Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சுழல் தி வோர்டெக்ஸி'ன் முன்னோட்டம் வெளியான

மேசானின் ஒரிஜினல் தொடரான ‘சுழல் தி வோர்டெக்ஸி’ன் முன்னோட்டம் வெளியான பிறகு, அந்தத் தொடரை கண்டு ரசிப்பதற்கு காத்திருக்க முடியாமல் தவிப்பதற்கான ஐந்து காரணங்கள்*

Posted on June 13, 2022 By admin

அ

அமேசான் பிரைம் வீடியோ அண்மையில் அவர்களின் புதிய அசல் தொடரான ‘சுழல் தி வோர்டெக்ஸி’ன் முன்னோட்டத்தை வெளியிட்டது. இந்த முன்னோட்டம் வெளியானவுடன் திரையுலகினர் மத்தியில் பெரிய அதிர்வை ஏற்படுத்துவதற்கு காலதாமதமாகவில்லை. இந்த முன்னோட்டம் ஐந்து கோடி பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டதுடன், இந்தியா முழுவதிலும் உள்ள திரைப்படத் துறையினர் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து அமோகமான விமர்சனங்களையும் பெற்றது. இந்த எண்ணிக்கையானது தொடரை முழுமையாக காண வேண்டுமென்ற காத்திருப்புக்கு உச்சகட்ட உற்சாகத்துடன் கூடிய எண்ணிக்கைக்கு சான்றாகும். எனவே இந்த புலனாய்வு பாணியிலான நாடகம் ஜூன் 17ஆம் தேதி திரையிடப்படும் வரை காத்திருக்கிறோம். மேலும் இதற்கான ஐந்து காரணங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

விரும்பும் மொழி

‘சுழல் தி வோர்டெக்ஸ்’ தொடரை தமிழில் மட்டுமல்லாமல் முப்பதுக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் வெளியாகவிருக்கிறது. இந்த தொடர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளில் மட்டுமல்லாமல், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஜப்பானியம், போலிஷ், போர்த்துகீசியம், காஸ்டிலியன் ஸ்பானிஷ், லத்தீன் ஸ்பானிஷ், அரபு மற்றும் துருக்கியம் உள்ளிட்ட சர்வதேச மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் தொடர் கூடுதல் வெளிநாட்டு மொழிகளிலும் வசன வரிகளுடன் ஒளிபரப்பாகிறது.

மாயாஜாலம் நிகழ்த்தும் படைப்பாளிகள்

தமிழ் திரை உலகின் முன்னணி படைப்பாளிகளான புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோரால் இந்த தொடர் உருவாக்கப்பட்டிருக்கிறது. இருவரும் தங்களது சக்திவாய்ந்த மற்றும் யதார்த்தமான பாணியில் கதை சொல்வதன் மூலம் திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள் என அறியப்படுகிறது.

நட்சத்திர நடிகர்கள்

இந்த தொடரில் ஸ்ரேயா ரெட்டி, கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஆர். பார்த்திபன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சில்லிட வைக்கும் பின்னணி இசை

திறமையான நட்சத்திர நடிகர்கள் மற்றும் அழுத்தமான கதையுடன் கூடிய எந்த திரைக்கதைக்கும் சரியான உணர்வை தரும் வலுவான பின்னணி இசை தேவை. சுழல் தி ரோர், டைட்டில் ட்ராக் போன்றவற்றை இசை அமைப்பாளர் சாம் சி. எஸ் முன்னோட்டத்திலேயே பார்வையாளர்களின் முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் அனுபவத்தை அளித்திருக்கிறார். மேலும் திரைக்கதைக்கு தேவையான இசைக்குறிப்புகளை அளித்து ஹிட் செய்திருக்கிறார்.

அழுத்தமான கதைக்களம்

சில கதைகள் ஒரு அடையாளத்தை உருவாக்குகின்றன. சுழல் தி வோர்டெக்ஸின் முன்னோட்டம், இந்த தொடரை பற்றிய பெரிய தாக்கத்தை பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்தியது. முன்னோட்டத்தில் இடம்பெற்ற பல அம்சங்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்தது. இதன் மூலம் இந்த தொடரில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? கதை என்ன? என்பதைப் பற்றிய ஆர்வத்தை பார்வையாளர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.

ஜூன் 17 தேதியன்று வெளியாகவிருக்கும் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ அமேசான் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 30 க்கும் மேற்பட்ட மொழிகளில் திரையிடப்படுகிறது.

Cinema News Tags:அந்தத் தொடரை கண்டு ரசிப்பதற்கு காத்திருக்க முடியாமல் தவிப்பதற்கான ஐந்து காரணங்கள்*, மேசானின் ஒரிஜினல் தொடரான 'சுழல் தி வோர்டெக்ஸி'ன் முன்னோட்டம் வெளியான பிறகு

Post navigation

Previous Post: GV Prakash UPCOMING MOVIE IDIMUZHAKKAM
Next Post: 5 reasons why we can’t wait to watch upcoming Amazon Original series Suzhal – The Vortex after watching its intriguing trailer*

Related Posts

பிரபுதேவாவின் ‘பகீரா’ படம் குறித்து தயாரிப்பாளர் ஆர்.வி. பரதன்! பிரபுதேவாவின் ‘பகீரா’ படம் குறித்து தயாரிப்பாளர் ஆர்.வி. பரதன்! Cinema News
விஜயானந்த் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா விஜயானந்த் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா Cinema News
மாமன்னன் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வடிவேலு மாமன்னன் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வடிவேலு Cinema News
ATTACHMENT DETAILS suryabirthday-indiastarsnow.com நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள் செய்த பிரம்மாண்டம் Cinema News
Prime Video is a premium streaming service that offers Prime members a collection of award-winning Amazon Original series, thousands of movies and TV shows—all with the ease of finding what they love to watch in one place. Find out more at PrimeVideo.com. Cinema News
நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் சங்கத்தினர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் சங்கத்தினர் ❗ Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme