Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

மாயோன் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு*

14 வருடங்களுக்கு பிறகு கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும் என கமல் பேசிய வசனத்திற்கு பதில் கிடைத்திருப்பதாக மாயோன் படக்குழு தெரிவித்துள்ளது

Posted on June 2, 2022 By admin

தமிழ் சினிமாவில் சிபி ராஜ், தன்யா ரவிச்சந்திரன், கே எஸ் ரவிக்குமார், ராதாரவி உட்பட பல நடிகர் நடிகைகள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாயோன். படத்தை டபுள் மீனிங் புரடக்சன் நிறுவனத்தின் அருண்மொழி மாணிக்கம் அவர்கள் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தன. படத்தின் டீசர் மிகவும் வித்தியாசமான முறையில் பார்வையற்றவர்களுக்கு பிரத்தியேகமான வடிவமைப்பில் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் திரையரங்குகளில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் விக்ரம் படத்துடன் ஜூன் மூன்றாம் தேதி முதல் வெளியாகும் என அறிவித்துள்ளனர். 500க்குமேலான திரையரங்குகளில் விக்ரம் படத்துடன் மாயோன் படத்தின் டிரெய்லர் வெளியாகிறது.

மேலும் இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் தசாவதாரம் படத்தில் கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும் என கமல் வசனம் பேசி இருந்த நிலையில் அவருடைய அந்த வசனத்திற்கு 14 வருடங்களுக்கு பிறகு மாயோன் படத்தில் பதில் கிடைத்திருப்பதாக கூறியுள்ளனர்.

இதனால் மாயோன் திரைப்படம் சொல்ல வருவது என்ன? படத்தில் அப்படி என்ன பதில் இருக்கிறது என்பது குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆவலும் அதிகரித்துள்ளது.

“மாயோன்” திரைப்படம் ஜூன் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Cinema News Tags:14 வருடங்களுக்கு பிறகு கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும் என கமல் பேசிய வசனத்திற்கு பதில் கிடைத்திருப்பதாக மாயோன் படக்குழு தெரிவித்துள்ளது, கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும்" 14 வருடங்களுக்குப் பிறகு கமலின் கேள்விக்குக் கிடைத்த பதில்.. மாயோன் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு*, மாயோன் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு*

Post navigation

Previous Post: பிரசன்னா- ரெஜினா கசாண்ட்ரா – அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகியுள்ள ஃபிங்கர்டிப் தொடரின் இரண்டாவது சீசன் ஜூன் 17 முதல் ஜீ5-ல் ஒளிபரப்பாகிறது.
Next Post: ஆஹா தமிழ் மற்றும் கூகுள் குட்டப்பாவுடன் கரம் கோர்க்கும் பூர்விகா

Related Posts

ஷாந்தனு நடிக்கும் 'இராவண கோட்டம் ஷாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’! Cinema News
நடிகர் சிலம்பரசனை சென்னையில் சந்தித்தார் நடிகர் ராம் பொத்தினேனி, நடிகர் சிலம்பரசனை சென்னையில் சந்தித்தார் Cinema News
ஷூட் தே குருவி திரை விமர்சனம்-indiastarsnow.com ஷூட் தி குருவி திரை விமர்சனம் Cinema News
Naturals Signature Salon 716th outlet launched by Padmasree Palam Kalyanasundaram, C.K.Kumaravel, Veena, Shanmugapriya & Sreenivasan at Ashok Nagar Cinema News
புதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா-indiastarsnow.com புதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா Cinema News
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம், சேரன் தான் வெளியேற பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம், சேரன் தான் வெளியேற?? Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme