Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசிப் பாடல் ‘விஸ்வரூப தரிசனம்' சிம்போனியில் வெளியீடு

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசிப் பாடல் ‘விஸ்வரூப தரிசனம்’ சிம்போனியில் வெளியீடு

Posted on June 2, 2022 By admin

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசிப் பாடல் ‘விஸ்வரூப தரிசனம்’ சிம்போனியில் வெளியீடு

எந்த இந்திய மொழியிலும் இதுவரை ஆராயப்படாத, தனிப்பகுதியாக விளங்கும் ஆன்மீக சிந்தனை வடிவம். எங்கும் நிறைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணனின் விஸ்வரூபத்தின் பிரம்மாண்டத்தை குருஷேத்திர யுத்த பூமியில் ஸ்ரீ கிருஷ்ண பெருமான் அர்ஜீனனுக்கு, அளித்த பிரமாண்ட தரிசனத்தின் வடிவாம்சமும், விளக்கமும் ஆகும் இந்த ‘விஸ்வரூப தரிசனம்’ என்ற 30 நிமிட பாடல் ஆல்பம். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவருடைய இசைக் கலை பங்களிப்பு மற்றும் புகழ் மிகுந்த இசைப் பயணம் என்னும் மகுடத்தில், விலைமதிப்பிட முடியாத உயர்ந்த வைரக்கல் போன்றது இந்த பிரமாண்டமான பாடல் ‘விஸ்வரூப தரிசனம்’ இந்தப் பாடலை அமரர் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடவேண்டும் என்பது இறைவனின் கட்டளை போலும்! என்று இந்தப் பாடலைத் தயாரித்து வழங்கிய பாடகர் ஸ்ரீஹரி கூறுகிறார்:

“சிம்போனி நிறுவனத்தின் சார்பில் 500 ஒலி மற்றும் காணொலி ஆல்பங்களை வெளியிட்டுள்ளோம். இவர் மேலும் கூறுகிறார்: மார்ச் 2020 கோவிட் நோய் பரவலுக்குப் பிறகு (முதல் அலை) இந்தப் பாடலுக்கான இசை அமைப்பை திரு.HMV ரகு சார் மற்றும் பாடல் வரிகளை குருநாத சித்தர் அவர்கள் எழுதி முடித்தபின், இந்தப் பாடலை, பக்தி உணர்ச்சி பாவங்களை சிறந்த முறையில் வெளிப்படுத்தவல்ல சிறந்தகுரலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எண்ணினேன். திரு. S.P.பாலசுப்ரமணியம் அவர்கள் தான் பொருத்தமானவர் என உணர்ந்து முடிவு செய்தேன். இந்தப் பாடலுக்கான பிண்ணனி இசை தயார் நிலையில் இல்லாதிருந்தும், திரு.SPB அவர்கள் குரலில் இந்தப் பாடலை தாமதம் இன்றி உடனே ஒலிப்பதிவு செய்து முடிக்க விரும்பினேன்.

இந்த நிலையில் பெருமதிப்பிற்குரிய 86 வயதான நடமாடும் இசை நூலகம் திரு.K.S.ரகுநாதன் அவர்களிடம் இசை இல்லாமல் SPB அவர்களைப் பாடவைத்துப் பதிவு செய்ததற்கான வலுவான காரணங்களை எதுவும் என்னால் கூற இயலவில்லை. அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும் மற்றும் நான் அவருக்க ஒரு செல்லப்பிள்ளை போல் என்பதால், திரு.S.P.பாலசுப்ரமண்யம் பாடவிருகும் பாடலை பின்னணி இசை இல்லாமல் TEMPO CLICK TRACK என்னும் நுணுக்கத்தைப் பயன்படுத்தி ஒலிப்பதிவு செய்ய உற்சாகமாக சம்மதித்தார். திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்கள் “இந்தப் பாடலின் சிந்தனை வடிவத்தையும், பாடல் வரிகளையும் வெகுவாக ரசித்து மகிழ்ந்தார். இந்நாள் வரை, இத்தகைய சிந்தனை வடிவத்தையும், பாடல் வரிகளையும், இசை அமைப்பையும் எந்த ஒரு இந்திய மொழியிலும் அமைக்க முயற்சித்ததாகத் தெரியவில்லை” என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீஹரி கூறுகிறார்: எல்லாம் இறைவன் ஆணையில், நடக்கின்ற செயல்! இந்தப் பாடல் SPB அவர்கள் பாடி மிகச்சிறந்ததாக வெளிவரவேண்டுமென்பது இறைவனின் திருவுள்ளம்!

நான் மட்டும் அன்று அவர் பாடிய இந்தப் பாடலை அடம் பிடித்து. பின்னணி இசை இல்லாமல் பதிவு செய்யாமல் இருந்திருந்தால் இன்று இந்தப் பாடலை நாம் இழந்திருப்போம். அவருடைய அற்புதமான. வசீகரமான. தெய்வீகமான இனிமையான மாயக்குரலை இந்த அற்புத படைப்பு இழந்திருக்கும். திரு.S.P.பாலசுப்ரமண்யம் அவர்கள் பாடிய கடைசிப் பாடலான விஸ்வரூப தரிசனம் என்னும் தலைப்பில் வந்த இந்த 30 நிமிட பாடலை சிம்போனி வெளியிடுவதில் பெருமையும். பெருமகிழ்ச்சியும் அடைகிறது. இணையற்ற விதத்தில் இந்தப் பாடலை திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய விதம், நம்மை உருகவும் நெகிழவும் வைக்கிறது. உலகெங்கிலும் உள்ள. SPB அவர்களின் ரசிகர்களுக்கு இந்தப் பாடலை SPB அவர்களின் கடைசிப் பரிசாக அளிக்கிறோம்

சிறப்புகள்: பாடியவர்: அமரர் திரு S.P.பாலசுப்ரமண்யம் இசை: திரு K.S.ரகுநாதன் பாடல்: குருநாத சித்தர் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்: ஸ்ரீஹரி கூடுதல் இசை நுணுக்கங்கள்: R.குருபாத் ஒலிப்பதிவு: R.குருபாத் Dolby Atmos கலவை: ராகுல் ராமச்சந்திரன்

Cinema News Tags:எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசிப் பாடல் ‘விஸ்வரூப தரிசனம்' சிம்போனியில் வெளியீடு

Post navigation

Previous Post: ஆஹா தமிழ் மற்றும் கூகுள் குட்டப்பாவுடன் கரம் கோர்க்கும் பூர்விகா
Next Post: இசையின் இறைவன் இசை வெளியீட்டு விழா

Related Posts

கூகுள் குட்டப்பா’ ட்ரைலர் வெளியீடு இளம் இயக்குநர்கள் மூத்த இயக்குநர்களை மதிப்பதில்லை கே எஸ் ரவிக்குமார்!!! Cinema News
Samantha is a very dedicated & hard working actress - Unni Mukundan Samantha is a very dedicated & hard working actress – Unni Mukundan Cinema News
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது Cinema News
Mega Power Star Ram Charan, Buchi Babu Sana, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas, Mythri Movie Makers, Sukumar Writings, Pan India Film Announced Mega Power Star Ram Charan, Buchi Babu Sana, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas, Mythri Movie Makers, Sukumar Writings, Pan India Film Announced Cinema News
Ranina Reddy turns to an Independent Music Artist with a beautiful song "Mannipu" மன்னிப்பு’ என்ற அழகான பாடல் மூலம், சுயாதீன இசைக் கலைஞராக உருவெடுத்துள்ளார் ரனினா ரெட்டி ! Cinema News
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ‘சிக்லெட்ஸ்’ பட ஃபர்ஸ்ட் லுக் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme