Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

“வேழம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

“வேழம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Posted on June 24, 2022 By admin

சென்னை 21 ஜூன் 2022 “வேழம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில், K4 Kreations சார்பில் கேசவன் தயாரிப்பில், சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் படம் “வேழம்”. ஜுன் 24 திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது.
இவ்விழாவினில்
பாடலாசிரியர் தீபிகா பேசுகையில்..,
சந்தீப் எனது பள்ளி நாட்களில் இருந்தே நெருங்கிய நண்பர், இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு வரிகள் எழுத அவர் எனக்கு வாய்ப்பளித்தது மிகவும் மகிழ்ச்சி. இசையமைப்பாளர் ஜானு சந்தர் எங்கள் வகுப்புத் தோழரும் கூட. நண்பர்களுடன் இணைந்து வேலை பார்த்தது ஒரு அற்புதமான அனுபவம். இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் கேசவன் சாருக்கு நன்றி.
நடிகர் ஷாம் சுந்தர் பேசுகையில்..,
நான் பிரான்சிஸ் என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். இயக்குனர் சந்தீப்புடன் சில குறும்படங்களில் பணிபுரிந்துள்ளேன், அவருடைய முதல் திரைப்படத்தில் எனக்கு ஒரு கதாபாத்திரம் தர வேண்டுமென எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பேன். இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் கேசவனுக்கு நன்றி. என்னைப் போன்ற ஒரு புதுமுகத்திற்கு, எனது சக நடிகர்களான ஜனனி, ஐஸ்வர்யா ஆகியோர் உறுதுணையாக இருந்ததற்கு நன்றி. படம் நன்றாக வந்துள்ளது, இப்படம் கண்டிப்பாக பார்வையாளர்களை கவரும் நன்றி.
இதுகுறித்து இசையமைப்பாளர் ஜானு சந்தர் பேசுகையில்…,
பைரவா, காலா போன்ற படங்களுக்கு நான் கிடார் வாசித்துள்ளேன். இந்த படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு அளித்த சந்தீப்பிற்கு நன்றி. நடிகர்கள் அசோக் செல்வன், ஜனனி, ஐஸ்வர்யா ஆகியோர் நடிப்பை அருகிலிருந்து பார்த்து வியந்தேன். இந்தப் படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பை அளித்ததற்கு தயாரிப்பாளர் கேசவன் சாருக்கு நன்றி கூறுகிறேன். பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டிலும் எனது திறமையை வெளிக்காட்ட நல்ல ஸ்கோப் இருந்தது. அனைவரும் பார்த்து ரசிக்கும் நல்ல படமாக வேழம் திரைப்படம் இருக்கும். நன்றி
SP Cinemas கிஷோர் பேசுகையில்..,
SP Cinemas எல்லா படங்களிலும் ஊடகங்கள், பத்திரிக்கைகள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நல்ல ஆதரவை எப்போதும் பெற்று வருகிறது. அந்த வரிசையில் ஜூன் 24 முதல் பார்வையாளர்கள் திரையரங்குகளில் ரசிக்கக்கூடிய ஒரு நல்ல படமாக வேழம் இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்.
நடிகை ஐஸ்வர்யா மேனன் பேசுகையில்.., என்னை படத்தில் நடிக்க வைத்த சந்தீப் ஷாமுக்கு நன்றி. லீனா என்ற கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன், இது ஒரு அழுத்தமான கதாபாத்திரம். இந்த திரைப்படத்திற்கு முழு ஆதரவாக இருந்த தயாரிப்பாளர் கேசவனுக்கு நன்றி. படப்பிடிப்பு ஆரம்பித்த போது தான் அவரைப்பார்த்தோம் அதற்கு பிறகு அவரை பார்ப்பது இது இரண்டாவது முறையாகும். அசோக் செல்வன் ஒரு சிறந்த நடிகர், எங்கள் கெமிஸ்ட்ரி அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். ஜனனியுடன் எனக்கு போர்ஷன்கள் இல்லை, ஆனால் அவர் மிக இனிமையான நபர். இயக்குநர் ஒரு பெர்ஃபெக்ஷனிஸ்ட், அவர் இந்த திரைப்படத்தை மிகச்சிறப்பாக உருவாக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் ஒரு தீவிரமான உளவியல் த்ரில்லர். சிறந்த தொழில்நுட்பக் குழு இணைந்து உருவாக்கியுள்ளார்கள், ரசிகர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை இப்படம் வழங்கும்.
நடிகை ஜனனி பேசுகையில்,
பொதுவாக புதுமுகங்களுடன் இணைந்து பணியாற்றும்போது சில அசௌகர்யம், சந்தேகம் இருக்கும். ஆனால், இயக்குனர் சந்தீப் ஷ்யாம் அதில் விதிவிலக்காக மிக அற்புதமான உழைப்பாளியாக இருந்தார். அசோக்கும் நானும் தெகிடியில் இணைந்து பணியாற்றியுள்ளோம், இப்போது மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளோம். இந்தப்படத்தின் சில காட்சிகளை நான் பார்த்திருக்கிறேன், அது நன்றாக வந்திருக்கிறது. பொதுவாக இரண்டு நடிகைகள் ஒரு திரைப்படத்தில் இணைந்து பணிபுரியும் போது நடிகைகளுக்குள் சில சச்சரவுகள் இருக்கும் என்று ஒரு தவறான கருத்து உள்ளது, ஆனால் அது உண்மையல்ல. நானும் ஐஸ்வர்யாவும் மிக நல்ல நண்பர்களாக பழகினோம். ஜானுவின் இசையமைப்பு இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். அவரிடமிருந்து எனக்கு ஒரு நல்ல பாடல் கிடைத்ததில் மகிழ்ச்சி. படத்தை சிறந்த முறையில் தயாரித்ததற்காக தயாரிப்பாளர் கேசவன் சாருக்கு நன்றி. வேழம் ஜூன் 24 அன்று வெளியாகிறது. இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும்.
இயக்குனர் சந்தீப் ஷ்யாம் பேசுகையில், எனக்கு டைரக்சன் மீதுள்ள ஆர்வத்தை புரிந்து உணர்ந்து கொண்ட கேசவன் சார் போன்ற தயாரிப்பாளரைப் பெற்ற அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. அவருக்காக சில விளம்பரப் படங்கள் செய்துள்ளேன். அவர் இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் பெரிய அளவில் வெளியாவதற்கு SP Cinemas மிகப் பெரும் பலமாக அமைந்துள்ளது. அசோக் இப்படத்தில் பல தோற்றங்களில் தோன்றுவதால் அதற்காக உயிரைக் கொடுத்து உழைத்துள்ளார். ஜனனி இந்த படத்தில் ஒரு சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். ஐஸ்வர்யா ஒரு நல்ல நடிகை அவரது நடிப்பு இந்த படத்தில் அபாரமாக இருக்கும் . இசையமைப்பாளர் ஜானு என் வகுப்பு தோழர், நாங்கள் இணைந்து இப்படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எடிட்டர் சிறப்பாக பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவு இப்படத்திற்கு மிகப்பெரிய தூணாக அமைந்துள்ளது. இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன், இந்த படத்தை நீங்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
K4 Kreations தயாரிப்பாளர் கேசவன் பேசுகையில்..,
இது எனக்கு ஒரு உணர்ச்சிகரமான தருணம். இந்த திரைப்படத்திற்கு அனைவரும் தங்கள் முழு ஆதரவையும் அளித்ததை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. டிரெய்லர் மற்றும் பாடல்களில் அவர்களின் நடிப்பு மற்றும் குழுவின் உழைப்பை பார்த்து மிக உற்சாகமாக இருக்கிறேன். இந்த திரைப்படத்தை வடிவமைக்க எனக்கு உதவிய ஒட்டுமொத்த குழுவிற்கும் நன்றி. அவர்களுடன் பணிபுரிந்து நிறைய நல்ல அனுபவத்தைப் பெற்றுள்ளேன். இந்தப் படத்தை பெரிய அளவில் வெளியிட உதவி செய்த SP Cinemas க்கு நன்றி. K4 Kreations தயாரிப்பாளர் கேசவன் தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்கும். வருங்காலத்தில் இன்னும் பல நல்ல படங்கள் வரும்.அனைவரும் இந்தப் படத்தை ஆதரித்து வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
படத்தின் தொழில்நுட்ப குழு:
சக்தி அரவிந்த்- ஒளிப்பதிவு, A.K. பிரசாத் – எடிட்டர், சுகுமார் R – கலை இயக்குனர், தினேஷ் சுப்புராயன்- சண்டை பயிற்சி, M.சரவணக்குமார் – சவுண்ட் மிக்ஸிங், சுரேஷ் சந்திரா ரேகா D’ One – மக்கள் தொடர்பு.
SP Cinemas இப்படத்தினை உலகமெங்கிலும் தியேட்டரில் வெளியிடுகின்றனர். படம் ஜூன் 24, 2022 அன்று தியேட்டரில் வெளியாகிறது.

Cinema News Tags:“வேழம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Post navigation

Previous Post: திருமூர்த்திக்கு இசை கற்றுக் கொள்வதற்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக் கொள்கிறேன் உலகநாயகன் கமல்ஹாசன்!!
Next Post: ஆஹா வழங்கும் ஆன்யா’ஸ் டுடோரியல் இணைய தொடர் பத்திரிகையாளர் சந்திப்பு !

Related Posts

நயன்தாரா நடித்த “O2” திரைப்படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி பிரத்யேகமாக வெளியிடுகிறது நயன்தாரா நடித்த “O2” திரைப்படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி பிரத்யேகமாக வெளியிடுகிறது Cinema News
பேய்மாமா திரைப்படத்தில் வடிவேலுக்கு பதிலாக யோகிபாபு பேய்மாமா திரைப்படத்தில் வடிவேலுக்கு பதிலாக யோகிபாபு Cinema News
கேக் வெட்டி வெற்றியைக் கொண்டாடிய 'மாயோன்' பட குழு கேக் வெட்டி வெற்றியைக் கொண்டாடிய ‘மாயோன்’ பட குழு Cinema News
துணிவு திரை விமர்சனம் துணிவு திரை விமர்சனம் Cinema News
சித்தார்த் நடிப்பில் “அருவம்” சித்தார்த் நடிப்பில் “அருவம்” Cinema News
பேப்பர் ராக்கெட்” வெற்றியைப் பற்றி இசையமைப்பாளர் சைமன் கே.கிங் Music Director Simon K.King, on the success of his debut web series – “Paper Rocket” Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme