Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

லைகா புரொடக்ஷன்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் - பி வாசு இணையும் 'சந்திரமுகி 2'

லைகா புரொடக்ஷன்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் – பி வாசு இணையும் ‘சந்திரமுகி 2’

Posted on June 18, 2022 By admin

ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, ‘வைகை புயல்’ வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் ‘சந்திரமுகி 2’ எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். இதனை ‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசு இயக்குகிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் அவர்களின் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார். ‘பாகுபலி’, ‘ஆர் ஆர் ஆர்’ பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா பானு கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ படத்தின் மாபெரும் வசூல் சாதனையைத் தொடர்ந்து, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன் முதல் பாகம்’ படத்திற்கு சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றியைப் பெற்ற ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மிகப் பிரம்மாண்டமாக தயாரிப்பதால், ‘சந்திரமுகி 2’ படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகும் போதே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது

Cinema News Tags:லைகா புரொடக்ஷன்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் - பி வாசு இணையும் 'சந்திரமுகி 2'

Post navigation

Previous Post: அம்முச்சி சீசன் 2 இணைய தொடரின் திரைவிமர்சனம்
Next Post: அமேசான் பிரைம் ஒரிஜினல் தமிழ் தொடரான ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ ஸிற்காக சாம் சி. எஸ். இசையில் உருவான ‘துவா துவா’ பாடலின் வீடியோ வெளியீடு

Related Posts

Victory Venkatesh, Nawazuddin Siddiqui, Sailesh Kolanu, Venkat Boyanapalli, Niharika Entertainment’s Prestigious Project Saindhav Launched Grandly Cinema News
ஷாந்தனு நடிக்கும் 'இராவண கோட்டம் ஷாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’! Cinema News
சல்லியர்கள்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரதமர் இந்திரா காந்தி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்தார்! -சல்லியர்கள்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேச்சு Cinema News
உத்தமனை வில்லனாகும் ஞானவேல்ராஜா உத்தமனை வில்லனாகும் ஞானவேல்ராஜா, விளக்கம் வெளியீட ராஜ்கமல் நிறுவனம் Cinema News
கலை அடுத்த லெவலுக்கு போகும் என்று நினைக்கிறேன் - ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கலை அடுத்த லெவலுக்கு போகும் என்று நினைக்கிறேன் – ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் Cinema News
பனாரஸ்' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு தமிழ் ரசிகர்கள் தனித்துவமானவர்கள்” நெகிழ்ந்த ‘பனாரஸ்’பட இயக்குநர் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme