Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

மாயோன் திரைப்படம் பார்வையற்றவர்களுக்காக சிறப்பு காட்சி‌!

மாயோன் திரைப்படம் பார்வையற்றவர்களுக்காக சிறப்பு காட்சி‌!

Posted on June 23, 2022June 23, 2022 By admin

சென்னை 23 ஜூன் 2022 நாளை வெளியாகும் சிபி சத்யராஜ், நடிப்பில் மாயோன் திரைப்படத்தை பார்வையற்றவர்களுக்காக சிறப்பு காட்சி!

நாளை வெளியாக உள்ள மாயோன் திரைப்படத்தை பார்க்க பார்வையற்றவர்களுக்கு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட உலகில் டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் அருண்மொழி மாணிக்கம் மாயோன் படத்தை தயாரித்து திரைக்கதை அமைத்துள்ளார்.
என் கிஷோர் என்பவர் படத்தை இயக்கியுள்ளார்.
சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கே எஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடிப்பில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.

ஆன்மீகத்தையும் அறிவியலையும் மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டீஸர், ட்ரைலர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் பார்வையற்றவர்களுக்காக பிரத்தியேகமாக ஆடியோ டிஸ்கிரிப்ஷனுடன் டீஸர், ட்ரைலர் ஆகியவை வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்றது.
மேலும் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக மாயோன் ரதம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக இந்த ரதம் பயணித்து வருகிறது.

இதற்கும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் நாளை வெளியாக உள்ள இந்த படத்திற்காக சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் காலை 8 மணிக்கு பார்வையாளர்களுக்காக ஆடியோ டிஸ்கிரிப்ஷனுடன் படத்தை திரையிட படக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதன் மூலம் பார்வையற்றவர்களுக்கும் மாயோன் படத்தை பார்த்த முழு திருப்தி கிடைக்கும்.
மேலும் இந்த படத்திற்காக திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக பெருமாளுக்கு மிகப்பெரிய பேனர் சென்னை ரோகினி திரையரங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக சைகோ திரைப்படம் பார்வையற்றவர்களுக்காக பிரத்யேக பாணியில் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Cinema News Tags:மாயோன் திரைப்படம் பார்வையற்றவர்களுக்காக சிறப்பு காட்சி‌!

Post navigation

Previous Post: Actor Munishkanth starrer “Middle Class”
Next Post: நடிகர் மாதவன் ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Related Posts

அங்காடித்தெரு மகேஷ் திருநங்கையாக மாறிய புகைப்படம் Cinema News
NTR 30 Team unleashed a massive Motion Poster NTR 30 Team unleashed a massive Motion Poster Cinema News
பிரபல நடிகர் பிக்பாஸ் வீட்டில் களமிறங்குகிறார் ! வைரலாகும் அஸ்வின் ட்விட்டர் பதிவு Cinema News
Cinema News
LIGER TEAM – THE VIJAY DEVERAKONDA, PURI JAGANNADH, CHARMME KAUR MEETS MEGASTAR CHIRANJEEVI AND SUPERSTAR SALMAN KHAN. LIGER TEAM – THE VIJAY DEVERAKONDA, PURI JAGANNADH, CHARMME KAUR MEETS MEGASTAR CHIRANJEEVI AND SUPERSTAR SALMAN KHAN. Cinema News
நடிகை வரலட்சுமி கொரோனா பரவலைத் தடுக்ககும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி-indiastarsnow.com நடிகை வரலட்சுமி சரத்குமார் கொரோனா பரவலைத் தடுக்ககும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி!! Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme