Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பிரசன்னா- ரெஜினா கசாண்ட்ரா - அபர்ணா பாலமுரளி

பிரசன்னா- ரெஜினா கசாண்ட்ரா – அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகியுள்ள ஃபிங்கர்டிப் தொடரின் இரண்டாவது சீசன் ஜூன் 17 முதல் ஜீ5-ல் ஒளிபரப்பாகிறது.

Posted on June 2, 2022 By admin

சென்னை- ஜூன் 01, 2022:
ZEE5 பார்வையாளர்களை மகிழ்விக்க மற்றொரு ஒரிஜினல்களுடன் மீண்டும் வந்துள்ளது. “ஃபிங்கர்டிப்” க்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பை தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் தற்போது இரண்டாவது சீசனுடன் மீண்டும் வந்துள்ளனர், இந்த இரண்டாவது சீசன் ஜூன் 17, 2022 முதல் ஜீ5 தளத்தில் ஒளிபரப்பாகிறது.

இந்த தொடரில் பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா, அபர்ணா பாலமுரளி, வினோத் கிஷன், கண்ணா ரவி மற்றும் ஷரத் ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, ராஜா கிருஷ்ணமூர்த்தி (கிட்டி), மாரிமுத்து மற்றும் ஹரிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஃபிங்கர் டிப் இரண்டாவது சீசன் ஒரு க்ரைம் த்ரில்லர் தொடர் ஆகும். டிஜிட்டல் தளம் மற்றும் டிஜிட்டல் யுகத்தின் சக்தி, நம் விரல் நுனியில் எப்படி இருக்கிறது என்பதைச் சுற்றி வரும் ஒரிஜினல் சீரிஸ் இது. டிஜிட்டல் உலகில் முக்கியமாக இருக்கும் ஆபத்துகளை இந்தக் கதை ஆராய்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த தொடர் ஒருபக்க சார்பான கருத்துடன் மட்டும் நிற்காமல், தொழில்நுட்பம் என்பது கத்தி போன்ற ஒரு கருவி என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது, மேலும் அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே அதன் விளைவுகள் இருக்கும். மற்ற தொழில்துறை அல்லது புதுமையான கண்டுபிடிப்புகளைப் போலவே, ‘டிஜிட்டல் தளம்’ என்பது தனிநபர்களின் கருத்துகளின் அடிப்படையில் எண்ணற்ற வரையறைகளைக் கொண்டுள்ளது என்பதை இந்த தொடர் சொல்கிறது.

ஃபிங்கர்டிப் சீசன் 2 , ஆறு கதாபாத்திரங்களின் வாழ்க்கையை மையமாக கொண்டது. சிலர் வேட்டையாடுபவர்கள் மற்றும் சிலர் டிஜிட்டல் குற்றங்கள் அல்லது டிஜிட்டல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். இக்கதை ஹைப்பர்லிங்க் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது.

ஷிவாவகர் ஸ்ரீனிவாசன் ஃபிங்கர்டிப் இரண்டாவது சீசனை இயக்கியுள்ளார், பிரசன்னாவின் ஒளிப்பதிவு, தீன தயாளனின் இசை, மற்றும் G.K. பிரசன்னா உடைய படதொகுப்பில் இந்த தொடர் உருவாகியுள்ளது. Film Crew Productions சார்பில் அருண் குமார் மற்றும் ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஆகியோர் ஃபிங்கர்டிப் சீசன் 2 தொடரை தயாரித்துள்ளனர்.

ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட், தெற்கு தலைமை கிளஸ்டர் அதிகாரி, சிஜு பிரபாகரன் கூறுகையில்…

ஜீ5 இல், அடுத்தடுத்து வரவிருக்கும் எங்களின் பிராந்திய கதைகளினால், நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். எங்களின் சமீபத்திய ஒரிஜினல் தொடர், விலங்கு மற்றும் அனந்தம் ஆகியவை எங்கள் பார்வையாளர்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்றன, மேலும் இந்த தொடர்கள் ஓடிடி தளங்களில் ஒரு புதிய புரட்சியினை ஏற்படுத்தியுள்ளது. வரும் மாதங்களில் ஒரிஜினல் படைப்புகளின் சிறந்த வரிசையை நாங்கள் கொண்டுள்ளோம். ஃபிங்கர்டிப் சீசன் 2 எங்களின் அடுத்த தொடராக இருக்கும், இது நம்மையும் டிஜிட்டல் உலகத்தையும் சுற்றி பின்னப்பட்ட கதை, மிக சுவாரஸ்யமான வகையில் சொல்லும் டெக் த்ரில்லர் ஆகும், என்றார்.

ஜீ5 குறித்து:

ஜீ5 என்பது இந்தியாவின் மிக இளைய ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் தேடும் பொழுதுபோக்கு அம்சங்களை, பல மொழிகளில் தரும் கதைசொல்லி. ஜீ5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) இல் இருந்து உருவான ஓடிடி தளம். இது பார்வையாளர்களுக்கு மிகவும் விருப்பமான ஓடிடி தளம் மற்றும் 3,500 திரைப்படங்கள், 1,750 தொடர்கள், 700 ஒரிஜினல்ஸ் மற்றும் 5 லட்சம் மணிநேரத்திற்கும் அதிகமான உள்ளடக்கங்களை கொண்ட மிகப்பெரிய நூலகம் ஆகும். 12 மொழிகளில் கதைக்கருக்களை ஜீ5 வழங்கிவருகிறது( ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடா, மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி, மற்றும் பஞ்சாபி). இதில் சிறந்த ஒரிஜினல்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சி, Edtech, Cineplays, செய்திகள், நேரலை தொலைகாட்சி மற்றும் உடல்நலம் & வாழ்க்கை முறை சம்பந்தமான உள்ளடக்கங்களும் இதில் அடங்கும்.
உலகளாவிய தொழில்நுட்ப வல்லுநர்கள் கூட்டமைப்பில் உருவான வலுவான ஆழமான தொழில்நுட்பங்கள், ஜீ5 தங்குதடையில்லா மற்றும் தனிப்பட்ட உள்ளடங்களை 12 மொழிகளிலும், பல சாதனங்களிலும், பல்வேறுபட்ட நில அமைப்புகளிலும் தருவதற்கு உதவுகிறது.

Cinema News Tags:பிரசன்னா- ரெஜினா கசாண்ட்ரா - அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகியுள்ள ஃபிங்கர்டிப் தொடரின் இரண்டாவது சீசன் ஜூன் 17 முதல் ஜீ5-ல் ஒளிபரப்பாகிறது.

Post navigation

Previous Post: மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி இணைந்து நடிக்கும் ” பகாசூரன் ” படத்தின் டைட்டில் லுக் வெளியானது
Next Post: 14 வருடங்களுக்கு பிறகு கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும் என கமல் பேசிய வசனத்திற்கு பதில் கிடைத்திருப்பதாக மாயோன் படக்குழு தெரிவித்துள்ளது

Related Posts

பத்திரிகை மற்றும் ஊடகங்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்த லவ் டுடே குழு Cinema News
நரசிம்மன் சம்பத், பார்ட்னர் & பிரனவ் குமார் மைசூர், பார்ட்னர் NSK அட்டர்னிஸ். Herewith i forward the press release pertaining to “Music Label’s Counsel” Cinema News
மக்களவை தேர்தல் மாதிரி நினைக்காதீங்க...திமுகவிற்கு சவால் விடும் எடப்பாடி..! மக்களவை தேர்தல் மாதிரி நினைக்காதீங்க…திமுகவிற்கு சவால் விடும் எடப்பாடி..! Cinema News
தனுஷ் நடிப்பில் கர்ணன் குறித்து ரெண்டே வார்த்தையில் விஜய்சேதுபதி விமர்சனம்-indiastarsnow.com தனுஷ் நடிப்பில் கர்ணன் குறித்து ரெண்டே வார்த்தையில் விஜய்சேதுபதி விமர்சனம் Cinema News
Bringing 100 musicians together, Simon King decodes the beautiful fusion of local Tamil choir and the Budapest orchestra for the background music of Vadhandhi- The Fable of Velonie Cinema News
bigg-boss-Cheran_indiastarsnow.com பிக்பாஸ் வீட்டில் சேரனை கண்டித்த மகன்!!! Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme