Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

விக்ரம் திரைவிமர்சனம்

விக்ரம் திரைவிமர்சனம்

Posted on June 7, 2022June 7, 2022 By admin

காவல் துறையில் இருப்பவர்களை மாஸ்க் அணிந்த மர்ம கும்பல் கொலை செய்கிறது. இதில் காளிதாஸ் ஜெயராமும் கொல்லப்படுகிறார். அதுபோல் காவல் துறையில் சம்பந்தம் இல்லாமல் இருக்கும், காளிதாசனின் வளர்ப்பு அப்பா கமலும் கொல்லப்படுகிறார். மாஸ்க் மனிதர்களை கண்டுபிடிக்க, சீக்ரெட் ஏஜென்சிஸ் ஆக இருக்கும் பகத் பாசிலிடம் ஒப்படைக்கப்படுகிறது. மாஸ்க் மனிதர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் பகத் பாசிலுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. இறுதியில் பகத் பாசில், மாஸ்க் மனிதர்களை கண்டுபிடித்தாரா? கமலை மாஸ்க் மனிதர்கள் கொலை செய்ய காரணம் என்ன? மாஸ்க் மனிதர்கள் காவல் துறையினரை கொல்ல காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கமல், முதல் பாதியில் கர்ணனாகவும், இரண்டாம் பாதியில் விக்ரமாகவும் நடித்திருக்கிறார். குடிகாரன், மகனை நினைத்து கவலைப்படும் பாசமான தந்தை. பேரனை நினைத்து ஏங்கும் தாத்தா என நடிப்பில் பளிச்சிடுகிறார். அதுபோல், நடனம், ஆக்ஷன், என ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். கமலுக்கு அடுத்தபடியாக பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறார் பகத் பாசில். முதல் பாதி முழுவதும் திரைக்கதையை தன் வசப்படுத்தி இருக்கிறார். சின்ன சின்ன அசைவுகளில் கூட ரசிக்க வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. அலட்டல் இல்லாத இவரது நடிப்பு படத்திற்கு பெரிய பலம். காயத்ரி, மைனா, சிவானி, மகேஷ்வரி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். தனக்கே உரிய பாணியில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் நரேன். சூர்யாவின் மாஸ் சீன் தியேட்டரில் விசில் பறக்கிறது.

போதை பொருளை மையமாக வைத்து ஆக்ஷன், சென்டிமென்ட், பழிக்கு பழி என திரைக்கதை அமைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர். அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். கிரீஸ் கங்காதரனின் ஒளிப்பதிவு சிறப்பு.

Cinema News, Movie Reviews Tags:விக்ரம் திரைவிமர்சனம்

Post navigation

Previous Post: 3rd Eye Cine Creations தயாரிப்பில் சதீஷ் G.குமார் இயக்கும் “சூரகன்”
Next Post: மராட்டியில் ‘அதுர்ஷ்யா’ படத்தின் மூலம் கலக்கும் இயக்குநர் கபீர்லால் இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் ‘உன் பார்வையில்’ !

Related Posts

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. 16 பேர் கலந்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் முகேன் ராவ், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் இறுதிப்போட்டி வரை சென்றனர். இதில் முகேன் ராவ் முதல் பரிசை தட்டிச்சென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததையடுத்து, அதில் கலந்துகொண்டவர்களை பல்வேறு பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் சாண்டி மற்றும் தர்ஷனை நடிகர் சிம்பு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களான தர்ஷனும், அபிராமியும் விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகரை சந்தித்துள்ளனர். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தங்களது சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய்யின் தாயாரை சந்தித்த பிக்பாஸ் பிரபலங்கள் Cinema News
பவுடர் திரைப்படத்திற்காக 5 மொழிகளில் டப்பிங் பேசியுள்ளார் நிகில் முருகன் பவுடர் திரைப்படத்திற்காக 5 மொழிகளில் டப்பிங் பேசியுள்ளார் நிகில் முருகன். Cinema News
’யசோதா’ படத்தின் கதை நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு நிச்சயம் மதிப்புமிக்கதாக அமையும்- நடிகை வரலட்சுமி சரத்குமார்! ’யசோதா’ படத்தின் கதை நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு நிச்சயம் மதிப்புமிக்கதாக அமையும்- நடிகை வரலட்சுமி சரத்குமார்! Cinema News
JewelOne Anna Nagar Chennai welcomes customers to a bigger experience! JewelOne Anna Nagar Chennai welcomes customers to a bigger experience! Cinema News
Custody Custody Team Naga Chaitanya, Venkat Prabhu, Srinivasaa Chitturi, meets Isaignani and Legendary Maestro Ilaiyaraaja Cinema News
நடிகர் விமல் நடிக்கும் ‘சண்டக்காரி’ படத்தில் இணையும் பிரபல நடிகை ❗ Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme