Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

IIFA வீக் எண்ட் 2022, 22வது பதிப்பில் பிரைம் வீடியோ இன்று அறிவித்தது

IIFA வீக் எண்ட் 2022, 22வது பதிப்பில் பிரைம் வீடியோ இன்று அறிவித்தது

Posted on June 3, 2022 By admin

பிரைம் வீடியோ தமிழ் ஒரிஜினல் தொடர், சுழல் – தி வோர்டெக்ஸின் உலகளாவிய பிரீமியரை அபுதாபியில் நடைபெற்று வரும் IIFA வீக் எண்ட் 2022, 22வது பதிப்பில் பிரைம் வீடியோ இன்று அறிவித்தது
இந்த தொடர் ஜூன் 17 ஆம் தேதி பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் திரையிடப்படும்
புஷ்கர் மற்றும் காயத்ரி எழுதி படைத்துள்ள சுழல் – தி வோர்டெக்ஸ் தொடரில் ராதாகிருஷ்ணன் பார்த்திபனுடன் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மா மற்றும் அனுசரண்.எம் இயக்கத்தில் வெளிவரும் சுழல் – தி வோர்டெக்ஸ் தொடர், தமிழ், ஹிந்தி,கன்னடம், மலையாளம் தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிகளுக்கு மேலாக பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஜப்பானிய மொழி, போலிஷ், போர்த்துகீசியம், காஸ்டிலியன் ஸ்பானிஷ், லத்தீன் ஸ்பானிஷ், அரபு மற்றும் துருக்கிய மொழி போன்ற கூடுதல் வெளிநாட்டு மொழிகளில் டயலாக் உடன் வெளிவரும் முதல் தொடராகும்.
ஜூன் 17 ஆம் தேதி அன்று பிரைம் வீடியோவில் சுழல் – தி வோர்டெக்ஸ் வெளியிடப்படும் என புஷ்கர் & காயத்ரியுடன் இணைந்து அமேசான் பிரைம் வீடியோவின் இந்தியா ஒரிஜினல்ஸ், தலைவர் அபர்ணா புரோஹித் 2022 IIFA வீக்எண்டில், அறிவித்தார்.

சமீபத்திய மற்றும் பிரத்யேகத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, Amazon Originals, Amazon Prime Music மூலம் விளம்பரமில்லா மியூசிக், இந்தியத்தயாரிப்புகளின் மிகப் பெரிய கலெக்ஷனின் இலவச விரைவான டெலிவரி, சிறந்த டீல்களுக்கு முன்கூட்டிய அணுகல், வரம்பற்ற வாசிப்புக்கு PRIME Reading மற்றும் மொபைல் கேமிங் உள்ளடக்கம் கொண்ட PRIME Gaming இவை அனைத்தும் ஆண்டுக்கு ரூ. 1499 என்ற கட்டணத்தில் Prime மெம்பர் சந்தாவில் கிடைக்கிறது. Prime Video மொபைல் பதிப்பிற்குச் சந்தா செலுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் இத் தொடரைக் கண்டு ரசிக்க முடியும். Prime Video மொபைல் பதிப்பு Airtel ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்குத் தற்போது கிடைக்கக்கூடிய ஒற்றைப் பயனர், மொபைல் மட்டுமே திட்டமாகும்.

அபுதாபி, 3 ஜூன், 2022: அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் தற்போது நடைபெற்று வரும் IIFA வீக்கெண்ட் 2022-இல் தமிழில் எடுக்கப்பட்ட அதன் முதல் லாங் ஃபார்ம் ஸ்கிரிப்ட் ஒரிஜினல் தொடரான சுழல்- தி வொர்டெக்ஸின் உலகளாவிய பிரீமியரை பிரைம் வீடியோ இன்று அறிவித்தது. டிடெக்டிவ் தொடரான சுழல் – தி வோர்டெக்ஸ், புஷ்கர் மற்றும் காயத்ரியால் படைக்கப்பட்டுள்ளது. இயக்குனர்கள் பிரம்மா மற்றும் அனுசரண்.எம் இத்தொடரை இயக்கியுள்ளனர். இதில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி மற்றும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திரக் குழுவினர் முக்கிய கதாப்பாத்திரங்களில் பங்கேற்றுள்ளனர். இது எட்டு. எபிசோட்கள் கொண்ட தொடராக வெளிவருகிறது. இந்த க்ரைம் த்ரில்லர், இந்தியாவின் தென்பகுதியில் உள்ள ஒரு சிறிய நகரத்திலிருந்து காணாமல் போன பெண் குறித்த விசாரணையை மையமாகக் கொண்டுள்ளது. தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஜப்பானிய மொழி, போலிஷ், போர்த்துகீசியம், காஸ்டிலியன் ஸ்பானிஷ் லத்தீன் ஸ்பானிஷ், அரபு மற்றும் துருக்கிய. போன்ற வெளிநாட்டு மொழிகளில் டயலாக்குடனும், அத்துடன் சீனம், செக், டேனிஷ், டச்சு, பிலிப்பைன்ஸ், ஃபினிஷ், கிரேக்கம், ஹீப்ரு, ஹங்கேரியன், இந்தோனேஷியன், கொரியன், மலாய், நார்வேஜியன் போக்ம், ருமேனியன், ரஷியன், ஸ்வீடிஷ், தாய், உக்ரேனிய மற்றும் வியட்நாமிய மொழி உள்ளிட்ட பல வெளிநாட்டு மொழிகளில் சப்டைட்டில்களுடன் வெளிவரும் முதல் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பிரைம் மெம்பர்கள் ஜூன் 17 முதல் சுழல் – தி வோர்டெக்ஸைப் பார்க்க முடியும்.

இந்தத் தொடரின் உலகளாவிய பிரீமியர் குறித்து IIFA வீக் எண்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமேசான் பிரைம் வீடியோவின் இந்தியா ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோஹித், இத்தொடரைப் படைத்த, புஷ்கர் மற்றும் காயத்ரி, இயக்குநர்கள் பிரம்மா மற்றும் அனுசரண். எம் மற்றும் இத் தொடரின் முன்னணி நடிகர்கள் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் இணைந்து அறிவித்தனர். இப்புதிர் நிறைந்த கதை குறித்த ஒரு முன்னோட்டத்தை IIFA ராக்ஸ் நிகழ்வில் முன்னணி நடிகர்கள் தங்களது அற்புதமான நடிப்பின் மூலம் பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்தினர்.

“எங்களின் முதல் தமிழ் ஸ்கிரிப்ட் அமேசான் ஒரிஜினல் தொடரான சுழல் – தி வோர்டெக்ஸ், சஸ்பென்ஸ் நிறைந்த வலுவான உணர்ச்சிக் கோர்வையுடன் கூடிய தொடராகும். இது உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அமேசான் பிரைம் வீடியோவின் இந்தியா ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோஹித் கூறினார். அவர் மேலும் கூறுகையில் “இன்று பார்வையாளர்கள் இட மற்றும் மொழிகளின் எல்லைகளுக்கு அப்பால், நிகழ்ச்சியின் உண்மையான உள்ளடக்கத்தை ஆர்வத்துடன் வரவேற்க தயாராக இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். எனவே, உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்காக பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் சுழல் – தி வோர்டெக்ஸ் தொடரை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோருடன் இது ஒரு மகிழ்ச்சியான ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பாகும், மேலும் பிரைம் வீடியோவில் சுழல் – தி வோர்டெக்ஸின் உலகளாவிய பிரீமியரை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி யடைகிறோம்.” என்றார்.

இத்தொடர் குறித்து பேசிய புஷ்கர் மற்றும் காயத்ரி, “பொழுதுபோக்கு என்பது மொழிக்கு அப்பாற்பட்டது என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம். பார்வையாளர்கள், இன்று உலகம் முழுவதிலுமிருந்து நல்ல கதைகளைக் கேட்கத் தயாராக இருக்கிறார்கள். அமேசானில் ஸ்ட்ரீமிங் ஆகும் சுழல் – தி வோர்டெக்ஸ் மூலம் நம் நாட்டின் சிறந்த உள்ளடக்கத்தை வெளிநாடுகளுக்கும் எடுத்துச் செல்லும் சிறந்த தொடக்கமாக அமைந்துள்ளது. மேலும், IIFA போன்ற உலகளாவிய நிகழ்வில் இத்தொடரை வெளியிடும் வாய்ப்பைப் பெறுவது உண்மையிலேயே ஒரு கனவு நனவானது என்றே கூறலாம். அமேசான் பிரைம் வீடியோவிற்கும், IIFA குழுவிற்கும் இந்த சம்மதத்துக்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மர்மம் நிறைந்த இக்கதை பார்வையாளர்களை இருக்கைகளின் விளிம்பில் வைத்திருக்கும். இயக்குநர்கள் பிரம்மா மற்றும் அனுசரண். எம் கதையின் தீவிரத்தைப் பராமரிப்பதில் மகத்தான பணியைச் செய்துள்ளனர். மேலும் எங்களின் அற்புதமான நடிகர்கள் குழு, அவர்களின் ஆற்றல் நிரம்பிய நடிப்பால் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.” என்றார்கள்.

Cinema News Tags:22வது பதிப்பில் பிரைம் வீடியோ இன்று அறிவித்தது, சுழல் – தி வோர்டெக்ஸின் உலகளாவிய பிரீமியரை அபுதாபியில் நடைபெற்று வரும் IIFA வீக் எண்ட் 2022, பிரைம் வீடியோ தமிழ் ஒரிஜினல் தொடர்

Post navigation

Previous Post: அனைவருக்கும் வணக்கம் என் பெயர் Praveen. தற்பொழுது AHA tamil OTT-ல் ரிலீசாகி நல்ல விமர்சனங்களை
Next Post: நெஞ்சுக்கு நீதி திரைப்பட வெற்றி கொண்டாட்டம் !

Related Posts

தனது சம்பளத்தை குறைத்து கொண்டார் நடிகை காஜல் அகர்வால் தனது சம்பளத்தை குறைத்து கொண்டார் நடிகை காஜல் அகர்வால் Cinema News
Theerpukkal Virkapadum Audio and Trailer Launch celebrity Speech Theerpukkal Virkapadum Audio and Trailer Launch celebrity Speech Cinema News
பிரியா பவானி சங்கர் ஏன் என்னுடன் நடிக்க பயந்தார் – எஸ்.ஜே.சூர்யா Cinema News
கமல்ஹாசன் 30 வினாடி பேசுனதை 3 நாளா பேசிக்கிட்டுருக்கோமே. Cinema News
நடிகை பார்வதி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார் தனுஷின் ‘மரியான்’ பட நடிகை Cinema News
அஞ்சலியைத்தான் விக்னேஷ் சிவன் கண்கள் முழுக்க முழுக்க அஞ்சலியைத்தான் ஃபோகஸ் செய்ய ?? Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme