Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஜம்பு மகரிஷி

நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகி உள்ளது ” ஜம்பு மகரிஷி “

Posted on June 12, 2022 By admin

விவசாயத்தில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவை வெளிநாடு ஒன்று தங்கள் நாட்டு அதிகாரிகள் நூறுபேரை தமிழ்நாட்டுக்கு அனுப்பி மரபணு விதைகளை மாற்றிகொடுத்து விவசாயத்தை அழிக்க முயல்கிறது. இதை தெரிந்துகொண்ட கதாநாயகன் அவர்களை எதிர்கொண்டு விவசாயத்தையும், விவசாயிகளையும் எப்படி காப்பாற்றுகிறான் என்பதே கதை.

திருவானை கோவிலில் ஜம்பு மகேஷ்வரர் கோவிலில் வெண் நாவல் மரத்தடியில் வீற்றிருக்கும் ஜம்பு மகேஸ்வரராஜ் வெண் நாவல் மரமாய் இருக்கும் ஜம்பு மகரிஷியும் பக்தர்களுக்கு அருள் வழங்கி கொண்டு இருக்கும் உண்மை வரலாறோடு இதன் திரைக்கதை அமைத்து படமாக்கப்பட்டுள்ள படம் தான் “ஜம்பு மகரிஷி “.

புதுமுகம் பாலாஜி நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக புதுவரவான ப்ரியா நடித்துள்ளார். மேலும்
ராதாரவி, வாகை சந்திரசேகர், டெல்லி கணேஷ், நம்பிராஜ், மீரா கிருஷ்ணன், பாகுபலி பிரபாகர், வையாபுரி, கராத்தே ராஜா ஆகியோருடன் ” மஸ்காரா ” பாடல் புகழ் அஸ்மிதா முக்கிய வேடத்தில் வருகிறார்.

நிறைய பொருட்செலவில் 250 அடி உயர சிவன் சிலை வடித்து சென்னை அருகே இதற்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைத்து 2000 துணை நடிகர் நடிகையர், ஐம்பதிற்கும் மேற்பட்ட நடன குழுவினர் பங்கேற்க, பாடல் காட்சி ஒன்று அருமையாக படமாக்கப்பட்டுள்ளது.

அரக்கன் வாதாவியாக பாகுபலி பிரபாகரும் அவனை அழிக்க நினைக்கும் ருத்ர வீரனாக பாலாஜியும் மோதும் அனல் பறக்கும் சண்டைக்காட்சியும் பிரமாதமாக படமாக்கப்பட்டுள்ளது.

பிரபல இயக்குனரான பகவதி பாலா இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.சிவசங்கர் நடன பயிற்சியையும், டிராகன் பிரகாஷ் சண்டை பயிற்சியையும், ராஜ்கீர்த்தி படத்தொகுப்பையும், பி. புவனேஸ்வரன் வசனத்தையும் கவனித்துள்ளனர்.

தேனிசை தென்றல் தேவா இசையமைக்க பாலாஜி, புவனேஸ்வர், ஜார்ஜ் மூவரும் பாடல்களை எழுதி உள்ளனர்.

காசியில் உள்ள வாரணாசி, ஹைதராபாத்தில் உள்ள கோல்கொண்டா கோட்டை, விஜயவாடா மற்றும் சென்னையிலும் படப்பிடிப்பு நடத்தி உள்ளனர்.

டி.வி.எஸ். பிலிம்ஸ் சார்பில் பி.பாலாஜி — பி.தனலட்சுமி இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

தணிக்கை அதிகாரிகளால் ” யு “சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள “ஜம்பு மகரிஷி ” படத்தின் கதை திரைக்கதை எழுதி நாயகனாக நடித்து பி-தனலட்சுமியுடன் இணைந்து தயாரித்துள்ள புதியவரான பி.பாலாஜி இதை தன் முதல் படமாக இயக்கி உள்ளார்.

விஜயமுரளி
PRO

Cinema News Tags:நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகி உள்ளது " ஜம்பு மகரிஷி "

Post navigation

Previous Post: இரு நண்பர்களின் கதை ” பூதமங்கலம் போஸ்ட்”
Next Post: பிருந்தா இயக்கும் ஆக்சன் படத்தின் டைட்டில் இன்று மாலை அறிவிப்பு

Related Posts

புதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா-indiastarsnow.com புதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா Cinema News
indiastarsnow.com_bigg-boss-tamil-3-sherin பிக்பாஸ் நாயகி நீச்சல் உடையில் சூடேற்றும் ஷெரின் Cinema News
விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் டக்கால்டி Cinema News
இரவின் நிழல்’ முதல் சிங்கிள் வெளியீடு! இரவின் நிழல்’ முதல் சிங்கிள் வெளியீடு! Cinema News
தமிழகம் முழுவதும் உள்ள ரைபிள் சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர் தமிழகம் முழுவதும் உள்ள ரைபிள் சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர் Cinema News
ரசிகர்களுக்கு ‘இரட்டை’ விருந்தளிக்கும் ஸ்ருதிஹாசன் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme