Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

SonyLIV ஒரிஜினல் சீரிஸ் “மீம் பாய்ஸ்’ டீஸர் வெளியானது !!!

SonyLIV ஒரிஜினல் சீரிஸ் “மீம் பாய்ஸ்’ டீஸர் வெளியானது !!!

Posted on June 27, 2022 By admin

SonyLIV சோனிலிவ் தமிழ் ஓடிடி தளங்களில் சிறந்த படைப்புகளை தொடர்ந்து வழங்கி வருவதால், மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பை பெற்றுள்ளது. மக்களை கவரும் சோனி லிவ் தளத்தின்அடுத்த ஒரிஜினல் படைப்பாக, பல திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அடங்கிய ‘மீம் பாய்ஸ்’ தொடர் தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளது. மீம் பாய்ஸ் தொடரின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நான்கு கல்லூரி மாணவர்கள் ஒரு தனிப்பட்ட மீம் பேஜ்ஜை நடத்துகிறார்கள்,அதில் அவர்களின் ஒடுக்குமுறை மிகுந்த கல்லூரி நிர்வாகத்தை நகைச்சுவையாக காட்ட ஆரம்பிக்க, அது தற்செயலாக கல்லூரி முழுவதும் ஒரு புரட்சியை உருவாக்குகிறது. ராஜீவ் ராஜாராம், த்ரிஷ்யா கௌதம் ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடரை, அருண் கௌஷிக் இயக்கியுள்ளார். இந்த தொடரில் குரு சோமசுந்தரம், படவா கோபி, ஆதித்ய பாஸ்கர், சித்தார்த் பாபு, ஜெயந்த், நம்ரிதா மற்றும் நிகில் நாயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். Rainshine Studios தயாரிப்பில், ஷோ ரன்னராக கோகுல் கிருஷ்ணா பணியாற்றுகிறார்.

தொழில்நுட்பக் குழுவில் A. கோகுல் கிருஷ்ணா (ஷோ ரன்னர்), ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி (ஒளிப்பதிவு), கோபால் ராவ் (இசை), ராகுல் ராஜ் (எடிட்டிங்), ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (ஒலி வடிவமைப்பாளர்), Wide-Angle Creation (லைன் புரொடக்ஷன்), பிரேம் நவாஸ் (தயாரிப்பு வடிவமைப்பாளர்), பிரம்மா ஸ்டுடியோஸ் (போஸ்ட் புரொடக்ஷன்), ரஸ்ஸல் பின்டோ (எக்ஸிகியூட்டிவ் புரடக்சன்)ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

மீம் பாய்ஸ் தொடர் மட்டுமல்லாமல், SonyLIV தன் பார்வையாளர்களுக்கு முழுமையான பரவசத்தை அளிக்கும், நம்பிக்கைக்குரிய ஒரிஜினல் படைப்புகளின் பரந்த வரிசையை வெளியீட்டிற்கு தயாராக வைத்துள்ளது. இந்த படங்கள் மற்றும் தொடர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Cinema News Tags:SonyLIV ஒரிஜினல் சீரிஸ் “மீம் பாய்ஸ்’ டீஸர் வெளியானது !!!

Post navigation

Previous Post: SonyLIV Original Series “Meme Boys’ Teaser is out now!!!
Next Post: மாயோனைக் காணச் சென்ற ரசிகர்களுக்கு கிடைத்த கிருஷ்ணர் வேட வரவேற்பு

Related Posts

#PonniyinSelvan1 team arrived at DELHI ✨🤩 Cinema News
புதிதாக வாய்ப்பு தேடும் நடிகர்களுக்கு காக்டெய்ல் கவின் கூறும் வழிகள்-indiastarsnow.com புதிதாக வாய்ப்பு தேடும் நடிகர்களுக்கு காக்டெய்ல் கவின் கூறும் வழிகள் Cinema News
திரில்லர் பாணியில் திரில்லர் பாணியில் வால்டர் இசை வெளியீட்டு விழா! Cinema News
பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் அவர்களுடைய புதிய திரைப்படம் "யதா ராஜா ததா ப்ரஜா" இன்று பூஜையுடன் இனிதே ஆரம்பமானது பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் நாயகனாகும் புதிய திரைப்படம் “யதா ராஜா ததா ப்ரஜா” இனிதே ஆரம்பமானது !! Cinema News
நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் Cinema News
அஜித்திற்கு இவ்வளவு திறமை உள்ளதா-indiastarsnow.com தல அஜித்திற்கு இவ்வளவு திறமை உள்ளதா!!! Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme