Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

வீட்ல விசேஷம்” திரைப்பட வெற்றி விழா !

வீட்ல விசேஷம்” திரைப்பட வெற்றி விழா !

Posted on June 23, 2022 By admin

RJ பாலாஜி கூறியதாவது.,
“வீட்டுல விஷேசம் திரைப்படம் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வசூல் பற்றி பலரும் பல விதமாக கூறிகொண்டிருக்கின்றனர். படத்தின் வசூல் படத்தின் வெற்றி கிடையாது என்பதை நான் நம்புகிறேன். இருந்தாலும் எங்களது முந்தைய படங்களை விட இந்த படத்தின் வசூல் அதிகமாக இருக்கிறது. இந்த படம் மக்களுடைய வார்த்தைகளால் வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வருடத்தின் லாபகரமான படங்களில் ஒரு படமாக இந்த படம் கண்டிப்பாக இருக்கும் என நாங்கள் உறுதியாய் கூறுகிறோம். இந்த படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் இல்லை, கமர்சியல் மசாலா படங்களில் இருக்கும் அம்சங்கள் இந்த படத்தில் இல்லை. இருந்தாலும் இந்த படம் வெற்றி பெறும் என்று நாங்கள் நம்பினோம். கொரோனாவிற்கு பிறகு, மக்கள் பெரிய நடிகர்கள் நடித்த படத்திற்கு மட்டுமே திரையரங்கிற்கு வருவார்கள் என்ற பேச்சு இருந்தது. ஆனால் இந்த கதையின் மேல் நாங்கள் நம்பிக்கை வைத்திருந்தோம். இந்த படத்தை அதற்குண்டான ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்து வேலை பார்த்தோம். Romeo Pictures ராகுல், இந்த படத்தை லாபகரமான படமாக மாற்றுவதற்கு எல்லாவிதமான பணிகளையும் சிறப்பாக செய்தார். ஒரு கடைநிலை ஊழியர் போல் இந்த படத்தில் பணியாற்றினார். இந்த படத்தின் வெற்றிக்கு அவர் கடுமையாக உழைத்தார். சமீபத்தில் விஜய் சாரிடம் கதை சொல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரிடம் பான் இந்திய கதை ஒன்றை கூறினேன். அவர் கதையை கேட்டு, இதை திரைக்கதையாக உருவாக்க எவ்வளவு நாள் ஆகும் என கேட்டார். நான் ஒரு வருடம் ஆகும் என கூறினேன். அவரும் என்னை திரைக்கதையை உருவாக்க அவ்வளவு நாளாகுமா எனக்கேட்டார். ஒரு படத்தை வேகமாக உருவாக்குவதை விட, அதை சிறப்பாக மாற்றுவதற்கு தேவைப்படும் கால அவகாசத்தை கொடுக்க வேண்டும் என்று நான் விரும்புவேன். அதை நோக்கியே பயணிப்பேன் என்றேன். விஜய் படம் கண்டிப்பாக செய்வேன், இந்த படத்திற்கு கிடைத்த விமர்சனங்கள் எங்களுக்கு பெரிய சந்தோசத்தை கொடுத்தது. எங்களுக்கு ஆதரவு அளித்த பத்திரிக்கையாளர்களுக்கு எங்களது படக்குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.

இயக்குனர் NJ சரவணன் கூறியதாவது.,
இது போன்ற கதைகளை மக்களுக்கு கூற வேண்டும் என்று விருப்பப்பட்டு இந்த படத்தை உருவாக்கினோம். மக்கள் இந்த படத்திற்கு கொடுத்த பெரிய வரவேற்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் நினைத்ததை தாண்டி இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு அளித்த பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு எங்கள் படக்குழு சார்பாக நன்றியை கூறிகொள்கிறோம்.

வீட்ல விஷேசம் படத்தில் ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, KPAC லலிதா, பவித்ரா லோகேஷ், விஸ்வேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழுவில் கார்த்திக் முத்துக்குமார் (ஒளிப்பதிவு), விஜயகுமார் (கலை), RJ.பாலாஜி (வசனம்), பா.விஜய் (பாடல் வரிகள்), செல்வா RK (எடிட்டிங்), கிரிஷ் கோபாலகிருஷ்ணன் (இசை), தினேஷ் (நடன அமைப்பு), அக்சத் கில்டியல்-சாந்தனு ஸ்ரீவஸ்தவ் (கதை) திவ்யா நாகராஜன் (ஆடைகள்), S. விஜய் ரத்தினம் MPSE (ஒலி வடிவமைப்பு), AM ரஹ்மத்துல்லா (ஒலி கலவை), R. ஹரிஹர சுதன் (லார்வன் ஸ்டுடியோ) (விஷிவல் எபெக்ட்ஸ்), நந்தினி கார்க்கி (வசனங்கள்), ராஜராஜன் கோபால் (DI வண்ணக்கலைஞர்) ), ராமமூர்த்தி (ஸ்டில்ஸ்), M செல்வராஜ் (காஸ்ட்யூமர்), கபிலன் (பப்ளிசிட்டி டிசைன்ஸ்), N விக்கி (தயாரிப்பு நிர்வாகி), S.பாண்டியன் (முடி அலங்காரம்), N.சக்திவேல் (மேக்கப்), P.செல்வகுமார்-சிவ குமார் (தயாரிப்பு மேலாளர்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

Cinema News Tags:“வீட்ல விசேஷம் திரைப்பட டிரெய்லர் நாளை வெளியாகிறது !

Post navigation

Previous Post: பேயுடன் நட்பு கொள்ள ஆசை நாயகன் விது பாலாஜியிடம் விருப்பம் தெரிவித்த நடிகர் விஜய் ஆண்டனி :
Next Post: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில்

Related Posts

IMDb 2022ம் ஆண்டிற்கான ‘மிகவும் பிரபலமான இந்திய நடிகராக’ தனுஷ் தேர்வு Cinema News
நாவலை படமாக இயக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நாவலை படமாக இயக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி Cinema News
deal டீல்” DEAL திரைப்படம் காமெடி, அடிதடி கலந்து, ஜனரஞ்சகமான படமாக தயாராகிறது Cinema News
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ' சங்கத்தமிழன்' படத்துக்குச் சிக்கல் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ சங்கத்தமிழன்’ படத்துக்குச் சிக்கல் Cinema News
நடிகை ரோஜா அமைச்சராவது உறுதி! – குஷியில் ஆர்.கே.செல்வமணி Cinema News
‘தி நைட் மேனேஜர்’ எனும் இணைய தொடருக்கு இசையமைத்திருக்கும் சாம் சி எஸ் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme