Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

மாயோன் திரைவிமர்சனம்

மாயோன் திரைவிமர்சனம்

Posted on June 25, 2022 By admin

தொல் பொருள் ஆராய்ச்சி நிபுணராக பணிபுரிந்து வருகிறார் நாயகன் சிபி சத்யராஜ். இவர் பழங்கால சிலைகளை திருடி விற்கும் ஹரிஷ் பெராடிவுடன் கூட்டணி வைத்து பணம் சம்பாதித்து வருகிறார். சிலை கடத்தல் கும்பலை போலீஸ் ஒரு பக்கம் தேடி வருகிறார்கள். இந்நிலையில், மாயோன் மலையில் இருக்கும் கோயிலில் ரகசிய அறை இருப்பதாகவும், அதற்குள் புதையல் இருப்பதாகவும் ஹரிஷ் பெராடிக்கு தகவல் வருகிறது. அந்த புதையலை எடுக்கும் பணியை சிபி சத்யராஜுக்கு ஹரிஷ் பெராடி கொடுக்கிறார். அந்த கோவிலுக்குள் செல்லும் சிபி சத்யராஜுக்கு பல தடைகள் வருகிறது. இறுதியில் சிபி சத்யராஜ் கோவிலுக்குள் சென்று புதையலை எடுத்தாரா. என்பதே படத்தின் மீதிக்கதை.

சிபிராஜ், ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் தான்யா ரவிச்சந்திரன், சிபி சத்யராஜ்க்கு பக்கபலமாக நடித்திருக்கிறார். அதிகாரியாக வரும் கே.எஸ்.ரவிகுமார், ஊர் தலைவராக வரும் ராதாரவி ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். வில்லத்தனத்தில் அசத்தி இருக்கிறார் ஹரிஷ் பெராடி. தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம், திரைக்கதை எழுதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

ஆன்மீகத்தையும் அறிவியலையும் கலந்து அமைக்கப்பட்ட திரைக்கதைக்கு ஏற்றவாறு இயக்கி இருக்கிறார் இயக்குனர் என்.கிஷோர். ஆன்மீகமா, அறிவியலா என்று வேறுபாடு காட்டாமல், படமாக்கி இருப்பது சிறப்பு. கிராபிக்ஸ் காட்சிகள் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. அதுபோல் காட்சிகளின் நடுவே வரும் சிறு கதைகளும், அதை படமாக்கிய விதமும் ரசிக்கும் படி உள்ளது.

Cinema News, Movie Reviews Tags:மாயோன் திரைவிமர்சனம்

Post navigation

Previous Post: ZEE5 presents Fingertip Season 2 becomes an OTT blockbuster!!
Next Post: மாமனிதன் திரைவிமர்சனம்

Related Posts

Bigg Boss Tamil 3-losliya army-www.indiastarsnow.com பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவின் குடும்பம் கதறி அழுது ??? Cinema News
இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் கேப்டன் திரைப்படம் (செப்டம்பர் 8, 2022) உலகம் முழுக்க வெளியாகிறது இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் கேப்டன் திரைப்படம் (செப்டம்பர் 8, 2022) உலகம் முழுக்க வெளியாகிறது Cinema News
பொம்மை நாயகி திரை விமர்சனம் Cinema News
actress-priya-warrier-eye-wink-scene மலையாள நடிகை பிரியா வாரியரின் 40 வயது காதலர் Cinema News
சென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய கருத்துகளை பதிவு செய் சென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய “கருத்துகளை பதிவு செய் Cinema News
நேச்சுரல் சலூன்ஸ் சி.கே. குமரவேல் மற்றும் ஜூனியர் குப்பண்ணா பாலச்சந்தர் இணைந்து நன்றாக உண்ணுங்கள், அழகாக இருங்கள் என்கிற பிரச்சாரத்தை இந்த நிறுவனங்கள் முன்னெடுத்துள்ளன. Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme