Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சுழல் தி வோர்டெக்ஸ்' முன்னோட்டம்

குறுகிய காலத்தில் ஐந்து கோடி பார்வைகளை பெற்று அசத்திய ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ முன்னோட்டம்

Posted on June 12, 2022 By admin

அமேசான் பிரைம் வீடியோவின் முதல் தமிழ் ஒரிஜினல் தொடரான ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ முன்னோட்டம் வெளியான இரண்டு நாட்களில், பல்வேறு மொழிகளிலும், பல்வேறு இயங்கு தளங்களிலும் 50 மில்லியன் பார்வைகளை பெற்றிருக்கிறது.

அமேசான் பிரைம் வீடியோவின் சுழல் தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதள தொடர் இன்றைய சூழலில் பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் தமிழ் புலனாய்வு நாடக படைப்புகளில் ஒன்றாகும். இது நம்முடைய தேசத்திலிருந்து மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து நாட்டின் பார்வையாளர்களிடமிருந்தும் அன்பை பெற்றிருக்கிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்ட இந்த தொடரின் முன்னோட்டம், அனைத்து மொழிகளிலும், இயங்குதளங்களிலும் உலகளவில் ஐந்து கோடி பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

‘சுழல் தி வோர்டெக்ஸ்’ மிகவும் சுவராசியமான, அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் வசீகரிக்கும் தொடர்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரின் இசை, ஒளிப்பதிவு, கலை இயக்கம் என அனைத்தும் தொடரை பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.

புஷ்கர் & காயத்ரியின் பட்டறையிலிருந்து உருவாகியிருக்கும் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ எனும் தொடர், 30க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளிலும் மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் ஜூன் 17ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்படவிருக்கிறது.

Cinema News Tags:இரண்டே நாட்களில் ஐந்து கோடி பார்வைகளை பெற்ற அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல் தமிழ் தொடர் ' 'சுழல்- தி வோர்டெக்ஸ்' முன்னோட்டம், குறுகிய காலத்தில் ஐந்து கோடி பார்வைகளை பெற்று அசத்திய 'சுழல் தி வோர்டெக்ஸ்' முன்னோட்டம்

Post navigation

Previous Post: Brinda Master to Direct – THUGS
Next Post: In just 2 days, Amazon Prime Video’s Suzhal – The Vortex Garners 50M + Views Across Languages and Platforms!

Related Posts

விதார்த் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா விதார்த் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா Cinema News
இப்படத்தின் டீஸர் வெளியானதும் பார்க்கிறேன்; எனக்கும், விஷாலுக்கும் வாழ்த்துக்கள் கூறினார் நடிகர் விஜய் – நடிகை சுனைனா லத்தி படத்தின் டீஸரைப் பார்த்தால் விஷால் திரைக்கு வெளியே வந்து அடித்து விடுவார் போல இருக்கிறது; நிறைய அடிபட்டு நடித்திருக்கிறார்! – உதயநிதி ஸ்டாலின் Cinema News
“SURIYA-42” shooting commenced today at Chennai “SURIYA-42” shooting commenced today at Chennai. Cinema News
ThodatheY Movie Audio Launch ‘தொடாதே ‘ இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடந்த சர்ச்சை Cinema News
டி.இமான் இசையில் பார்வையற்ற சிறுவன் திருமூர்த்தி பாடினார் டி.இமான் இசையில் பார்வையற்ற சிறுவன் திருமூர்த்தி பாடினார் Cinema News
Luck illa maamey - a fun video song Luck illa maamey – a fun video song Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme