Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

துரிதம்

துரிதம் படப்பிடிப்பு 40 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து நடத்திய படக் குழு..!

Posted on June 13, 2022 By admin

இதுவரை தமிழ் சினிமாவில் பல சாலை பயணம் செய்யும் கதையம்சத்துடன் படங்கள் வந்திருந்தாலும் அவை எதுவும் தமிழகத்தை மையப்படுத்தி வெளியானது இல்லை. ஆனால் முதன்முறையாக அந்தக் குறையை போக்கும்விதமாக உருவாகியுள்ள படம்தான் இந்த ‘துரிதம்’ படம்.

‘சண்டியர்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்த ஜெகன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதுமட்டுமல்ல, இந்தப் படத்தின் கதை மீதுள்ள நம்பிக்கையால் இந்தப் படத்தின் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.

கதாநாயகியாக ‘மிஸ் சவுத் இந்தியா’ பட்டம் வென்ற ஈடன் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே, ‘இருக்கு ஆனா இல்ல’, ‘பனி விழும் நிலவு’ உள்ளிட்ட சில தமிழ் படங்கள் மற்றும் மலையாளம் தெலுங்கு மொழிகளில் ஏற்கனவே நடித்துள்ளார்.

கதாநாயகியின் தந்தையாக இயக்குநர் ஏ.வெங்கடேஷ், நாயகனின் நண்பனாக பால சரவணன் மற்றும் பூ ராமு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, வில்லனாக ராமச்சந்திரன் (ராம்ஸ்) நடித்துள்ளார்.

புதியவரான நரேஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் மில்டனின் உதவியாளராக பணியாற்றிய வாசன் என்பவர்தான் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத் தொகுப்பை நாகூரான் கவனிக்க, ஆக்சன் காட்சிகளை மணி என்பவர் வடிவமைத்துள்ளார்.

எழுதி, இயக்கியுள்ளார் இயக்குநர் சீனிவாசன். இவர் இயக்குநர் ஹெச்.வினோத்தின் சீடர்.. குருவை போலவே இந்தப் படத்தையும் விறுவிறுப்பு குறையாமல் இயக்கியுள்ளார்.

‘மேற்கு தொடர்ச்சி மலை’ பட இயக்குநரான லெனின் பாரதி இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகளை உடனிருந்து கவனித்து மேற்பார்வை செய்து உதவியுள்ளார்.

படத்தின் கதை விறுவிறுப்பாக நகரும்விதமாக இருப்பதால் அதை பிரதிபலிக்கும்விதமாக படத்திற்கு ‘துரிதம்’ என்றே தலைப்பும் வைத்துள்ளனர்.
எல்லோருக்குமே தாங்கள் செய்யும் விஷயங்கள் அவர்கள் கண்ணோட்டத்தில் சரி என்பது போலத்தான் தெரியும். ஆனால் அடுத்தவர்கள் பார்வையில் அது தவறாக தெரிய வாய்ப்பு உண்டு. இந்தக் கருத்தை மையப்படுத்தி உண்மையில் நடந்த சம்பவம் ஒன்றை தழுவி இந்த ‘துரிதம்’ படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சீனிவாசன்.

கதையின் நம்பகத்தன்மைக்காக தமிழ்நாட்டில், அதுவும் கதை நிகழும் சம்பந்தப்பட்ட ஊர்களுக்கே பயணப்பட்டு மொத்த படப்பிடிப்பையும் நடத்தியுள்ளனர்.

கிட்டத்தட்ட 65 நாட்கள் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதற்காக தமிழகத்துக்குள்ளேயே 40 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்து சாலைகளில் மட்டுமே பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

Cinema News

Post navigation

Previous Post: Dejavu’ to be released on Arulnithi’s birthday
Next Post: திரு பஞ்சு அருணாச்சலம் அவர்களின் 80 வது ஆண்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர்களை கௌரவப்படுத்தும் விழா

Related Posts

Prime Video Reveals First-Look Images and Premiere Date for Groundbreaking Global Spy Series Citadel, Starring Richard Madden and Priyanka Chopra Jonas, With Stanley Tucci and Lesley Manville Cinema News
ஆதித்ய வர்மா படத்துக்கு ஒரு சாங் எடுத்திய நடிகர் சிவகார்த்திகேயன் ஆதித்ய வர்மா படத்துக்கு ஒரு சாங் எடுத்திய நடிகர் சிவகார்த்திகேயன் Cinema News
The Way Of Water on 16th December release Cinema News
நைட்ரோ ஸ்டார்' சுதீர் பாபு நடிக்கும் புதிய படத்திற்கு 'ஹரோம் ஹரா' என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த தலைப்பிற்கான பிரத்யேக காணொளியை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள் நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘ஹரோம் ஹரா’ Cinema News
மஞ்சுநாத் இயக்கத்தில் யோகிபாபு- இனியா நடிக்கும் ‘தூக்குதுரை’ டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகிபாபு- இனியா நடிக்கும் ‘தூக்குதுரை’ Cinema News
ஆண்மை தவறேல் படத்தில் 15 டேக்குகளுக்கு மேல் போனது முத்த காட்சி ஆண்மை தவறேல் படத்தில் 15 டேக்குகளுக்கு மேல் போனது முத்த காட்சி Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme