர் எக்ஸ்பீரியன்ஸ் கேமராமேன் நிறைய சப்போர்ட் பண்ணார். இயக்குநரோட டெடிகேசன் வேறலெவல். சமயமுரளி சாரிடம் இருந்து நிறைய கத்துக்கணும்..ஸ்ரீதர் சார் ரொம்ப ப்ரண்ட்லி. நம்ம சாங்கை அவர் பண்ணுவாரா என்ற தயக்கம் இருந்தது. இங்கிருக்கும் எல்லாருக்கும் நன்றி. மீடியா சப்போர்ட் பண்றதுக்கு ரொம்ப நன்றி” என்றார்

ராதாரவி பேசியதாவது,

“இந்தக் கனல் படத்தின் நாயகி காவ்யா சகோதரி நல்லா தமிழ் பேசினாங்க. என் சினிமா கரியரில் முதலில் கன்னடத்தில் தான் நடித்தேன். கமல் தான் இங்கு மன்மதலீலையில் சிக்க வைத்தார். ஸ்ரீதர் ஆடினாலே நல்லாருக்கும். அதேபோல் வேல்முருகன் மாரியாத்தாளுக்கு என்றே இருக்க ஆள் போல. நல்லா பாடுவார். வேல்முருகன் பாட்டு எப்பவுமே பிடிக்கும். வேல்முருகன் மனசுல இருந்து பாடிருக்கார். மெட்ராஸ் கானா பாடல்களை மேடையில் அழகாக பாடிய தம்பிகளுக்கு ஹேட்ஸ் ஆப்!

கானா கும்பலோட எல்லாம் சுத்துனவன் தான். ஆனா இந்தப் பசங்க நல்லா பாடினாங்க. தென்மா எக்ஸ்லண்டா மியூசிக் பண்ணிருக்கார். சதிஷும் மியூசிக் பண்ணிருக்கான். கேமராமேன் நல்ல உழைப்பைக் கொடுத்திருக்கார். இந்த ஹீரோயின் புரொடக்சன்ல இருந்தேன்னு சொன்னது ஆச்சர்யம். சமயமுரளி இந்தப்படத்தின் கதையைச் சொன்னார். அருமையாக இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களை நாம் குட்ட குட்ட அவர்கள் சிலிர்த்தெழுவார்கள். இயக்குநர் இப்படியொரு கதையை எடுத்ததுக்கு ஹேட்ஸ் ஆப். சிலர் நான் கீழ இருந்து வந்தேன் அதனால் இப்படி படம் எடுத்தேன் என்பார்கள். ஆனால் சமயமுரளி மேலே இருந்து வந்தவர். இப்பலாம் யார்யார்லாமோ நடிக்க வந்துட்டாங்க. சனியன் நானூறு படம் நடிச்சிட்ட பிறகும் நானே சிலரிடம், நான் நடிப்பேன்னு சொல்ல வேண்டியதிருக்கு.

. எல்லாரும் ஓடிடி ன்னு சொல்லிட்டிருக்காங்க. எல்லா பெரிய ஹீரோக்களுக்கும் சொல்றேன். இப்பம் கொடுப்பான் ஓடிடி. பிறகு அவனே பிக்ஸ் பண்ணுவான். படம்னா தியேட்டர்ல தான் பார்க்கணும்.

இந்தக் கனல் படத்தை நான் பார்க்காமலே பேசமுடியும். இயக்குநரிடம் கனலா அனலா என்ன? என்று கேட்டேன். நடிகை தமன்னாவைப் பார்த்து வியந்தேன். அந்தப்பொண்ணை சுத்திச்சுத்தி பார்த்தேன். ஒரு இடமும் கருப்பும் இல்ல. இந்தப்பொண்ணு காவ்யாவும் தமன்னா போல அவ்ளோ கலரு. நல்லா நடிச்சிருக்கு பொண்ணு. அற்புதமான குருப் இது. சினிமாவைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். ஒற்றுமையாக இருங்கள். சினிமாவில் ஒற்றுமை தான் முக்கியம். கமல் எல்லாம் எவ்வளவு திறமை பாருங்க. இந்த நேரத்துலயும் நம்பர் ஒன் கலெக்‌ஷனை எடுத்தான் பாருங்க. அதான் திறமை

கீழ இருக்கவனை பத்தி படம் எடுக்குற சமயமுரளி மனசுக்கு இந்தப்படம் பெரிதாக ஹிட் ஆகும்” என்றார்

இயக்குநர் சமயமுரளி பேசியதாவது,

“இந்தப் பங்ஷனில் முதலில் இருந்து பேசிய அனைவருக்கும் நன்றி. இந்த படத்தின் சார்பாக ஒட்டுமொத்தமாக நன்றி சொல்லவேண்டும் என்றால் எம்.ஜி.ஆர் நகரில் இருக்கும் மக்களுக்குத் தான் சொல்லவேண்டும். கீழே இருப்பவர்கள் எல்லாம் மேலே வரவேண்டும் என்பது தான் இப்படத்தின் கரு. எம்.ஜி.ஆர் நகரில் வாழும் பானு அக்கா ஒரு முஸ்லிம். ஆனால் அவர் வீட்டில் தான் அய்யனார் சாங் எடுத்தோம். பணம் மட்டும் சந்தோசம் அல்ல..என்பதை எம்.ஜி.ஆர் நகர் மக்களிடம் தான் கண்டோம். அங்கு எல்லா மக்களும் சந்தோசமாக இருப்பார்கள்..இந்தப்படம் எடுத்த பிறகுதான் பாட்டு வைக்கணும் என்று தோன்றியது. சென்னை மண்ணு என்ற பாட்டை எழுதினோம். அதை கானாமுத்து அழகாக பாடியிருந்தார். தென்மாவின் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தைப் பார்த்துவிட்டு அவரை அணுகினேன். சதிஷ் சக்ரவர்த்தி தென்மா இருவரும் மியூசிக் பண்ணிருக்காங்க. ஜெய்பாலா ஒரு தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல் எல்லாமுமாகவும் வேலை செய்தார்.

ஸ்வாதி நல்லா நடிச்சுக் கொடுத்தார். காவ்யா நிறைய பெண்களை நடிக்க அனுப்பினார். பின் அவரையே நடிக்கச் சொன்னேன். ஆனால் அவர் இவ்வளவு அழகாக நடிப்பார் என்று நினைக்கவில்லை. அவர் பெரிய நடிகையாக வருவார். இந்த சினிமாத்துறைக்கு வருவதற்கு என்னை அனுமதித்த என் மனைவிக்கும் நன்றி. இந்தப்படம் வெற்றி பெறுவதற்கு மீடியா சப்போர்ட் வேணும்” என்றார்

நடிகர்கள் :
காவ்யா பெல்லு
ஸ்ரீதர் மாஸ்டர்
ஸ்வாதி கிருஷ்ணன்
ஜான் விஜய் மற்றும் பலர்

தயாரிப்பு – The Nightangle Production
எழுத்து ,இயக்கம் – சமய முரளி

இசை -தென்மா & சதிஷ் சக்ரவர்த்தி
ஒளிப்பதிவு – பாஸ்கர்
மக்கள் தொடர்பு – பரணி அழகிரி , திருமுருகன்

Cinema News Tags:கனல் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

Post navigation

Previous Post: தமிழ் திரைப்படத் துறையின் நிலை மற்றும் சாத்தியக்கூறுகள்” குறித்த நிகழ்ச்சியை தமிழ் திரையுலக பிரமுகர்களுடன் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் (என்எஃப்டிசி) நடத்தியது
Next Post: KANAL Movie Music Launch many Celebrities Reaction

Related Posts

shalini-pandey-without dress-indiastarsnow.com ஷாலினி பாண்டே தண்ணீர் தொட்டியில் ஆடை இல்லாமல்!!!! Cinema News
Sivaangi’s recent viral Deewana song cross 1M plus views on Social Media Cinema News
‘புஷ்பா- தி ரைஸ்’ படத்தின் ரஷ்ய மொழி ட்ரைய்லர் வெளியானது! ‘புஷ்பா- தி ரைஸ்’ படத்தின் ரஷ்ய மொழி ட்ரைய்லர் வெளியானது! Cinema News
‘பான் இந்திய அளவிலான நட்சத்திர நடிகரான பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது என நடிகை தமன்னா தெரிவித்திருக்கிறார் Cinema News
குத்துக்கு பத்து' குழு கலந்துகொண்ட கல்லூரி கல்சுரல் விழா ! ‘குத்துக்கு பத்து’ குழு கலந்துகொண்ட கல்லூரி கல்சுரல் விழா ! Cinema News
மாஹாவீர்யார் நிவின் பாலி நடிப்பில் “மாஹாவீர்யார்” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme