Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் ‘தி வாரியர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !

நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் ‘தி வாரியர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !

Posted on May 30, 2022 By admin

உஸ்தாத் ராம் பொதினேனி, இயக்குநர் N.லிங்குசாமி இயக்கத்தில், இருமொழி ஆக்‌சன் என்டர்டெய்னரான ‘தி வாரியர்’ மூலம் தனது ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படம் ஜூலை 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தயாரிப்பாளர்களும், இயக்குனரும் தங்களது பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

தயாரிப்பாளர்கள் ராம் பொதினேனியின் ரசிகர்களுக்கு சார்ட்பஸ்டர் பாடல்கள் மற்றும் புதுப்புது அப்டேட்களுடன் விருந்தளித்து வருகின்றனர். இப்படத்தின் புல்லட் பாடல் யூடியூப்பில் மிகப்பெரிய சாதனைகளை படைத்துள்ளது மற்றும் சமீபத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்ட டீசர் ரசிகர்களின் உற்சாகத்தை உயர்த்தியது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பாளர்கள்
புது செய்தியை வெளியிட்டுள்ளனர். இந்த இறுதி கட்ட படப்பிடிப்பில், இயக்குநர் N.லிங்குசாமி நடிகர் ராம் பொதினேனி திரையில் அறிமுகமாகும் மாஸ் காட்சி ஒன்றை படம்பிடித்துள்ளார்.

தயாரிப்பாளர்கள் இந்த செய்தியினை ராம் பொதினேனியின் புதிய போஸ்டரைப் பகிர்ந்து, ரசிகர்கள் அனைவருக்கும் விருந்தளித்துள்ளனர். ஜூலை 14 ஆம் தேதி திரையரங்குகளில் “தி வாரியர்” படத்தை பார்க்கக் காத்திருக்கும் பார்வையாளர்களுக்கு, இந்த பேக் டு பேக் அப்டேட்கள் பெரும் விருந்தாக அமைந்துள்ளது. படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக பல விளம்பர நிகழ்வுகளை நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

ராம் பொதினேனி நடித்துள்ள “தி வாரியர்” பல காரணங்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாகும். ஏனெனில், இளம் தெலுங்கு நடிகர் முதன்முறையாக பிரபல இயக்குனர் N.லிங்குசாமியுடன் ஜோடி சேர்ந்துள்ளார், மேலும் இந்த படம், இருமொழிகளில், தயாராவதுடன், கோலிவுட்டில் ராமின் அறிமுக படமாகவும் அமைந்துள்ளது.

மேலும், ஆதி பினிசெட்டி இதுவரை திரையில் கண்டிராத வகையில் வலுவான வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். இயக்குநர் லிங்குசாமி தனது அசத்தலான மாஸ், கமர்ஷியல் படங்களுக்காக பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் ராம் மற்றும் ஆதி இருவரும் சிறந்த நடிப்பை வழங்குவதில் வல்லவர்கள். இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக (படத்தில் அவரது பெயர் விசில் மகாலட்சுமி) நடிக்க உடன் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது.

“தி வாரியர்” படத்தை மிகப்பெரும் பட்ஜெட்டில் Srinivasaa Silver Screen பேனரில் ஶ்ரீனிவாசா சிட்தூரி தயாரிக்கிறார். பவன்குமார் இப்படத்தை வழங்குகிறார்.

‘தி வாரியர்’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜூலை 14, 2022 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Cinema News Tags:நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் ‘தி வாரியர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !

Post navigation

Previous Post: Two Fascinating Women, One Unforgettable Story
Next Post: Ram Pothineni Starrer ‘The Warriorr’ Shooting Wrapped Up

Related Posts

அஜித்தின் குழந்தைகள் ஷாக் ஆகியுள்ளனராம் அஜித்தின் குழந்தைகள் ஷாக் ஆகியுள்ளனராம் Cinema News
T.ராஜேந்தர் பின்பற்றும் சிம்பு Cinema News
முதன்முறையாக இணையும் ஜீ வி பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் Cinema News
Tughlaq-Durbar-indiastarsnow.com நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகர் பார்த்திபனஅரசியல் கூட்டணி !!!!! Cinema News
'மாயோனைக் காணச் சென்ற ரசிகர்களுக்கு கிடைத்த கிருஷ்ணர் வேட வரவேற்பு மாயோனைக் காணச் சென்ற ரசிகர்களுக்கு கிடைத்த கிருஷ்ணர் வேட வரவேற்பு Cinema News
Riythvika -indiastarsnow.com Here are the latest stills of Golden Girl Riythvika spreading YelLove Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme