Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

இந்திய திரையுலக பிரபலங்கள் வாழ்த்தும் 'சுழல் - தி வோர்டெக்ஸ்' முன்னோட்டம்

இந்திய திரையுலக பிரபலங்கள் வாழ்த்தும் ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ முன்னோட்டம்

Posted on June 9, 2022 By admin

இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கும் ஹிருத்திக் ரோஷன், அபிஷேக் பச்சன், விஜய்சேதுபதி, துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் இந்திய திரை உலகில் முன்னணி படைப்பாளியாக வலம் வரும் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் ஜூன் 17ஆம் தேதியன்று அமேசான் பிரைமில் வெளியாகும் முதல் ஒரிஜினல் தமிழ் தொடரான ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதள தொடரின் முன்னோட்டத்தை கண்டு ரசித்து, வியந்து தங்களின் வாழ்த்துகளை ட்விட்டர் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் அமேசான் ஒரிஜினல் தொடரான ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ மூலம் இந்தியா முழுவதும் உள்ள திரையுலகில் சகோதரத்துவத்தை வளர்த்தெடுத்து கவனத்தை ஈர்த்திருக்கிறது.

‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடரின் முன்னோட்டம் வெளியாகி, பார்வையாளர்களை மட்டுமல்லாமல் திரையுலகினரை கவர்ந்து, பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அமேசான் பிரைம் வீடியோவின் முதல் ஒரிஜினல் தமிழ் தொடரான ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’ முப்பதுக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் ஸ்ட்ரிமிங் செய்யப்படவிருக்கிறது. கடந்த வாரம் அபுதாபியில் நடைபெற்ற விழாவில் இதன் முன்னோட்டம் வெளியிடப்பட்டதிலிருந்து இந்திய திரையுலகில் மட்டுமல்லாமல் திரும்பும் திசையெங்கும் இது பேசுபொருளாக மாற்றம் பெற்றிருக்கிறது.

அபுதாபியில் பாலிவுட் நட்சத்திர நடிகர் அபிஷேக்பச்சன் இதனை உலகுக்கு அறிமுகப்படுத்திய பிறகு, ‘சுழல் = தி வோர்டெக்ஸி’ன் முன்னோட்டத்தை இந்திய சினிமாவின் முன்னணி பிரபலங்களான ஹிருத்திக் ரோஷன், அபிஷேக் பச்சன், விஜய்சேதுபதி, துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், ஜனனி, இயக்குநர் மோகன் ராஜா, பி. சமுத்திரக்கனி, பாலாஜி மோகன், கார்த்திக் சுப்புராஜ் என பலரும் இதனை பாராட்டியிருக்கிறார்கள்.

நடிகர் ஹிருத்திக் ரோஷன் இதுதொடர்பாக தன்னுடைய டுவிட்டரில்..” என்னுடைய நண்பர்களான புஷ்கர் காயத்ரியின் படைப்பு சிந்தனையில் உருவாகியிருக்கும் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ பிரமிக்கத்தக்க வகையில் உருவாகியிருக்கிறது. அமேசானின் முதல் தமிழ் ஒரிஜினல் தொடரான ‘ சுழல் தி வோர்டெக்ஸ்’ ஜூன் 17ஆம் தேதியன்று வெளியாகிறது.” என பதிவிட்டிருக்கிறார்.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தன்னுடைய டுவிட்டரில், ” புஷ்கர் காயத்ரி குழுவினருக்கும், சுழல் தி வோர்டெக்ஸ்’ வெப் சீரிஸ் குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். ” என பதிவிட்டிருக்கிறார்.

நடிகர் ஆர்யா தன்னுடைய டுவிட்டரில், ” சுழல் = தி வோர்டெக்ஸ்’ வலைதள தொடரின் முன்னோட்டம் மனதை கவர்ந்தது. குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.” என பதிவிட்டிருக்கிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய ட்விட்டரில், ” சுழல் தி வோர்டெக்ஸ்’ தொடரின் முன்னோட்டம் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது. தொடர் முழுவதையும் காண வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்திருக்கிறது. குழுவினருக்கு வாழ்த்துக்கள்.” என பதிவிட்டிருக்கிறார்.

நடிகர் துல்கர் சல்மான் தன்னுடைய டுவிட்டரில், ” சுழல் தி வோர்டெக்ஸ்’ தொடரின் முன்னோட்டம் கண்டு ரசித்தேன். மெய் சிலிர்த்தேன். அமேசானின் முதல் தமிழ் ஒரிஜினல் தொடரான இதனை கண்டு ரசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என பதிவிட்டிருக்கிறார்.

இயக்குநரும், நடிகருமான எஸ். ஜே. சூர்யா தன்னுடைய டுவிட்டரில், ” விக்ரம் வேதா புகழ் இயக்குநர்கள் புஷ்கர் =காயத்ரி உருவாக்கி தயாரித்திருக்கும் வலைதள தொடர் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ அமேசான் ஒரிஜினல் தொடராக உலகம் முழுவதும் 30 மொழிகளில் வெளியாகிறது என்பதை அறிந்து உண்மையில் அக மகிழ்ந்தேன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.” என பதிவிட்டிருக்கிறார்.

இயக்குநரும், நடிகருமான மோகன் ராஜா தன்னுடைய டுவிட்டரில், ” சூப்பர்ப்! வாழ்த்துக்கள். நண்பர்கள் புஷ்கர் =காயத்ரியின் முதல் முயற்சியான வலைதள தொடர் தயாரிப்பில், அமேசான் பிரைம் வீடியோவில் முதல் தமிழ் ஒரிஜினல் தொடராக வெளியாகும் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என பதிவிட்டிருக்கிறார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய டுவிட்டர் பதிவில், ” புஷ்கர் =காயத்ரியின் உருவாக்கத்தில், இயக்குநர்கள் பிரம்மா மற்றும் அனுசரண் இயக்கத்தில், உருவாகியிருக்கும் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ தொடரின் முன்னோட்டம் பெரும் சுவராசியமாகவும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.” என குறிப்பிட்டிருக்கிறார்.

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தன்னுடைய டுவிட்டரில், ” சுழல் தி வோர்டெக்ஸ்’ முன்னோட்டம் நன்றாக இருந்தது. வியக்க வைக்கும் காட்சிகள்.. சுவராசியமான கதாபாத்திரங்கள்.. உண்மையைச் சொல்லுங்கள் அவர்கள் நிலாவை கண்டுபிடித்தார்களா..? இல்லையா.?. ஒரு இந்திய கதை முதன்முதலாக உலக அளவிலான மக்களின் பார்வைக்கு அமேசானின் மூலம் கிடைத்திருக்கிறது. புஷ்கர் = காயத்ரி அவர்களின் முயற்சிக்கும் திறமைக்கும் வாழ்த்துக்கள்’: என பதிவிட்டிருக்கிறார்.

நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தன்னுடைய டுவிட்டரில், ” சுழல் =தி வோர்டெக்ஸ்’தொடரின் முன்னோட்டத்தை கண்டு பிரமித்தேன். கிரைம் திரில்லர் டிராமாவான இதில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.” என பதிவிட்டிருக்கிறார்.

‘விக்ரம் வேதா’ படம் புகழ் இயக்குநர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோரின் படைப்புச் சிந்தனையும், இயக்குநர்கள் பிரம்மா மற்றும் அனுசரண். எம் ஆகியோரின் இயக்கத்திலும் புலனாய்வு விசாரணை பாணியிலான ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடரில் நடிகர்கள் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ஷெட்டி மற்றும் ஆர் பார்த்திபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஜப்பானிஸ், போலிஷ், போர்த்துகீசியம், ஸ்பானிஷ், அரபு மற்றும் துருக்கி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மொழிகளில், உலக அளவில் ஜூன் 17 முதல் ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

Cinema News Tags:இந்திய திரையுலக பிரபலங்கள் வாழ்த்தும் 'சுழல் - தி வோர்டெக்ஸ்' முன்னோட்டம்

Post navigation

Previous Post: Saregama Originals to release ‘Yaar Aval’ musical video
Next Post: many more Indian cinema stalwarts laud the trailer of Suzhal – The Vortex

Related Posts

அக நக முகநகையே..’ வந்தியத்தேவன், குந்தவையின் அழகான காதல் பாடல் வெளியானது லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் மணி ரத்னத்தின் “பொன்னியின் செல்வன் – 2” திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. Cinema News
Bigil Film Review Bigil Film Review Cinema News
புதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா-indiastarsnow.com புதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா Cinema News
சுதந்திர இந்தியாவிற்கும் எடிட்டர் பி.லெனினுக்கும் ஒரே வயது சுதந்திர இந்தியாவிற்கும் எடிட்டர் பி.லெனினுக்கும் ஒரே வயது Cinema News
'RX 100' director Ajay Bhupathi collaborates with 'Kantara' fame Ajaneesh Loknath ‘RX 100’ director Ajay Bhupathi collaborates with ‘Kantara’ fame Ajaneesh Loknath Cinema News
தல 60’பட ட்ரெயிலரை வெளியிட்ட அஜீத் வெறியர்...வீடியோ தல 60’பட ட்ரெயிலரை வெளியிட்ட அஜீத் வெறியர்…வீடியோ Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme