Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஃபான் இந்தியா படம் ‘ஜின்னா

விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகும் ஃபான் இந்தியா படம் ‘ஜின்னா!

Posted on June 12, 2022 By admin

பொழுதுபோக்கு துறையில் புதிய புரட்சி! – வருகிறது விஷ்ணு மஞ்சுவின் ஏ வி ஏ எண்டர்டெயின்மெண்ட்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு மஞ்சு, தயாரிப்பாளர் தொழிலதிபர் என பன்முக திறன் கொண்டவராகவும் வலம் வருகிறார். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய தரமான திரைப்படங்களில் நடித்து வருவதோடு, ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஏ வி ஏ எண்டர்டெயின்மெண்ட் என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை விஷ்ணு மஞ்சு தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் மூலம் திறமை மிக்க புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதோடு, வித்தியாசமான முயற்சிகள் மற்றும் புதிய சிந்தனைகளுக்கு வாய்ப்பளித்து ஊக்கம் அளிக்க விஷ்ணு மஞ்சு முடிவு செய்துள்ளார்.

மேலும், இந்நிறுவனம் மூலம் திரைப்படங்கள் தயாரிப்பு மட்டும் இன்றி இணைய தொடர்கள், ஆவணப்படங்கள், டாக்குமெண்டரி மற்றும் சர்வதேச தரத்திலான குறும்படங்கள் தயாரிப்புகளில் ஏ வி ஏ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஈடுபட உள்ளது.

ஏ வி ஏ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் முதல் படமே மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரம்மாண்டமான ஃபான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது. விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் சன்னி லியோன், பயல் ராஜ்புட் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கிறார்கள். தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் உருவாகும் இப்படம் விஷ்ணு மஞ்சுவின் 19 அது திரைப்படமாகும்.

இந்த புதிய நிறுவனம் வரும் ஜூன் 10 ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. திரைப்பட தயாரிப்பில் ஈடுபட உள்ள இந்த நிறுவனத்துடன், ஏ வி ஏ மியூசிக் மற்றும் ஏ வி ஏ ஸ்டுடியோஸ் என்ற நிறுவனங்களையும் விஷ்ணு மஞ்சு தொடங்குகிறார்.

ஏ வி ஏ மியூசிக் நிறுவனம் மூலம் சுயாதீன தனி இசை பாடல்கள், இசை ஆல்பங்கள் மற்றும் தரமான மற்றும் ரசிகர்களுக்கான இசை படைப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். ஏ வி ஏ ஸ்டுடியோஸ் மூலம் சினிமா துறைக்கான அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதோடு, தொழில்நுட்ப ரீதியிலான தரம் மிக்க திரைப்படங்களை உருவாக்கி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

ஏ வி ஏ நிறுவனம் மூலம் ஒட்டு மொத்த பொழுதுபோக்கு துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்த வரும் ஏ வி ஏ நிறுவனம் பற்றிய மேலும் பல தகவல்களை நிறுவனத்தின் தொடக்க நாளான ஜூன் 10 ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

Cinema News Tags:ஃபான் இந்தியா படம் ‘ஜின்னா

Post navigation

Previous Post: பிருந்தா இயக்கும் ஆக்சன் படத்தின் டைட்டில் இன்று மாலை அறிவிப்பு
Next Post: பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் ‘ தக்ஸ்’

Related Posts

Brahmastra’ will take Indian culture to the world, says Rajamouli Brahmastra’ will take Indian culture to the world, says Rajamouli Cinema News
LIGER TEAM – THE VIJAY DEVERAKONDA, PURI JAGANNADH, CHARMME KAUR MEETS MEGASTAR CHIRANJEEVI AND SUPERSTAR SALMAN KHAN. LIGER TEAM – THE VIJAY DEVERAKONDA, PURI JAGANNADH, CHARMME KAUR MEETS MEGASTAR CHIRANJEEVI AND SUPERSTAR SALMAN KHAN. Cinema News
நடிகர் விஷ்வக் சென் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘ தாஸ் கா தம்கி’ Cinema News
13 சர்வதேச விருதுகளை வென்ற 'லேபர்' திரைப்படம் பொங்கல் வெளியீடாக நாளை ரிலீஸ் மூவி வுட் தளத்தில் நாளை பொங்கல் பண்டிகையில் வெளியாகும் ‘லேபர்’ திரைப்படம் Cinema News
ஆப் கொடுக்கும் ஆச்சரியம். ஆப் கொடுக்கும் ஆச்சரியம்..; அரசு நிர்ணயித்த கட்டணத்தில் ஆட்டோ சவாரி.. Cinema News
டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாகும் அமலா பாலின் ‘கடாவர் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாகும் அமலா பாலின் ‘கடாவர்’ Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme