Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஒய் ஜி மகேந்திராவின் ‘சாருகேசி’ நாடக குழுவிற்கு இன்ப அதிர்ச்சி அளித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

Posted on June 29, 2022 By admin

ஜூன் 26-ஆம் தேதியை நடிகர் ஒய் ஜி மகேந்திராவின் ‘சாருகேசி’ நாடக குழுவிற்கு ஒரு மறக்க முடியாத நாளாக மாற்றியுள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

இது தொடர்பாக பேசிய ஒய் ஜி மகேந்திரா கூறியது பின்வருமாறு:

“உறவினர் என்பதை விட நல்ல நண்பராகத் தான் ரஜினிகாந்த் என்னோடு பழகி கொண்டு இருக்கிறார். குறிப்பாக எனது நாடகங்களுக்கு அவர் மிக பெரிய ரசிகர். சாருகேசி நாடகம் பற்றி நான் ஏற்கனவே அவரிடம் கூறியுள்ளேன். அதை தொடர்ந்து திடீர் என்று ஒரு நாள் எனக்கு அழைப்பு வந்தது. நாரதகான சபாவில் நடைபெறும் சாருகேசி நாடகத்தில் ரஜினிகாந்த் பார்வையாளராக கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

சொன்னதைப் போலவே அவர், அவரது மனைவி மற்றும் மகளுடன் நாடகத்தை முழுமையாக பார்த்து நாடகம் முடிந்தவுடன் குழுவில் உள்ள அனைவரையும் வெகுவாக பாராட்டினார்.

என்னை கட்டிப்பிடித்த அவர், இந்த நாடகத்தில் நான் மகேந்திரனை பார்க்கவில்லை, நடிகர் திலகம் சிவாஜி அவர்களை தான் பார்த்தேன் என்று கூறியதை விட பெரிய பாராட்டு எனக்கு வேறு எதுவும் இல்லை.

மேலும் அன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் ரஜினிகாந்த் அவர்களால் அதிக நேரம் செலவிட முடியவில்லை. வீட்டுக்கு ஒரு நாள் அனைவரையும் அழைப்பதாக சொல்லி விட்டு சென்றார்.

அன்று இரவு நாடகத்தின் கதாசிரியர் வெங்கட் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு வெகு நேரம் பேசியுள்ளார். அந்த நாடகம் அவரிடம் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

ஜூன் 25-ஆம் தேதி ரஜினிகாந்த் வீட்டில் இருந்த்து ஒரு அழைப்பு வந்தது. சாருகேசி குழுவினரை அழைத்து கொண்டு வீட்டிற்கு வருமாறு கூறினார்கள்.

ஜூன் 26 அன்று ஒட்டுமொத்த குழுவும் ரஜினிகாந்த் அவர்களின் இல்லத்திற்கு சென்றோம். அப்பொழுது ஒவ்வொருவராக ரஜினிகாந்த் பாராட்டினார். மேலும் அவரது நாடக அனுபவங்களை பற்றி கூறினார்.

“ஒரு நாடக ஒத்திகைக்கு எனது நண்பர் ராஜ் பகதூர் அழைத்து சென்றிருந்தார். அன்று துரியோதனனாக நடிக்க வேண்டியவர் வராததால் அவருக்கு பதிலாக என்னை நடிக்கும்படி அந்த குழுவினர் கேட்டுக்கொண்டனர்,” என்று ரஜினி தெரிவித்தார்.

ஒத்திகையில் அவரது நடிப்பை கண்டு வியந்த குழுவினர் அவரை நாடகத்தில் நடிக்க வைத்தனர். அவரது நண்பரின் ஊக்கத்தில் அந்த நடத்தில் துரியதோணனாக நடித்தார். அவரது நடிப்பிற்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

பாராட்டு பெற்ற அந்த ஒரு தருணம் தான் எனது வாழக்கையியை திசை திருப்பியது என்று அவர் கூறினார். அது தான் தனது நடிப்பு வாழ்க்கைக்கு ஆரம்பமாக இருந்தது என்றும் அவர் பெருமையாக கூறினார்.

சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்கள் ஒரு ரசிகராக எங்களிடம் பழகியது எங்கள் வாழ்வின் மிகவும் சிறப்பான ஒரு தருணம்.”

இவ்வாறு ஒய் ஜி மகேந்திரா கூறினார்.

Cinema News Tags:ஒய் ஜி மகேந்திராவின் 'சாருகேசி' நாடக குழுவிற்கு இன்ப அதிர்ச்சி அளித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

Post navigation

Previous Post: Udhayanidhi Stalin appreciates My Dear Bootham Movie Team
Next Post: தமிழ் திரைப்படத் துறையின் நிலை மற்றும் சாத்தியக்கூறுகள்” குறித்த நிகழ்ச்சியை தமிழ் திரையுலக பிரமுகர்களுடன் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் (என்எஃப்டிசி) நடத்தியது

Related Posts

போதை பொருளுக்கு எதிரான குறும்பட போட்டி என்பதால் உடனே ஒப்புக்கொண்டு வந்தேன். அமைச்சர் உதயநிதி போதை பொருளுக்கு எதிரான குறும்பட போட்டி என்பதால் உடனே ஒப்புக்கொண்டு வந்தேன். அமைச்சர் உதயநிதி Cinema News
ஐரோப்பாவை கலக்கவுள்ள யுவன் ஷங்கர் ராஜா ஜெர்மனி, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பிரமாண்ட இசை நிகழ்ச்சிகளுடன் ஐரோப்பாவை கலக்கவுள்ள யுவன் ஷங்கர் ராஜா Cinema News
தலைவன் இருக்கிறான் பட ஒப்பந்தத்தை இரத்து செய்து கொள்ளலாம் தலைவன் இருக்கிறான் பட ஒப்பந்தத்தை இரத்து செய்து கொள்ளலாம்?? Cinema News
indiastarsnow.com தல 60 படப்பிடிப்பு இம்மாதம் துவங்க உள்ளது Cinema News
மை டியர் பூதம்”குழந்தைகளின் அழகான உலகத்தை நமக்கு காட்டும் - இயக்குநர் N ராகவன் மை டியர் பூதம்”குழந்தைகளின் அழகான உலகத்தை நமக்கு காட்டும் – இயக்குநர் N ராகவன் Cinema News
கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் சாணிக்காயிதம் திரைப்படத்தின்சிறப்புக் காட்சி வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் சாணிக்காயிதம் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme