Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் Praveen. தற்பொழுது AHA tamil OTT-ல் ரிலீசாகி நல்ல விமர்சனங்களை

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் Praveen. தற்பொழுது AHA tamil OTT-ல் ரிலீசாகி நல்ல விமர்சனங்களை

Posted on June 3, 2022 By admin

பெற்றுக்கொண்டிருக்கும் “போத்தனூர் தபால் நிலையம்” திரைப்படத்தின் இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர்.
என்னைப் பற்றி சதீஷ் எனும் நபர் சோசியல் மீடியாவில் ஆதாரமின்றி அவதூறு பரப்பி வருவதை கண்டு மிகவும்
மன வேதனைக்கு உள்ளானேன். 2015 இல் இந்த படத்தின் Pre-production வேலைகள் நடந்து கொண்டிருக்கும்பொழுது
என் படத்தின் ஆர்ட் டைரக்க்ஷன் வேலைகளை செய்து தருவதாக என்னை அணுகினார் சதீஷ். இந்த படத்திற்கு
குறைந்த முதலீட்டில் தரமான செட்டுகளை அமைத்து தருவதாக உறுதி கூறி என்னிடமிருந்து ஒரு லட்ச ரூபாயை
ஜனவரி 2015ல் முன்பணமாக பெற்றார். சில மாதங்களுக்குப் பிறகு படத்தின் முதல் பெரிய Setஆன போஸ்ட் ஆபீஸ் செட் அமைக்கும் பணி துவங்கியது. ஆரம்பம் முதலே மிகவும் தாமதமாகவும் மற்றும் தறமற்றவாரே அந்த போஸ்ட் ஆபீஸ் செட்டுகளை அமைத்துக் கொண்டு இருந்தார். பிறகுதான் தெரியவந்தது நான் கொடுத்த முன்பணத்தை செலவு செய்துவிட்டு இப்போது கையில் காசு இல்லாமல் இருப்பதை வைத்து ஒப்பேற்றி கொண்டிருக்கிறார் என்று. இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் வர 25% சதவிகிதம் கூட முடியாத அந்த செட்டில் இருந்து எங்கள் முன் பணத்தையும் திருப்பித் தராமல் வெளியேறிவிட்டார். பலமுறை தொலைபேசியில் அழைத்துப் பேசியும் பலனில்லை. அதன் பிறகு நானும், என் டீமும் சேர்ந்து மிகுந்த சிரமப்பட்டு அந்த செட்டை உருவாக்கி ஷூட்டிங் நடத்தி முடித்தோம். படம் நன்றாக வந்து
கொண்டிருப்பதை கேள்விப்பட்ட சதீஷ், போஸ்ட் ஆபீஸ் ஷெட்யூல் கடைசி நாளில் என்னிடம் வந்து நடந்ததற்கு மன்னிப்பு
கேட்டு, அடுத்த செட்டை தரமாக அமைத்து தருவதாகவும் அதற்கு முன்பணம் வேண்டும் என்றும் கேட்டார். அவரது நோக்கம்
பணத்தைப் பெறுவதில் மட்டுமே இருப்பதை அறிந்து கொண்ட நான், ஏமாற தயாராக இல்லை இனி நீங்கள்
இங்கு வர வேண்டாம் என்று கடுமையாக கண்டித்து அனுப்பிவிட்டேன். அதன் பிறகு படத்தில் வரும் அனைத்து
செட்டுகளையும் நானும் எனது டீமும் சேர்ந்து மிகக் கடுமையான உழைப்பால் உருவாக்கியது. இப்போது அதற்கான
அங்கீகாரம் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. இந்தப் படத்தின் ஆர்ட் டைரக்க்ஷனுக்கும் சதீஷ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அதன் பிறகுஆறு ஆண்டுகாலம் என்னுடன் எந்த தொடர்பிலும் இல்லாத அவர் படம் ரிலீஸ் ஆகி மக்களால் அங்கீகரிக்கப்படுவதை அறிந்தவுடன் நடக்காத ஒரு சம்பவத்தை நடந்ததாகக் கூறி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை என் மீது வைக்கிறார். அனைத்து மனிதர்களும் சமம் என்று நினைப்பவன் நான்.

இது என்னுடன் பழகியவர்களுக்கு நன்கு தெரியும். அப்படிப்பட்ட நான் ஒரு போதும் அம்பேத்கர் படத்தை அவமரியாதை
செய்திருக்க வாய்ப்பே இல்லை. நாங்கள் அம்பேத்கர் படத்தை குப்பையில் போட்டு இருந்ததாக அவர் கூறுவது
தன்மீது மீடியாவின் கவனம் திரும்ப வேண்டும் என்பதற்காக அவர் கூறும் ஆதாரமற்ற பொய்களே.
தயவுசெய்து பத்திரிக்கை நண்பர்களும், எனது நலம் விரும்பிகளும் இந்த ஆதாரமற்ற பொய்களை
நம்ப வேண்டாமென்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Cinema News Tags:அனைவருக்கும் வணக்கம் என் பெயர் Praveen. தற்பொழுது AHA tamil OTT-ல் ரிலீசாகி நல்ல விமர்சனங்களை

Post navigation

Previous Post: Pothanur Thabal Nilayam produced by Passion Studios
Next Post: IIFA வீக் எண்ட் 2022, 22வது பதிப்பில் பிரைம் வீடியோ இன்று அறிவித்தது

Related Posts

தென்னிந்திய பிரபல சண்டை இயக்குநர் பொது இடத்தில் தற்கொலைக்கு தர்கொலை முயற்ச்சி தென்னிந்திய பிரபல சண்டை இயக்குநர் பொது இடத்தில் தற்கொலைக்கு முயற்ச்சி Cinema News
மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ் இசை வெளியீடு மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ் இசை வெளியீடு Cinema News
Actor Naga Chaitanya’s ‘Custody’ Teaser Revealed Actor Naga Chaitanya’s ‘Custody’ Teaser Revealed Cinema News
Riythvika-hot-vijay sethupathi-www.indiastarsnow (2) நடிகர் விஜய் சேதுபதி புதிய படம் ஒன்றில் ரித்விகா நடிக்க இருக்கிறார் Cinema News
நயன்தாரா நடிப்பில், இடைவேளை இல்லாத முதல் தமிழ்ப்படம் ‘கனெக்ட்.’ டிசம்பர் 22-ல் ரிலீஸ்! நயன்தாரா நடிப்பில், இடைவேளை இல்லாத முதல் தமிழ்ப்படம் ‘கனெக்ட்.’ டிசம்பர் 22-ல் ரிலீஸ்! Cinema News
ருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய்யின் ஆடிட்டர் விசாரணைக்கு ஆஜர் நடிகர் விஜய்யின் ஆடிட்டர் விசாரணைக்கு ஆஜர் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme