Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Apollo Cancer Centre in collaboration with Datar Cancer Genetics launches Revolutionary Blood Test for early detection of Breast Cancer

மார்பக புற்றுநோய் கண்டறிதலில் மாபெரும் புதிய தொழில்நுட்ப உத்தியாக “ஈஸிசெக் பிரெஸ்ட்” அறிமுகம்

Posted on June 23, 2022 By admin

மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய புரட்சிகரமான இரத்தப் பரிசோதனை! டாட்டர் கேன்சர் ஜெனடிக்ஸ் உடன் இணைந்து அறிமுகம் செய்யும் அப்போலோ கேன்சர் சென்டர்

இந்தியா, ஜுன் 22, 2022: இந்தியாவில் தனியார் துறையில் மிகச்சிறந்த புற்றுநோய் மருத்துவமனையாகத் திகழும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ், புற்றுநோய் சிகிச்சையில் மிகநவீன தொழில்நுட்பங்கள் மீது தொடர்ச்சியான முதலீட்டின் மீது பொறுப்புறுதி கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, அறிகுறி தென்படாத நபர்களிடம் உயர் துல்லியத்துடன் ஆரம்ப நிலையிலேயே மார்பக புற்றுநோயைக் கண்டறியக்கூடிய புரட்சிகர இரத்தப் பரிசோதனையை டாட்டர் கேன்சர் ஜெனடிக்ஸ் ஒத்துழைப்போடு அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் வழங்குகிறது. இதன்மூலம் உரிய நேரத்தில் நோயறிதலும் மற்றும் உயிர்களை காப்பாற்றுவதற்கான சிகிச்சை வழங்கப்படுவதும் சாத்தியமாகும்.

மார்பக புற்றுநோய் நேர்வுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் மற்றும் மார்பக புற்றுநோய் மீதான விவாதங்கள் தொடர்புடைய சமூக விழிப்புணர்வும், புற்றுநோயியல் துறையில் தொழில்நுட்ப மேம்பாட்டு வரலாற்றில் மிக முக்கிய முன்னேற்றங்களுள் ஒன்றுக்கு வழிவகுத்திருக்கிறது. புற்றுநோய் தொடர்பான உரையாடல்களை மக்கள் மத்தியில் பரவலாக எடுத்துச் செல்ல வேண்டுமென்ற தீவிர ஆர்வத்தால் உந்தப்படும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ், இச்செயல்திட்ட அறிமுகத்தின் மூலம் புற்றுநோய் தங்களுக்கு வருவதற்கான சாத்தியம் பற்றி சரியான அறிவைப் பெறுவதற்கு பெண்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது. இரத்தப் பரிசோதனை மூலம் மிக எளிதான முறையில் புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங் சோதனைகளைப் பெண்கள் செய்து கொள்ளலாம். மிகச்சிறிய அளவு இரத்தத்தை பரிசோதனைக்காக எடுத்துக்கொள்ளும் ஈஸிசெக் – பிரெஸ்ட், புற்றுநோய் வளர்ச்சியில் முதல் கட்டத்திற்கு முன்னதாகவே மார்பக புற்றுநோயைக் கண்டறிவதற்கு உதவும். இந்தியாவெங்கிலும் அனைத்து அப்போலோ கேன்சர் சென்டர்களிலும் ஜுன் 22 -ம் தேதி முதல் ஈஸிசெக் பரிசோதனை கிடைக்கப்பெறும்.

அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் – ன் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர். பிரதாப் ரெட்டி இந்நிகழ்வில் கூறியதாவது: “புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது பற்றி விழிப்புணர்வை பரப்புகின்ற மற்றும் உலகத்தரத்திலான புற்றுநோய் சிகிச்சையை வழங்குகின்ற எமது செயல்திட்டத்தினை ஒட்டியதாக ஈஸிசெக் பிரெஸ்ட் செயல்திட்ட அறிமுகம் அமைகிறது. உரிய நேரத்திற்குள் நோயறிதலையும் மற்றும் உயிரிழப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான சிகிச்சையையும் உறுதி செய்கின்ற தரமான தொழில்நுட்ப முன்னேற்றம் என்ற இலக்கை நோக்கிய குறிக்கோளில் ஒரு முக்கியமான நிகழ்வாக ஈஸிசெக் பிரெஸ்ட் இருக்கிறது. டாட்டர் கேன்சர் ஜெனடிக்ஸ் உடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒத்துழைப்பு ஒரு புதியபாதை படைக்கும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. வகையினத்தில் மிகச்சிறந்த முன்னேற்றங்கள் மற்றும் சிகிச்சை வழிமுறைகளின் மூலம் மார்பக புற்றுநோய்களை கண்டறிவதற்கு அப்போலோ கேன்சர் சென்டர்ஸில் நாங்கள் சிறப்பான திறனும், நிபுணத்துவமும் கொண்டிருக்கிறோம். குடும்ப பராமரிப்பாளர்களாக முக்கியப் பொறுப்பு வகிக்கும் இந்தியப் பெண்கள் தாங்களாகவே முன்வந்து ஒரு வருடத்திற்கு குறைந்தது ஒருமுறையாவது இச்சோதனையை செய்துகொள்ள வேண்டுமென்றும், இதன்மூலம் மார்பக புற்றுநோய் ஆபத்தில்லாமல் நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யவும் வேண்டுமென்று பணிவன்புடன் நான் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். நோயறிதலிலிருந்து உரிய சிகிச்சை வரை, அனைத்து நேரங்களிலும் நோயாளிகளோடு அவர்களுக்கு ஆதரவாக இருக்கவும் மற்றும் பாதிப்பிலிருந்து மீண்டு குணமடைவதற்கு அவர்களுக்கு கனிவுடன் கூடிய சிகிச்சைப் பராமரிப்பை வழங்கவும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் உறுதியேற்று தன்னையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது.”

டாட்டர் கேன்சர் ஜெனடிக்ஸ் – ன் நிறுவனர் மற்றும் தலைவர் திரு. ராஜன் டாட்டர் இந்த பரிசோதனை குறித்துப் பேசுகையில், “துரதிருஷ்டவசமாக பெரும்பாலான புற்றுநோய்கள் வளர்ந்து முற்றிய நிலைகளிலேயே கண்டறியப்படுகின்றன. இதற்கு பலவீனப்படுத்துகின்ற தீவிர பக்கவிளைவுகள் மற்றும் சிகிச்சைத் தோல்விகள் போன்ற பெரிய அளவிலான இடர்வாய்ப்பைக் கொண்டிருக்கின்ற அதிதீவிரமான மற்றும் அதிகம் செலவாகின்ற சிகிச்சைகள் அவசியமாக இருக்கின்றன. ஈஸிசெக்-பிரெஸ்ட் என்பது, சர்வதேச ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க ஒத்துழைப்பிற்காக பல ஆண்டுகள் உழைப்பின் பலனாக உருவாக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, மக்கள் மீதான ஆய்வு சோதனைகளில் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. மிகச்சிறிய அளவில் எடுக்கப்படும் இரத்தத்தைப் பரிசோதிப்பதன் மூலம் அறிகுறி வெளிப்படாத நபர்களிடம் ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிவதை இச்சோதனை சாத்தியமாக்குகிறது. இதன்மூலம் வெற்றிகரமான சிகிச்சைகளுக்கான வாய்ப்புகளும், பாதிப்பிலிருந்து மீண்டு உயிர் பிழைப்பதற்கான விகிதாச்சாரமும் பெரிய அளவில் அதிகரிக்கும்.” என்று கூறினார்.

அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் -ன் செயலாக்க துணைத் தலைவர் மிஸ். ப்ரீத்தா ரெட்டி இந்நிகழ்வில் பேசுகையில், “நோயறிதல், சிகிச்சை மற்றும் புற்றுநோய்க்குப் பிந்தைய பராமரிப்பு என எதுவாக இருப்பினும் நோயாளியை மையமாகக் கொண்ட அணுகுமுறையையே அப்போலோவில் நாங்கள் பின்பற்றுகிறோம். ஈஸிசெக் – பிரெஸ்ட் செயல்திட்ட அறிமுகத்தின் மூலம் தங்களது தினசரி பொறுப்புகளிலேயே பரபரப்பாக மூழ்கிவிடுகின்ற பெண்களுக்கு வரக்கூடிய மார்பக புற்றுநோயை எளிதாகவும் மற்றும் ஆரம்ப நிலையிலும் கண்டறிவதை ஏதுவாக்குகின்ற ஒரு மிகப்பெரிய முன்னேற்ற நடவடிக்கையை நாங்கள் எடுத்திருக்கிறோம். எமது நிபுணர்களின்படி இந்தியாவில் ஏறக்குறைய 70% பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு வளர்ந்து முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுகிறது. இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்படுவது அவசியமாக இருக்கிறது. அப்போலோவில் ஆரம்ப நிலையிலேயே நோயறிதலுக்கான சுய பரிசோதனை செய்வதன் அவசியத்தை நாங்கள் < ...

Health News Tags:மார்பக புற்றுநோய் கண்டறிதலில் மாபெரும் புதிய தொழில்நுட்ப உத்தியாக “ஈஸிசெக் பிரெஸ்ட்” அறிமுகம்

Post navigation

Previous Post: Apollo Cancer Centre in collaboration with Datar Cancer Genetics launches Revolutionary Blood Test for early detection of Breast Cancer
Next Post: Actor Jai has sponsored books for Actress Manisha Priyadarshini UPSC IAS”

Related Posts

SIMS Hospital Conducts Successful High Performance Hip Replacement Surgery on 62 Year Old UK National through advanced technology SIMS Hospital Conducts Successful High Performance Hip Replacement Surgery on 62 Year Old UK National through advanced technology Health News
உணவே மரு‌ந்து உணவே மரு‌ந்து Health News
அடுத்த 2 நாளைக்கு வடகடலோர மாவட்டங்களை வெயில் வச்சு செய்யும்!!!!!!!! Health News
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும் என ஜெர்மனி கூறியுள்ளது Health News
நான் மிருகமாய் மாற’ திரைப்படத்தின் குழு பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு Health News
மித்ஷாவிடம் கேளுங்கள் என்னிடம் வேண்டாம்.ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்காத மோடி. Health News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme