Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

கேஜிஎஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீலுக்கு இன்று பிறந்தநாள்

கேஜிஎஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீலுக்கு இன்று பிறந்தநாள்

Posted on June 5, 2022 By admin

பிரஷாந்த் நீல். இன்றைய தேதிக்கு இந்திய சினிமாவின் டாப் டென் இயக்குநர்களில் தவிர்க்க முடியாத பெயர். இந்த ஒரே காரணத்துக்காக இன்றைய அவரது 41வது பிறந்த நாளை சமூக வலைதளங்களில் மக்கள் வாழ்த்து மழைகளால் பொழிந்துகொண்டிருக்கின்றனர்.

1980 ஜூன் 4ம் தேதி பிறந்த பிரஷாந்த் நீல் இன்று எட்டிப்பிடித்திருக்கும் வெறுமனே மூன்றே படங்களில் நிகழ்ந்தது என்றால் நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கும். அவரது முதல் படமான ‘உக்கிரம்’ வெளியான ஆண்டு 2014. அதுவே மாபெரும் ஹிட் அடித்த நிலையில்தான் அவரை இந்தியா முழுக்க பேச வைத்த ‘கேஜிஎஃப்’ படத்தை 2018ல் இயக்கினார். அடுத்து சுமார் 50 தினங்களுக்கு முன்பு வெளியாகி அகில உலகத்தையும் அதிர வைத்த ‘கேஜி எஃப்’ 2’வின் வெற்றியும் அது ஈட்டிய 1200 கோடி தாண்டிய வசூலையும் இன்னும் வியந்துகொண்டே இருக்கிறோம்.

அடுத்து அவரது இயக்கத்தில் தயாராகும் ‘சலார்’படத்துக்கும் விண்ணைத் தொடும் எதிர்பார்ப்பு உள்ளது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. பிரபாஸ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு நடிக்கும் இந்த படமும் பெரும் பொருட்செலவில் தயாராகிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் டீஸர் இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகவிருக்கிறது.

இவரது முதல் மூன்று படங்களையும் தாண்டிய சவாலான படமாக இப்படத்தை இயக்கிவருவதாக படக்குழுவினர் பெருமையுடன் தெரிவிக்கிறனர்.

Cinema News Tags:கேஜிஎஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீலுக்கு இன்று பிறந்தநாள்

Post navigation

Previous Post: குடும்பத்துடன் காண வேண்டிய காதல் கலப்புத் திருமண கலாட்டா ‘அடடே சுந்தரா
Next Post: பாலிவுட் நடிகர் அபிசேக் பச்சன் வழங்கும் ப்ரைம் வீடியோவின் ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’

Related Posts

Chandini Tamilarasan-indiastarsnow சாந்தினி தன் திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை தனி இடம் உண்டு. Cinema News
ajith_indiastarsnow.com இயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை Cinema News
ஆப் கொடுக்கும் ஆச்சரியம். ஆப் கொடுக்கும் ஆச்சரியம்..; அரசு நிர்ணயித்த கட்டணத்தில் ஆட்டோ சவாரி.. Cinema News
பிரைம் வீடியோ ஷாஹித் கபூர் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ராஜ் & டிகேயின் ஃபார்ஸி, கிரைம் த்ரில்லர் திரைப்படத்தை பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியிடுகிறது Cinema News
துரிதம் படத்திற்கு வழிகாட்டிய வலிமை பட இயக்குனர் துரிதம்’ படத்திற்கு வழிகாட்டிய வலிமை பட இயக்குனர் Cinema News
PRESENTING THE EXCITING TRAILER OF STAR STUDIOS AND JUNGLEE PICTURES' BABLI BOUNCER, RELEASING ON 23rd SEPTEMBER ON DISNEY+ HOTSTAR ! PRESENTING THE EXCITING TRAILER OF STAR STUDIOS AND JUNGLEE PICTURES’ BABLI BOUNCER, RELEASING ON 23rd SEPTEMBER ON DISNEY+ HOTSTAR ! Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme