Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஆக்சன் படத்தை இயக்கும் பிருந்தா

பிருந்தா இயக்கும் ஆக்சன் படத்தின் டைட்டில் இன்று மாலை அறிவிப்பு

Posted on June 12, 2022 By admin

இந்திய திரையுலகில் பல மொழிகளிலும் அனைத்து நடிகர் நடிகைகளுடன் ஆயிரத்திற்கும் மேலான படங்களில் பணியாற்றிய நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர், முதன் முதலாக ஆக்ஷன் கலந்த ரா மற்றும் ரியல் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் டைட்டில் லுக்கை இன்று மாலை 6 மணி அளவில் முன்னணி நட்சத்திர நடிகர்களான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ஆர்யா, ராணா, நிவின் பாலி, அனிருத் ரவிசந்தர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல கலைஞர்களுடன் லோகேஷ் கனகராஜ், தேசிங்கு பெரியசாமி ஆகிய இயக்குநர்களும், முன்னணி திரைப்பட விமர்சகர்களான தரன் ஆதர்ஷ் மற்றும் ஸ்ரீதர் பிள்ளை ஆகியோர் வெளியிடுகிறார்கள்.

தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்த திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் இன்று மாலையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என படத்தை தயாரிக்கும் ஹெச் . ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Cinema News Tags:ஆக்சன் படத்தை இயக்கும் பிருந்தா, பிருந்தா இயக்கும் ஆக்சன் படத்தின் டைட்டில் இன்று மாலை அறிவிப்பு

Post navigation

Previous Post: நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகி உள்ளது ” ஜம்பு மகரிஷி “
Next Post: விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகும் ஃபான் இந்தியா படம் ‘ஜின்னா!

Related Posts

காரி திரை விமர்சனம் காரி திரை விமர்சனம் Cinema News
நடிகை டாப்ஸி ஒருவருடன் நெருங்கி பழகி வருவதை பற்றி முதல் முறையாக வாய் திறந்து உள்ளார் நடிகை டாப்ஸி ஒருவருடன் நெருங்கி பழகி வருவதை பற்றி முதல் முறையாக வாய் திறந்து உள்ளார் !!! Cinema News
நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் ‘தி வாரியர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது ! நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் ‘தி வாரியர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது ! Cinema News
டிஸ்னி இந்தியா ‘தி லிட்டில் மெர்மெய்ட்’ 26 மே 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடுகிறது. Disney India releases ‘The Little Mermaid’ on 26th May 2023. Only in cinemas. Cinema News
சீட்டாட்டத்தினால் தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம்... சீட்டாட்டத்தினால் தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம்… Cinema News
simbhu upcoing movie-indiastarsnow.com நடிகர் சிம்பு அடுத்த படத்தின் இயக்குனர் சுசீந்திரன் மாதவ் மீடியாவின் பிரம்மாண்ட தயாரிப்பு Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme