Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

விஜய் தேவரகொண்டா- பூஜா ஹெக்டே நடிப்பில் தயாராகும் 'ஜேஜிஎம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடக்கம்.

விஜய் தேவரகொண்டாவின் ‘ஜேஜிஎம்’ முதல்கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்

Posted on June 5, 2022 By admin

பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘ஜேஜிஎம்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இதில் நடிகர் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

தெலுங்கு திரை உலகின் பாதையை திசை திருப்பிய படைப்பாளிகளில் முக்கியமானவரான இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் ‘ஜேஜிஎம்’. பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்திய அளவிலான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் ‘ஜேஜிஎம்’ படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஆக்சன் டிராமா ஜானரில் தயாராகிறது.

இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் கனவுப் படைப்பான ‘ஜேஜிஎம்’ திரைப்படத்தை அவருடைய சொந்த பட நிறுவனமான பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். தயாரிப்பில் சார்மி கவுர், வம்சி பைடிபள்ளி ஆகியோரும் இணைந்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் முதன் முறையாக நடிகை பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு திட்டமிட்ட அட்டவணையுடன் தொடங்குகிறது. இதில் நடிகை பூஜா ஹெக்டே அதிரடி சண்டைக் காட்சிகளுடன் கூடிய அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் கனவுப் படைப்பான ‘ஜேஜிஎம்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி பல சர்வதேச நாடுகளில் தொடர்கிறது. இதற்காக தயாரிப்பாளர்கள் பிரத்யேக காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளனர்.

இயக்குநர் பூரி ஜெகன்நாத் , நடிகர் விஜய் தேவரகொண்டாவை இதுவரை திரையில் கண்டிராத புதுமையான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறார். அதே தருணத்தில் விஜய் தேவரகொண்டா தன்னுடைய திரையுலக பயணத்தில் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு ‘ஜேஜிஎம்’ படத்தில் நடிக்கவிருக்கிறார்.

பூரி ஜெகன்நாத் எழுதி, இயக்கி வரும் ‘ஜேஜிஎம்’ திரைப்படம், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர்கள்:

விஜய் தேவரகொண்டா, பூஜா ஹெக்டே.

தொழில்நுட்பக் குழு:

கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்: பூரி ஜெகன்நாத்

தயாரிப்பாளர்கள்: சார்மி கவுர் மற்றும் வம்சி பைடிபள்ளி

தயாரிப்பு நிறுவனம் : பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ்

மக்கள் தொடர்பு: யுவராஜ்

Cinema News Tags:விஜய் தேவரகொண்டா - பூரி ஜெகன்நாத் கூட்டணியில் தயாராகும் 'ஜேஜிஎம்' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம், விஜய் தேவரகொண்டா- பூஜா ஹெக்டே நடிப்பில் தயாராகும் 'ஜேஜிஎம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடக்கம்., விஜய் தேவரகொண்டாவின் 'ஜேஜிஎம்' முதல்கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்

Post navigation

Previous Post: Abhishek Bachchan presents Prime Video’s Suzhal – The Vortex at IIFA Rocks
Next Post: மாயோன் பட ரதம் 40 நாட்கள், தமிழகம் முழுவதும் வலம் வரப்போகிறது

Related Posts

இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் நாக சைதன்யா இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் நாக சைதன்யா இருமொழி திரைப்படம் அறிவிக்கப்பட்டது Cinema News
பிரத்யேக ஸ்டைலில் ஆடை அணிந்ததற்காக பாராட்டுகளை குவிக்கும் ராம் சரண் பிரத்யேக ஸ்டைலில் ஆடை அணிந்ததற்காக பாராட்டுகளை குவிக்கும் ராம் சரண் Cinema News
avm -indiastarsnow.com எ. வி. எம் ஸ்டுடியோவுக்குள் உருவாகியுள்ள சசிகலா தயாரிப்பு நிறுவனம்! Cinema News
Ravi Teja, Vamsee, Abhishek Agarwal Arts’ Pan Indian Film Tiger Nageswara Rao Grand Launching Ravi Teja, Vamsee, Abhishek Agarwal Arts’ Pan Indian Film Tiger Nageswara Rao Grand Launching Cinema News
பிரதமரிடம் கேள்விகளை அடுக்கிய குஷ்பு -ஹிந்தி சினிமாக்காரர்களை மட்டும் அழைப்பதா பிரதமரிடம் கேள்விகளை அடுக்கிய குஷ்பு -ஹிந்தி சினிமாக்காரர்களை மட்டும் அழைப்பதா? Cinema News
Vijay Devarakonda starrer “Liger” Press Meet லைகர் (Saala Crossbreed) திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme